*30/03/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சீமந்தம் என்கின்ற ஒரு சம்ஸ்காரத்தின் முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.*
*இந்த சீமந்தம் என்பது மிக மிக முக்கியம். வேதம் மகரிஷிகள் புராணம் இந்த மூன்றும் சேர்ந்துதான் சீமந்த்தை காண்பிக்கின்றன. நாமும் அப்படித்தான் அனுஷ்டிக்கிரோம்.*
*வேதம் நமக்கு இதற்காகவே பிரத்தியேகமாக மந்திரங்களை அனுக்கிரகம் செய்து இருக்கிறது. அந்த மந்திரங்களை நாம் உபயோகிக்கிறோம் இந்த ஸீமந்தத்தில்.*
*இதற்கு உபயோகப்படுத்த கூடியதான வஸ்துக்களை மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர். அதையும் உபயோகம் செய்கிறோம். பௌராணிகமாக சீமந்தத்தை வளைகாப்பு என்று செய்கிறோம்.*
*இதைப் புராணங்கள் நமக்கு காண்பிக்கின்றன. அதை ஸ்திரீகள் சம்பிரதாயமாக குடும்ப வழக்கப்படி செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளனர்.*
*இதில் உபயோகிக்கக் கூடிய வஸ்துக்களைப் பற்றி சொல்கின்ற பொழுது, ஒவ்வொரு வஸ்துக்களையும் மிக மிக முக்கியமாக சேகரித்து வைத்துக் கொண்டு நாம் இதை செய்ய வேண்டும்.*
*மகரிஷிகள் நமக்கு சொல்லக்கூடிய தான வஸ்துக்கள், ஆயிரக்கணக்கான பணம் செலவழித்து உபயோகிக்க கூடிய வஸ்துக்கள் இல்லை அவை. சாதாரணமாக கிராமப்புறங்களில் கிடைக்கக்கூடிய வஸ்துக்கள்.*
*ஏனென்றால் அனைவரும் இதை செய்ய வேண்டும் எனக்கு பொருளாதார வசதி இல்லை என்று சொல்லாமல் மகரிஷிகள் அநு கிரகித்து நமக்கு சொல்லி உள்ளனர்.*
*இதெல்லாம் அழியாத வஸ்துக்கள். நாம் இன்றைக்கு உலகத்தில் உபயோகிக்கக் கூடிய வஸ்துக்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகும். அல்லது மாறிப்போகும். ஆனால் மகரிஷிகள் நாம் செய்யக்கூடிய கர்மாக்களுக்கு சொல்லக்கூடிய தான வஸ்த்துக்களுக்கு அழிவே இல்லை.*
*எப்பொழுதும் கிடைக்கக்கூடியதான வஸ்துக்கள். அப்படித்தான் மகரிஷிகள் நமக்கு காண்பிக்கின்றார்கள் ஏனென்றால், இந்த வஸ்து கிடைக்கவில்லை என்பதனால் நீ விட்டுவிட முடியாது. இந்த வஸ்துக்களை சேகரிக்க பணம் இல்லை என்று விட்டுவிட முடியாது. இதில் சலாலு/சலலி என்கின்ற 2 வஸ்துவை தெரிந்துகொண்டோம்.*
*மூன்றாவதாக சீமந்தத்திற்கு வேண்டியது தர்ப்பபூஞ்ஜீலம், அதாவது தர்ப்பம் எப்படி முளைத்திருக்கும் என்று பார்த்தால், வேரில் இருந்து கிளம்பி தண்டு போல் வந்திருக்கும். பிறகு அதிலிருந்து தனித்தனி தர்ப்பயாக வரும். அந்த தண்டோடு சேர்ந்து இருப்பதற்கு தான் தர்ப்பபூஞ்ஜீலம் என்று பெயர்.*
*அது முளைக்க ஆரம்பிக்கும் போது பார்த்தால் மிகவும் சின்னதாக இருக்கும். சுமார் ஒரு அடி தான் இருக்கும். கீழே தண்டு இருக்கும் மேலே தர்பம் பிரிந்து வந்திருக்கும். அப்படி சேர்ந்து அந்த தண்டுடன் இருப்பதற்குத்தான் தர்ப்பபூஞ்ஜீலம் என்று பெயர்.*
