Announcement

Collapse
No announcement yet.

seemantham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seemantham.

    28th Apr to 30th April (28/04 to 30/04/2021) No Broadcasting.*
    *01/05/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய சம்ஸ்காரங்களின் அடிப்படையில் சீமந்தோநயனம் என்கின்ற முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்*


    *சீமந்தத்திற்கு சொல்லக்கூடிய மந்திரங்கள் அந்த மந்திரங்கள் எதையெல்லாம் நமக்காக பிரார்த்தனை செய்கின்றது என்பதை பார்த்தோம்.*


    *இந்த சீமந்த முகூர்த்தத்தில் நாம் சொல்லக்கூடிய மந்திரங்களை வேதம் பல இடங்களில் நமக்கு காண்பித்துள்ளது நல்லதொரு வாரிசை நாம் பெறுவதற்காக.*


    *இஷ்டி என்று ஒரு அனுஷ்டானம் இருக்கிறது ஷௌரத்தில். அக்னி ஹோத்திரம் செய்கின்றவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்ய வேண்டும். அமாவாசை மறுநாளும் பவுர்ணமி மறுநாளும் இந்த இஷ்டி என்கின்ற அனுஷ்டானத்தை செய்ய வேண்டும்.*


    *வேதம் இந்த மந்திரத்தை அதில் காண்பிக்கிறது. அந்த இஷ்டி என்கின்ற அனுஷ்டானம் மூன்று பாகமாக இருக்கிறது. முதல் பாகம் அந்த இஷ்டிக்கு தேவையான வஸ்துக்களை சேகரித்துக்கொண்டு வைப்பது. அந்த வஸ்துக்களை பார்த்து பிரார்த்தனை செய்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.*


    *தர்ப்பை சமித்து ஆகுதி கொடுப்பதற்காக நெய் முதலிய வஸ்துக்கள். இரண்டாவது பாகம் அந்த யாகம் செய்யக்கூடிய இடத்தை சுத்தம் செய்வது. மந்திரங்கள் சொல்லி அந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு 3 அக்னிகளை தயார் பண்ணுவது. மூன்றாவது பாகம் தேவதைகளுக்கு ஆகுதிகளை கொடுப்பது. மூன்று அக்னிகளிலும் பிரித்து வேதம் நமக்கு காண்பிக்கிறது.*


    *முதலில் கால தேவதைகளுக்கு ஆகுதிகள் கொடுக்கப்படுகிறது. சூரியன் சந்திரன் அக்னி. பின்பு நாம் உபயோகிக்கக் கூடிய வஸ்துக்களின் தேவதைகளுக்கு ஆகுதியை கொடுத்து, பின்பு பிரதானமாக உள்ள தேவதைகளுக்கு ஆகுதிகள் கொடுக்கப்படும்.*


    *பின்பு தேவ பத்தினிகளுக்கு ஆகுதிகள் கொடுக்கப்படும். இங்கு எஜமானன் யாரென்றால், யாகம் செய்யக்கூடிய தான எஜமானனின் பத்தினிதான் இங்கு எஜமானன்.*


    *அப்படி அவர்களுக்கு கொடுக்கும் போது ஆபஸ்தம்ப மகரிஷி, இந்த மந்திரங்களைச் சொல்கிறார். பிறகு கால தேவதையான, இராகா என்கிற தேவதைக்கு ஆகுதிகளைக் கொடுக்க வேண்டும்.*


    *நல்ல வாரிசை நாம் பெறனும் நல்ல தலைமுறையை நாம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த இராகா என்கின்ற தேவதையை பிரார்த்தனை செய்ய வேண்டும்.*


    *இரண்டாவது சினி வாலி என்கின்ற தேவதைக்கு ஆகுதிகளை கொடுக்கவேண்டும். நல்ல உணவுகள் கிடைப்பதற்கு ஆதாரமாக உள்ள பசுக்கள் சமர்த்திக்காக.*


    *மூன்றாவது குகூகூ என்று தேவதைக்காக ஆகுதி களை கொடுக்க வேண்டும் யாருக்காக என்றால் தேசத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும், தேக ஆரோக்கியத்திற்காக.*


