Announcement

Collapse
No announcement yet.

seemantham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seemantham.

    *27/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சீமந்தோநயனம் பற்றி மேலும் தொடர்கிறார்.*
    *ஒவ்வொரு பெண்களுக்கும் சீமந்தோநயனம் என்பது மிகவும் முக்கியம் இது எதற்காக செய்யப்படுகிறது என்றால், இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.*


    *ஒன்று அந்தப் பெண்ணிற்கு எந்தவிதமான கர்ப்ப தோஷம் நிலை ஏற்படக் கூடாது. அதன் காரணமாக அந்த கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு எந்த விதமான குறைபாடுகளும் ஏற்படக்கூடாது. இதற்காக செய்யப்படுவது தான் இந்த சீமந்தோநயனம் என்ற முகூர்த்தம்.*


    *இந்த இரண்டுக்கும் கர்ப்ப தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும், இதற்காக செய்யப்படுவதுதான் சீமந்தம். இதை நாம் மகரிஷிகள் காண்பித்துக் கொடுத்துள்ளனர்.*


    *இதெல்லாம் நமக்கு எவ்வாறு தெரிகிறது என்றால் சீமந்தம் செய்ய வேண்டிய காலத்தை பார்க்கும் பொழுதும், அந்த சீமந்தத்தில் உபயோகிக்க வைக்கக்கூடிய வஸ்துக்களை பார்க்கின்ற பொழுதும், சீமந்த த்தில் சொல்லக்கூடிய மந்திரங்களின் அர்த்தங்களை பார்க்கின்ற போதும், இது நமக்கு விரிவாக தெரியவருகிறது.*


    *அப்படி முக்கியமான இந்த சீமந்தத்தை நான்காவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆபஸ்தம்பர் இதை நமக்கு சொல்லி இருக்கிறார். நான்காவது மாதத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் செய்ய முடியாது போனால், அதற்கு கௌனகாலம் சொல்லப்பட்டிருக்கிறது. கௌனகாலம் என்றால் பின்னால் காலம் சென்றாலும் செய்ய வேண்டும் அதற்கு தான் இந்த பெயர்.*


    *ஏன் பிரசவமே ஆகி விட்டாலும் கூட, சீமந்தோநயனம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பித்து கொடுக்கிறது. ஏனென்றால் அந்த கர்ப்ப தோஷத்தின் காரணமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் குழந்தை பிறந்து விட்டாலும் கூட, அந்த சீமந்தத்தை செய்த பிறகு ஜாதகர்மாவை செய்ய வேண்டும்.*


    *அந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் சூட்சுமமாக நாம் பார்த்தோமேயானால், நான்காவது மாதம் முதல் பிரசவம் வரையிலும், அந்தக் கணவனால் இந்த சீமந்த முகூர்த்தத்தை செய்ய முடியாமல் போனால், அந்தப் பெண்ணினுடைய தகப்பனார் அந்த சீமந்தத்தை செய்ய வேண்டும். அல்லது கூடப் பிறந்த சகோதரர்கள் அந்த சீமந்தம் செய்து வைக்க வேண்டும். இதை தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.


    *ஏனென்றால் இந்த சீமந்தம் என்பது மிகவும் முக்கியம் என்ற காரணத்தினால், அந்தக் கணவனால் சீமந்தத்தை செய்து வைக்க முடியாவிட்டாலும், கூட உள்ள சொந்தங்கள் செய்து வைக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெண்ணிற்கு அது மிகவும் முக்கியம். இதை தர்ம சாஸ்திரம் மிகவும் வலியுறுத்தி காண்பிக்கிறது.*


    *குழந்தை பிறந்து விட்டாலும் கூட, பிறகுதான் கணவர் வந்திருக்கிறார் என்றால், அப்பவும் இந்த சீமந்தம் செய்ய வேண்டும்.*
    *ஏனென்றால் இது ஒரு முறை தான் செய்ய முடியும். பும்ஸுவனம் போன்று ஒவ்வொரு தடவையும் குழந்தை கர்ப்பத்தில் உற்பத்தி ஆகும்போது செய்ய முடியாது. முதல் கர்ப்பத்திலேயே இதை செய்து விடவேண்டும் ஏனென்றால் ஒரு முறை தான் செய்ய முடியும்.*


    *முதன் முதலில் பிரசவம் ஆகி விடுவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும். தர்மசாஸ்திரம் நமக்கு இது காண்பிக்கிறது. கர்பாசயத்தில் அந்த ரேகைக்கு தான் சீமந்தம் என்று பார்த்தோம். அந்த ரேகையானது விரிவடைந்து, அதன் மூலமாகத்தான் நமக்கு பிரசவம் ஆனது ஏற்படுகிறது. அதனால்தான் அந்த ரேகை உள்ள திக்கை நோக்கி குழந்தை திரும்புகிறது. மருத்துவர் இதை சொல்வதை நாம் கேட்க முடியும். குழந்தை கர்ப்பத்தில் செல்லும்பொழுது ஒரு திசையிலும், பிரசவம் ஆகக்கூடிய சமயத்தில் அந்த குழந்தையின் உடைய தலை திரும்ப வேண்டும். அப்படித் திரும்பி இந்த ரேகையின் மூலமாக குழந்தை வருகிறது.*


    *இப்படி தான் பிரசவம் ஆனது நடக்கிறது. அந்த ரேகைக்கு செய்யக்கூடியது ஆன சம்ஸ்காரம் தான் இந்த சீமந்தம். இது ஏன் நான்காவது மாதம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், இங்கே ஒரு சூட்சுமம் இருக்கிறது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.*