*இந்த வஸ்துவையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அந்த தர்ப்பையின் உடைய தண்டிற்கு காண்டம் என்று சமஸ்கிருதத்தில் பெயர். அந்தக் காண்டத்தில் அமிர்த ரசம் இருக்கிறது என்று மகாபாரதத்தில் நமக்கு காண்பிக்கிறது.*
*அந்த காண்டம் என்கின்ற பாகம் மிகவும் முக்கியம். ஆகையினால் தான் மிக முக்கியமான ஆயுஸ் கர்மாக்களில் காண்டத்தோடு உபயோகிப்பது என்று வைத்துக் கொள்வோம்.*
*இதைப் பற்றி சொல்லும் பொழுது, சோமயாகம் செய்ய க்கூடிய தான எஜமானன், வபனம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு, தர்ப்பை கொண்டு அவருக்கு ஒரு சம்ஸ்காரம் செய்யப்படுகிறது.*
*_அந்த இடத்தில் காண்பதோடு உள்ள இந்த தர்ப்பையை உபயோகம் செய்ய வேண்டும். வபனம் செய்து கொள்வதற்கு ஆயுஸ் கர்மா என்று பெயர். ஆகையினாலே தான் நாள் பார்த்து வபனம் செய்து கொள்ளவும். முடிந்தபோது முடிந்த நாட்களில் செய்துகொள்வது, எங்கேனும் வெளியில் செல்லும்போது செய்து கொள்வது, முகூர்த்த ங்களுக்கு போனால் செய்துகொள்வது, இன்று உலக வழக்கத்தில் நாம் வைத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால் அது மிகவும் தவறு. சில இடங்களுக்குப் போகும்போது வபனம் செய்து கொண்டு போகக் கூடாது என்று தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது. சன்னியாசிகளை பார்க்கப் போகும்போது வபனம் செய்து கொண்டு போய் பார்க்க கூடாது. வபனம் செய்து கொண்ட தினத்தில் முகூர்த்தங்கள் போகக்கூடாது. வபனம் செய்து கொண்ட தினத்தில் விரிவான சமாராதனை போன்ற போஜனத்தில் கலந்து கொள்ளக்கூடாது. வபனம் செய்து கொண்ட தினத்தில் சிராத்த போஜனம் செய்ய கூடாது. பிதுர் கர்மாக்கள் செய்யக்கூடாது. இப்படி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இது ஆயுஸ் கர்மா என்று பெயர். நம்முடைய ஆயுளைக் குறைத்து விடும்._*
*ஆகையினாலே ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். இதனால் தான் அவனுக்கு அங்கு ஆயுள் விருத்தி ஏற்பட வேண்டும். தீர்க்கமான ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறது என்பதினால், அந்த காண்டத்தோடு உள்ள தர்பையை அங்கு உபயோகம் செய்கிறோம்.*
*அதே போல் தான் அந்த சீமந்தம்மும் அந்த குழந்தையும் தாயாரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக செய்யப்படுவது சீமந்தம்.*
*அதிலே இந்த காண்டத்தோடு சேர்ந்த தர்பையை உபயோகம் செய்ய வேண்டும். அதற்கு தர்ப்பபூஞ்ஜீலம் என்று மகரிஷிகள் காண்பிக்கின்றனர்.*
*அதற்கு அடுத்ததாக வஸ்து நெல் நாற்று சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது வயலில் நாத்து/நாற்று நடுவார்கள். நாற்றங்கால் விடுவது என்று சாகுபடியில் உண்டு. நெல்மணிகளை நெருக்கமாக தெளித்து, அது முளைத்து அரை அடி வந்ததும் அதை எடுத்து நிறைந்து நடவுங்கள் செய்வார்கள்.*
*இதற்கு நடவு என்று பெயர். நாற்றங்கால் போட்ட அந்த நெல் மணிகளை எடுத்துக் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம் இந்த சீமந்தம் செய்வதற்கு. நாற்றங்கால் போட்டு நெல் மணியோடு சேர்ந்து இருக்க வேண்டும். இதையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.*