    *அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல வாரிசை கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறது. சீமந்தத்திற்கு சொல்லப்படுகின்ற அதே மந்திரம் தான் இங்கே சொல்லப்படுது.*


    *வேதம் இரண்டு இடத்திலும் அதே மந்திரத்தை காண்பிக்கிறது. ஆகுதி களைக் கொடுத்து முடித்த பிறகு, வேதம் என்கின்ற ஒரு வஸ்து உண்டு.*
    *வேதஹா என்றால் மந்திரங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷத்தை நாம் சொல்கிறோம். நான்கு வேதங்கள் என்று சொல்கிறோம். இதற்குதான் வேதஹா என்ற பெயர்.*


    *வேதம் என்றால் சில இடங்களை சுத்தம் செய்வதற்காக இஷ்டி என்கின்ற அனுஷ்டானத்தில் வைத்துக் கொள்ளக்கூடிய தான ஒரு வஸ்துவிற்கு பெயர்.*



    *தர்பையினால் செய்யப்பட்டிருக்கும். அதை எப்படி செய்ய வேண்டும் என்றால், நுனிதர் பையை எடுத்துக்கொண்டு வந்து, மடித்து கட்ட வேண்டும். இதுபோல் என்றால், வஸ்தஞங்யம், கன்றுக்குட்டி உட்கார்ந்திருக்கும்போது அதனுடைய முன்கால் எப்படி இருக்குமோ, அது போல் மடித்து கட்ட வேண்டும். அது தன்னுடைய முன் காலை எப்படி மடித்து உட்கார்ந்து கொண்டு இருக்குமோ அது போல் வேதம் என்கின்ற இந்த தர்ப்பையை மடித்து கட்ட வேண்டும்.*


    *அந்த வேதத்தை மந்திரங்கள் சொல்லி அந்த எஜமானுடைய பத்தினி, தன்னுடைய தொப்புளில் வைத்து அங்கே வைக்கவேண்டும் ஆஸ்வலாயனர் என்கின்ற மகரிஷி இப்படி காண்பித்திருக்கிறார்.*


    *அப்படி வைத்தால் கர்ப்ப தோஷம் எதுவாக இருந்தாலும் சரியாக போய்விடும். அனைவருக்கும் நல்ல வாரிசுகள் கிடைக்கும். இது அந்த எஜமானனின் மனைவியின் ஆரோக்கியத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை. தேசத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டு தான் அது செய்யப்படுகிறது*


    *ஆகையினாலே தான் அக்னிஹோத்திரம் முதலான ஷௌரத அனுஷ்டானங்கள், கட்டாயம் தேச ஷேமத்திற்காக செய்யப்பட வேண்டும். இப்படி வேதம் அதை வலியுறுத்தி காண்பிக்கிறது நமக்கு. மகரிஷிகளும் காண்பித்துள்ளனர்.*


    *அங்கேயும் இதே மந்திரங்களை சொல்லித்தான் அனுஷ்டானங்கள் செய்யப்படுகின்றன. சீமந்துடு சொல்லப்படக்கூடிய தான மந்திரம் அங்கேயும் உபயோகப்படுகிறது நல்ல வாரிசை பெறுவதற்காக.*


    *இந்த இராக என்கிற தேவதைதான், நமக்கு ஆரோக்கியமாக உள்ள ஒரு குழந்தையை கொடுக்ககூடிய சக்தியைப் பெற்றவள். அதனால் அந்த தேவதையை நாம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த சீமந்த முகூர்த்தத்தை, இந்த இராக என்கின்ற தேவதையை உத்தேசித்து மந்திரங்களைச் சொல்லி சீமந்தம் செய்கிறோம்.*


    *மிகவும் முக்கியமான மந்திரங்கள் சீமந்த த்தில் சொல்லக்கூடியது. மிகவும் அற்புதமான இந்த மந்திரங்களைச் சொல்லி சீமந்தம் செய்ய வேண்டும். பிறகு அங்கு உள்ள அனைவரும் சேர்ந்து, சொல்லக்கூடிய தான் ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரம் சீமந்தத்தில் மட்டும்தான் சொல்லப்படுகிறது. இந்த மந்திரம் என்னவெல்லாம் பிரார்த்தனை செய்கிறது என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X