15th March No Broadcasting.*
*16/03/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.*
*அதில் சொல்லக்கூடிய மந்திரங்களில் பெருமையை பார்த்து வருகின்ற வரிசையில் மிகவும் அற்புதமான மந்திரங்கள் அவை. நமக்கு மிகவும் அனுகிரகம் செய்யக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்கள். பும்ஸவனம் ஹோமத்தில் செய்யக்கூடிய ஆகுதிகளில் இதுவரை 6 மந்திரங்களை நாம் விரிவாகப் பார்த்தோம்.*
*ஏழாவது மந்திரமானது, புத்திரனை நமக்கு அனுக்கிரகம் செய்ய கூடியதான இந்திரனை குறித்து பிரார்த்திக்க கூடியதான மந்திரம். ஹே இந்திரா, நாங்கள் எந்த தேவதையை குறித்து பிரார்த்தித்து எந்த ஒரு காரியத்தை செய்தாலும், உன்னுடைய அனுமதி இல்லாமல் எந்த தேவதையும் அனுகிரகம் செய்வதில்லை, உன்னை மீறி எந்த தேவதைகள் ஆளும் எங்களுக்கு பலனை கொடுக்க முடியாது.*
*எங்களுக்கு நல்ல ஐஸ்வரியம் வாரிசுகள், மன ஆரோக்கியம், இவைகளை கொடுக்கக்கூடியது ஆன ஹே இந்திரா, பல காமனைகளை எதிர்பார்த்து, யாரெல்லாம் மற்ற தேவதைகளை ஆராதித்தாலும், உன்னிடத்தில் தெரியாமல் அவர்கள், எதையும் செய்ய முடியாது. உன்னுடைய அனுமதி இல்லாமல் எந்த தேவதைகளும் எங்களுக்கு அனுக்கிரகத்தை செய்ய முடியாது.*
*எந்த தேவதைகள் எங்களுக்கு அனுகிரகம் செய்தால் எங்களுக்கு பெரிய லாபம் கிடைக்குமோ, இந்திரன் ஆன நீ அந்த லாபத்தை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.*
*அதற்கான காரணம், இது எட்டாவது ஆகுதியில் செய்யக்கூடியதான மந்திரம். ஸோம யாகங்கள் செய்யும் பொழுது, இந்திரனை முதற்கொண்டு தான் அனைத்து தேவதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி முதன்மையான தேவதையான ஹே இந்திரா, அந்த சோம யாகத்தில், ரிக் வேதம் மூலம் சோஸ்திரம் செய்வதற்கு ஸஸ்திரம் என்று பெயர். அப்படி ஒவ்வொரு ஸஸ்திரங்களிலும், ஸோமஹா என்கிற அந்த வஸ்து ஆனது, இந்திரனை திருப்தி அடைய செய்கிறது.*
*அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சோஸ்திரங்களிலும், அதாவது சாம வேதத்தினால் செய்யப்படக்கூடிய தான சோஸ்திரம், அப்படி சாம வேத மந்திரங்களின் மூலம் சோஸ்திரம் செய்யப்பட்டு, இந்த சோமரசம் ஆனது, அந்த இந்திரனை ரொம்ப திருப்தி அடைய செய்கிறது.*
*எவ்வளவோ காமனை களை எதிர்பார்த்து, செய்யக்கூடியது ஆன அனைத்து காரியங்களிலும், நிறைய இடர்பாடுகளை சந்திக்க வேண்டி வரும். ஒரு நல்ல பலனை எதிர்பார்த்து செய்தால் நிறைய இடைஞ்சல்கள் வரும். அவ்வளவு இடைஞ்சல்கள் எல்லாவற்றையும் தாண்டி தான், ஒரு பெரிய லாபத்தை அடைகிறார் ஒவ்வொருவரும்.*
*எது போல் என்றால், ஒரு பையனுக்கு ஒரு பெரிய வாழ்க்கையில், ஒரு முக்கியமான லாபம் வேண்டுமானால், எப்படி தகப்பனார் இடத்திலே போய் சொல்லி அந்த காமனையை பூர்த்தி செய்து கொள்வானோ அதுபோல. குழந்தைகள் தகப்பனார் இடத்திலே போய் கேட்கும், எனக்கு இது வேணும் என்று கேட்டால், எப்படி தகப்பனார் அந்த ஆசையை பூர்த்தி செய்து வைப்பாரோ, அதுபோல் நம் அனைவருக்கும் தகப்பனார் இந்திரன் தான்.*
