Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    14/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்சவனம் என்கின்ற ஒரு அனுஷ்டானத்தில் பெருமைகளை அதில் செய்யக்கூடிய ஹோமத்தின் முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.*


    *இதுவரை ஐந்து ஆகுதிகள் பெருமையை பார்த்து வந்தோம். ஆறாவது ஆகுதி நமக்கு நல்ல வாரிசை தரக்கூடியது அதைப்பற்றி நாம் பிரார்த்திக்க கூடியதான மந்திரம்.*


    *ஹே அக்னே ஜாதவேதஹா. எனக்கு சில அநுகிரகங்களை நீங்கள் செய்ய வேண்டும். எனக்கு மட்டுமல்ல எங்களுக்கு. எங்கள் இருவருக்கும் நீங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். உங்களால் முடியும் ஏனென்றால், அனைத்தையும் தன்வசப்படுத்த கூடியதான சக்தி அக்னியான உங்களுக்கு உண்டு.*


    *பூமியில் எந்த வஸ்துவை போட்டாலும் அது பூமியாக மாறாது, ஆகாசத்தில் எந்த வஸ்துவை போட்டாலும் அந்த ஆகாயம் ஆக மாறாது, ஆனால், அக்னி யான உங்களிடத்தில் எந்த வஸ்துவை போட்டாலும், அந்த வஸ்து அக்னியாக மாறிவிடும்.*


    *எந்த வஸ்துவை எடுத்துக் கொண்டாலும் அதை தன்வசப்படுத்திக் கொள்ளக்கூடிய சக்தி உங்களிடம், நாங்கள் சில பிரார்த்தனைகளை வைக்கிறோம். நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். ஹே அக்னே, பெரிய ஒரு லாபத்தை எதிர்பார்த்து இந்த ஆகுதிகளை நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம்.*


    *நீங்கள் செய்ய வேண்டும் முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என்றால், சியோனம் என்றால் சுகமான வாழ்க்கையை எங்களுக்கு கொடுக்க வேண்டும். லோகம் என்றால், சுகஜீவனம். சுகமாக இந்த லோகத்தில் நாங்கள் வாழ வேண்டும். அதை நீங்கள் எங்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். மேலும், உங்களால் அடைய முடியாதது என்று ஏதாவது உண்டா? உங்களுடைய அனுகிரகம் இருந்தால் பெற முடியாதது என்று எதுவும் இல்லை.*


    *அனைத்தையும் அடைந்து விடலாம், இதையெல்லாம் அடையலாம் முக்கியமாக என்றால், வாழ்க்கையில் என்ன தேவையோ அதை பெற முடியும், நல்ல வேக திறன் குதிரைகள், அல்லது நல்ல வேக திறன் உள்ள வாகனங்கள் அதைப் பெற முடியும்.*


    *அனைத்தையும் அனுகிரகம் செய்ய முடியும் உங்களால். நல்ல வாரிசை பெற முடியும். அந்த வாரிசும் எப்படி இருக்க வேண்டும் என்றால், தேக ஆரோக்கியத்தோடு பாக்கியவான் ஆக இருக்க வேண்டும். நல்ல/நிறைய பசுக்களோடு உணவு பற்றாக்குறை இல்லாமல், எல்லாவற்றுக்கும் மேல் நல்ல ஐஸ்வரியம், பொருளாதார நிலையில் எப்பொழுதும் உயர்ந்தவனாக உங்களால் செய்ய முடியும், இவ்வளவையும் எங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும். நிறைய படித்து இருக்கிறான் நிறைய சம்பாதிக்கிறான் என்பது மட்டுமே வாழ்க்கையில் மேன்மை அல்ல, படித்த படிப்பு வாழ்க்கைக்கு பயன்பட வேண்டும், சேர்த்த பணம் காசு சொத்துக்கள் வாழ்க்கைக்கு பயன்பட வேண்டும், நம்மை சுற்றி உள்ள சொந்தங்கள் நமக்கு பயன்பட வேண்டும். அதுதான் வாழ்க்கையில் மேன்மை*


    *மகாபாரதத்தில் சொல்கின்ற பொழுது, அபிமன்யு உத்தரா விவாகம் ஆனவுடனே, குந்தியின் இடத்திலே வந்து நமஸ்காரம் செய்கிறார்கள் தம்பதிகள், குந்தி ஆசிர்வாதம் செய்கிறார் அந்த தம்பதிகளுக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து நல்ல வாரிசை பெற வேண்டும், நல்ல குழந்தைகளை நீங்கள் பெறவேண்டும், அந்தக்குழந்தை பாக்கியவான் ஆக இருக்க வேண்டும், பெரிய மாவீரனா பெரிய பண்டிதன் ஆகவும் அந்த குழந்தை இருக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை ஆனால் பாக்கியவான் ஆக இருக்க வேண்டும்.*


    *ஏனென்றால், எனக்கு நூறு குழந்தைகள் அத்தனை பேரும் பெரிய பெரிய வீரர்கள், எதிரே நின்று யுத்தம் செய்ய முடியாது அப்படிப்பட்ட வீரர்கள், நிறைய படிப்பாளிகள், ஆனால் உடம்பில் நல்ல பலம் இருந்தும் நிறைய படித்தும் கூட, ஊரிலேயே இல்லை. மம புத்திரா வனம் கதாஹா, எல்லோரும் காட்டுக்கு சென்று இருக்க வேண்டியதான நிலை. ஏனென்றால் பாக்கியம் இல்லை.*


    *தன் வீட்டில் நிழலில் உட்கார்ந்து கொண்டு, தாயாரின் கையால் நாம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு, சுகமாக வாழ்வதற்கு பாக்கியம் செய்யவில்லை என்னுடைய குழந்தைகள், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது, உங்களுக்கு படிப்பு தேவையில்லை ஆனால் பாக்கியவான் ஆக கஞ்சி குடித்துக் கொண்டாவது சௌக்கியமாக நீங்கள் இருக்க வேண்டும், இப்படி ஆசீர்வாதம் செய்கிறாள் குந்தி.*


    *இப்படி இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது. நல்ல வேகத்திறன் உடைய வாகனங்கள், நல்ல புத்திரன் இருக்க வேண்டும், வீரவந்தம். அந்தப் புத்திரனும் பாக்கியவான் ஆக இருக்க வேண்டும். கோமந்தம் என்றால், நிறைய பசுமாடுகள் உடன் கூடிய வசதி, குழந்தை பிறந்து பால் இல்லாமல் அழுகின்றது என்ற நிலை இருக்கக்கூடாது. பசி என்றால் பால் பவுடரை வெந்நீரில் கலந்து கொடுக்கும் படியாக இல்லாமல் நிறைய பசும்பால் இருக்க வேண்டும். எப்பொழுதும் பால் கிடைக்க வேண்டும் எல்லாவற்றுக்கும் மேல் நல்ல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டும்.*


    *பணம் காசு இருக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். அக்னியை பிரார்த்தனை செய்தால் ஐஸ்வர்யம் நிறைய கிடைக்கும். இப்படி அனைத்தையும் நமக்கு அனுக்கிரகம் செய்ய கூடிய ஹே அக்னி ஆன ஜாதவேதஹா, நீங்கள் எங்களுக்கு இந்த லோகத்தில் இவ்வளவையும் அனுக்கிரகம் செய்ய வேண்டும், இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த லோகத்திலேயே இவ்வளவு சுகத்தையும் நான் பெறவேண்டும் இப்படி இந்த ஆறாவது மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*


    *ஏழாவது மந்திரத்தின் பெருமையை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்
Working...
X