    *கர்ப்பத்தில் ஒரு கணவன் மனைவி குழந்தையை உற்பத்தி செய்கின்றனர். ஸ்தூல சரீரம் ஏற்படுகிறது. அந்த ஸ்தூல சரீரத்தில் ஒரு ஜீவன் நுழைகிறது. சூக்ஷ்ம சரீரத்தோடு அந்த சரீரம் நுழைகிறது. அதன் பிறகு தான் நமக்கு தீர்மானமாகிறது அந்த குழந்தை. அதற்குத்தான் குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்கிறது.*


    *கர்ப்பத்தில் குழந்தை உடனே உற்பத்தி ஆகின்றதா என்றால், உற்பத்தியாகிறது. ஆனால் 60 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அந்த சூக்ஷ்ம சரீரம் ஆனது ஸ்தூல சரீரத்தில் நுழைவதற்கு ஆன கால அவகாசம் 60 நாட்கள். அதன் பிறகு தான் நமக்கு தீர்மானம் ஆகிறது.*


    *இது தள்ளியும் போகும். அந்த சூக்ஷ்ம சரீரம் கர்ப்பத்தில் உற்பத்தி ஆகக்கூடிய நேரம் வரையிலும் காலம் தள்ளிப் போகும். ஸ்தூல சரீரம் கர்ப்பத்தில் விழுந்துவிடும். அப்படியே இருந்தாலும் அதற்குள் சூக்ஷ்ம சரீரம் நுழைந்தால் தான், குழந்தை வளர ஆரம்பிக்கும்.*


    *சூக்ஷ்ம சரீரம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும். அதுவரையிலும் இந்த ஸ்தூல சரீரம் காத்துக் கொண்டிருக்கும். ஆகையினால் இதுதான் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது என்பது தாமதமாகிறது. எந்த குறைபாடும் இல்லை ஆனாலும், அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை, என்பதைப் பார்க்கிறோம்.*


    *காரணம் என்னவென்றால், அந்த சூக்ஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தில் நுழையவேண்டும். இதற்கான கால அவகாசத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறது. இதற்கான ஒரு சம்பவத்தை மகாபாரதத்தில் நாம் பார்க்கலாம். இந்த சீமந்தத்தை முழுமையாக பார்த்த பிறகு அதை நாம் பார்க்க இருக்கிறோம்.*


    *அப்படி இந்த ஸ்தூல சரீரத்தில் சூக்ஷ்ம சரீரம் நுழைந்து, பிறகு அந்த சரீரம் வளர ஆரம்பிக்கின்றது. அப்படி ஒரு முழுமையான உருவத்தை அடைந்து, பிறகு அந்த சூக்ஷ்ம சரீரம் வளர ஆரம்பிக்க கூடியதான காலந்தான் நான்காவது மாதம்.*


    *அதாவது அந்த குழந்தை கேட்பதற்கு/பார்ப்பதற்கு/வாசனையை கிரகிக்க/ருசியை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றது. அந்தக்காலம் நான்காவது மாதம். இதை கருத்தில் கொண்டுதான் நான்காவது மாதம் சீமந்தம் செய்ய வேண்டும் என்று முக்கிய காலமாக நான்காவது மாதத்தை காண்பிக்கின்றனர்.*


    *இந்த சீமந்தத்திற்கு வேண்டிய வஸ்துக்கள் என்ன என்று பார்த்தோமானால், அதில் கூட நிறைய முக்கியத்துவம் நமக்கு வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். முக்கியமான வஸ்துக்கள் என்னவென்றால், முதலில் சலலி அதாவது சலஹா என்று முள்ளம் பன்றிக்கு பெயர். இப்படியாக ஒரு மிருகம் இருக்கிறது. அதனுடைய ரோமாக்கள் தடிமனாக முள்ளு முள்ளாக இருக்கும். அந்த ரோமாக்குதான் சலலி என்று பெயர். ஊசி போல் மிகவும் கூர்மையாக இருக்கும். இரண்டு நிறமாக இருக்கும். கருப்பு வெள்ளை. முகூர்த்தத்தில் நாம் பந்தக்கால் நடும் பொழுது, அதில் சுண்ணாம்பும் செம்மண்ணும் மாற்றி மாற்றி அடித்து இருப்போம். அது போல் தான் அந்த முள்ளம்பன்றியின் ரோமாக்கள் இருக்கும்.*


    *வெள்ளை கருப்பு வெள்ளை கருப்பு என்று இரண்டு நிறத்தில் இருக்கும். அந்த நிறம் மூன்றுக்கு மேல் இருக்க வேண்டும். இரண்டு வெள்ளை இரண்டு கருப்பு, இப்படி நிறைய இருக்க வேண்டும். அதாவது நீளமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.*


    *பெரியதாக இருக்க வேண்டும் அந்த முள்ளம் பன்றியின் ரோமம். அதற்கு சலலி என்று பெயர். இந்த மிருகத்தின் அருகில் வேறு யாரும் வந்தால் அது கூர்மையாக இருக்கும் குத்திவிடும். காயங்கள் ஏற்படும் அதற்கு பாதுகாப்பாக ஈஸ்வர சக்தியில் அப்படி வைத்திருக்கிறார்கள். அந்த முள்ளம்பன்றியின் முள் ஒன்று வேண்டும் இந்த சீமந்தம் செய்வதற்கு. சலாலு என்கின்ற இரண்டாவது வஸ்து வேண்டும். இதைப் பற்றி அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X