*இந்த வஸ்துக்கள் அனைத்தும் மிகவும் முக்கியம். சீமந்தத்திற்கு நாள் பார்த்து வைத்தவுடன் இந்த வஸ்துக்கள் எல்லாம் நாம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாத்தியார் இதையெல்லாம் கொண்டு வருவர் என்று அலட்சியம் இல்லாமல் பழைய நாள் போல் நாம் எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.*
*இன்னும் ஒரு வீட்டிலிருந்து தர்ப்பையை எடுத்து கொண்டு வந்து இந்தக் கர்மாக்களை எல்லாம் செய்தால் பரம்பரையாக அந்த வீடு தழைத்திருக்கும். மேலே சொல்லப்பட்ட வஸ்துக்களை எல்லாம் நாம் சேகரித்து வைத்துக்கொண்டு செய்தோமானால் நம் குடும்பம் தழைத்தோங்கும்.*
*யார் எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவருக்குத்தான் அது வளர்ச்சியைக் கொடுக்கும். இதை இந்த நாளில் நாம் பார்க்கிறோம். கல்யாண மண்டபங்களில் இந்த முகூர்த்தங்கள் எல்லாம் நடக்கின்றது. கல்யாண மண்டபத்தில் உள்ளவர்களோ அல்லது சமையல் செய்பவர்கள் இந்த வஸ்துகளை சேகரித்து வைப்பதினால், அவர்களுக்கு வருடம் முழுவதும் சமையல் செய்வதற்கான ஒப்பந்தங்களும் கல்யாண மண்டபங்கள் தொடர்ச்சியாக புக்கிங் எல்லாம் கிடைக்கிறது.*
*ஆனால் கல்யாணம் செய்து கொண்டவர்கள் சிரமப்பட ஆரம்பிக்கிறார்கள், கல்யாண மண்டபங்களில் இந்த மந்திரங்கள் எல்லாம் சொல்லப்படுவதினால் மேலும் மேலும் கல்யாண மண்டபம் பூக்கிங் ஜாஸ்தியாக போய்க்கொண்டு இருக்கிறது.*
*இந்த நாட்களில் கல்யாணமண்டபம் முகூர்த்த தேதியை அவர்கள் கொடுத்து அங்கு இடம் இருந்தால் நாம் அதற்கு தகுந்தார்போல் முகூர்த்த தேதி வைக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.*
*அது கிருஷ்ணபக்ஷ மா தக்ஷினாயனமா இரவா இன்று எதுவுமே பார்க்காமல் முகூர்த்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். காரணம் இவைகள் எல்லாம் வீட்டில் செய்யாமல் போனது என்கின்ற வழக்கம் வந்துவிட்டதால். இப்படியான ஒரு நெருக்கடியான சூழ்நிலை வந்துவிட்டது.*
*ஆகையினால் இது எல்லாம் வாத்தியார் கொண்டுவருவார் என்கின்ற அலட்சியம் இல்லாமல், நாம் இதை சேகரித்து வாத்தியாரிடம் சொல்ல வேண்டும்.*
*வாத்தியார்ரிடத்தில் என்னவெல்லாம் வஸ்துக்கள் வேண்டும் என்கின்ற ஒரு பட்டியல் கேட்டு, ஒப்பந்தமாக நீங்களே எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லாமல், என்ன வேண்டும் என்று கேட்டு முடிந்ததை நான் சேகரிக்கிறேன் என்று சொல்லவேண்டும். அப்பொழுது வாத்தியாரும் சந்தோஷப்படுவார் அவர் போய் எங்கிருந்து எல்லாவற்றையும் கொண்டு வர முடியும்.*
*இதையெல்லாம் நாம் யோசனை செய்து நம்மால் எந்த அளவுக்கு வஸ்துகளை சேகரித்துக் கொடுக்க முடியுமோ, அப்படி சேகரித்து வைத்துக் கொண்டு இந்த சீமந்தம் செய்ய வேண்டும். மேற்கொண்டு இதன் பெருமைகளை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*