Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *17th March to 23rd March No Broadcasting*
    *24/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் விரிவாக பார்த்துக்கொண்டு வருகின்ற வரிசையிலும் பும்ஸுவனம் என்கின்ற ஒரு அனுஷ்டானத்தை விரிவாக பார்த்திருந்தோம்.*


    *இது மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம் இது எதற்காக செய்யப்படுகிறது என்பதைப் பற்றி தர்ம சாஸ்திரம் சொல்கின்றது, அந்த கர்ப்பத்தில் உற்பத்தி ஆகக்கூடிய குழந்தைக்காக செய்யப்படுவது பும்ஸுவனம். அந்த குழந்தை ஆண் தன்மையோடு அல்லது பெண் தன்மையோடு இருக்க வேண்டும்.*


    *_இதற்காகத்தான் நம் மகரிஷிகள் அதை காண்பித்திருக்கிறார்கள் ஒரு முக்கியமான சம்ஸ்காரம். இந்த சம்ஸ்காரங்கள் எல்லாம் யாருக்காக செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டும். பும்சுவனம் என்பது அல்லது அந்த பெண்ணிற்காக செய்யப்படுகிறது என்று நாம் நினைக்கக் கூடாது. கர்ப்பத்தில் உற்பத்தி ஆகக்கூடிய குழந்தைக்காக செய்யப்படுகிறது பும்ஸுவனம். ஆகையினாலே தான் ஒவ்வொரு கர்ப்பத்திற்கும் பும்ஸுவனம் செய்யலாம் என்று நம் மகரிஷிகள் காண்பித்திருக்கிறார்கள்._*


    *அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பும்ஸுவனம். கட்டாயம் அதற்காக சொல்லப்பட்ட காலத்தில் நாம் செய்து கொள்வதற்கு பழக வேண்டும். அதற்கான காலம் எப்பொழுது செய்ய வேண்டும் அதை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது எல்லாம் முன்பே நாம் பார்த்தோம். அந்த முறையிலே அதை செய்ய வேண்டும்.*


    *இது கர்ப்பத்திலுள்ள குழந்தைக்காக செய்யப்படுகிறது என்கின்ற காரணத்தினால் தான் உதகசாந்தி எல்லாம் செய்யப்படுவதில்லை பும்ஸுவனத்தில்.*


    *சீமந்தத்திற்கு உதகசாந்தி உண்டு. ஒரு குடத்தில் ஜலம் வைத்து, அற்புதமான மந்திரங்கள் அது எல்லாம் ஜெபம் செய்து, அபிஷேகம் செய்வித்து பிறகு சீமந்தம் செய்வதை பார்க்கிறோம். ஆனால் பும்ஸுவனத்திற்கு உதகசாந்தி என்பது கிடையாது.*


    *காரணம் கர்ப்பத்திலுள்ள குழந்தைக்காக செய்யப்படுவதால், உதகசாந்தி அவசியமில்லை என்று நம் மகரிஷிகள் காண்பித்துக் கொடுத்துள்ளனர். ஒரு நல்ல நாள் பார்த்து புஷ்ய நட்சத்திரமாக அதை செய்து கொள்ளவேண்டும். எந்த குழந்தை நமக்கு ஆசையாக இருந்தாலும் ஆபஸ்தம்பர் பூசம் நட்சத்திரத்தை காண்பித்திருக்கிறார். அதை அடிப்படையாகக் கொண்டு புஷ்ய நட்சத்திரத்தில் செய்வது என்று வைத்துக் கொள்ள வேண்டும்.*


    *இதுபோல் ஒவ்வொரு மகரிஷிகளும் அந்தந்த சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நமக்கு காண்பித்துள்ளனர். ஆனால் அனைத்து மந்திரங்களுக்கும் ஆபஸ்தம்பர் காண்பிக்கக் கூடிய அதே பலன்களை தான் எல்லா சூத்திர காரர்களுக்கும் அமைகிறது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.*


    *ஏனென்றால் சூத்திர காரஹா என்று ஆபஸ்தம்பருக்குதான் பெயர். அனைத்து மகரிஷி களையும் வைத்து எந்த மகரிஷி சொல்வதை அடிப்படையாக கொண்டு இந்த கல்ப சூத்திரத்தை இயற்றுவது என்று மகரிஷிகள் எல்லாம் யோசனை செய்து ஆபஸ்தம்பரை முதலாவதாக வைத்து, அனைத்து மகரிஷிகளும் செய்திருக்கிறார்கள்.*


    *ஆபஸ்தம்பருக்கு முதல் யார் என்று பார்த்தோமேயானால், போதாயனர் என்ற மகரிஷி தான் முதலில் வருகிறார். அதே நாளேதான் போதாயனர் சூத்திரத்திலிருந்து ஆங்காங்கே நிறைய எடுத்துக் காண்பித்திருக்கிறார். இதனால்தான் இந்த இரு மகரிஷிகளையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மகரிஷிகளும் இந்த கல்ப சூத்திரத்தை நமக்கு செய்து இந்த கர்மாக்களை நமக்கு வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.*


    *அதனால்தான் ஆபஸ்தம்பர் அல்லது போதாயன மகரிஷி சொன்ன வரிசையில்தான், அனைத்து சூத்திர காரர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்கின்ற பொழுது, நாம் ஒரு சூத்திரத்தை/வேதத்தை அடிப்படையாகக் கொண்டு கர்மாக்களை செய்கிறோம். ஆனால் அந்த மகரிஷி இந்த கர்மாவை முழுமையாக சொல்லவில்லை, அல்லது காண்பிக்க வில்லை என்றால், மற்றுமொரு சூத்திரத்திலிருந்து எடுத்துக்கொண்டு

    செய்யலாம், என்று காண்பித்து எந்த சூத்திரத்திலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பொழுது, போதாயனர் என்கின்ற மகரிஷி, சொன்னதை அடிப்படையாகக்கொண்டு, அனைத்தையும் நாம் செய்தால் முழுமையான செய்த பலனை பெறலாம் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பித்து கொடுக்கிறது.*


    *அந்த போதாயன மகரிஷியும் விசேஷமான மந்திரங்களை இந்த பும்ஸுவனத்தில் காண்பித்துள்ளார். இப்படி இந்த பும்ஸுவனம் என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் தெரிந்து கொண்டோம். அடுத்தது சீமந்தம் என்கின்ற ஒரு முக்கியமான சம்ஸ்காரம்.*


    *பும்ஸுவனம் சீமந்தம் இரண்டையும் வைத்து பார்க்கும் பொழுது, நம்முடைய ஆபஸ்தம்ப மகரிஷி, முதலில் சீ மந்தத்தை காண்பித்து பிறகு தான் பும்ஸுவனத்தை சொல்கிறார். காரணம் வேதத்தில் மந்திரங்களை வரிசைப்படுத்தி காண்பிக்கும் பொழுது, சீமந்த மந்திரங்களை முதலில் சொல்லி பிறகு பும்ஸுவன மந்திரங்கள் வருகிறது. அதனால் அப்படி காண்பிக்கின்றார் ஆபஸ்தம்ப மகரிஷி.*


    *ஸீமந்தம் என்பது மிகவும் முக்கியம். இது எதற்காக செய்யப்படுகிறது என்றால், கர்ப்பமாக உள்ள பெண்ணிற்காக செய்யப்படுகிறது என்று மகரிஷிகள் காண்பித்துள்ளனர். இதன் பெருமைகளை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X