*அகில உலகங்களுக்கும் இந்திரன் தான் தகப்பனார் போல், யார் நம்மை சிருஷ்டி செய்தாரோ அவரை தான் தகப்பனார் என்று சொல்கிறோம். இந்த அகில உலகத்திற்கும் தகப்பனார் இந்திரன், அப்படிப்பட்ட இந்திரன், எப்படி குழந்தைகளின் ஆசையை ஒரு தகப்பனார் பூர்த்தி செய்து வைப்பாரோ, அதுபோல் இந்திரன் ஆனவன், குழந்தைகளாக நாம் கேட்கக்கூடிய தான*
*காமனைகளை பூர்த்தி செய்து வைக்க வேண்டும்.*
*ஹே இந்திரா, நீ எங்களை கடனாளியாக இருக்கும்படி செய்யக்கூடாது என்பது இந்த மந்திரத்தினுடைய தாத்பரியம். கடன் என்றால், புத்திரன் இல்லாமல் இருப்பது ஒரு கடன்தான். தமிழில் ஆரம்ப பாடங்களில் இனியவை நாற்பது/இன்னா நாற்பது என்று ஒன்று உண்டு. அதில் கடம் உண்டு வாழாமை காண்டல் இனிது என்றும் இனியவை நாற்பதில் உள்ளது. அதாவது நம்முடைய வாழ்க்கையில் பிறக்கும் பொழுது மூன்று கடன்கள் உள்ளது.*
*தேவ/பிதுர்/ரிஷி கடன் என்று மூன்று உள்ளது. இந்த மூன்று கடனையும் தீர்ப்பவன் ஆக வாழ்வதே மிகவும் துர்லபம் என்று இனியவை நாற்பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் வாங்கக்கூடிய பண கடனைப் பற்றி அது சொல்லவில்லை. நம்முடைய வாழ்க்கையில் பிறக்கும்போது இருக்கக்கூடிய ஆன கடனை தீர்ப்பது, என்பது மிகவும் துர்லபம் என்று இனியவை நாற்பதில் சொல்லப்பட்டிருக்கிறது,*
*இந்த மந்திரத்தை என்னுடைய பெருமைதான் தமிழிலேயே காண்பிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி நாங்கள் புத்திரன் இல்லாவிடில் பிதிர்க்கடன் எங்களுக்கு தீராது, அது தீரும் படியாக நீ எங்களை செய்ய வேண்டும் ஹே இந்திரா என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது.*
*அப்படி இந்த எட்டு ஆகுதிகளையும் பும்ஸுவனத்தில், செய்ய வேண்டும். அப்படி செய்தால் நமக்கு நல்ல வாரிசுகள் கிடைக்கும். அந்த வாரிசும் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் ரொம்ப துர்லபமாக ஆகிவிட்டது. அது இனியவை நாற்பதில், குழவி பிணி இன்றி வாழ்தல் இனிது என்று இருக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்து வாழ்வது என்பது மிகவும் துர்லபம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி ஆரோக்கியமான வாரிசு நாம் பெற வேண்டுமானால், இந்த ஆகுதிகள் நல்ல முறையில் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.*
*இப்படி இந்த எட்டு ஆகுதிகளை மந்திரங்களை நன்றாக சொல்லி நாம் இதை செய்ய வேண்டும். அப்படி இந்த மந்திரங்கள் நம் வாழ்க்கையில் எந்த அளவுக்கு மேன்மை அடைய வேண்டும் என்பதை பிரார்த்திக்கின்றது என்பதை பார்த்தோம், மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*