Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *12/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு அனுஷ்டானத்தில் ஹோமத்தின் முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.*


    *இந்த ஹோமத்தில் தாதா என்கின்ற தேவதையை ஆராதித்து, பிறகு நமக்கு நல்ல வாரிசு கொடுக்கக்கூடியதான அக்னியையும், வாரிசை அடையக்கூடிய தான சக்தியை கொடுக்கக்கூடிய இந்திரனையும் நாம் ஆகுதிகளாக ஆராதிக்கிறோம்.*


    *அதில் முதலில் செய்யக்கூடிய தான் ஆகுதிகள் தாதா என்ற தேவதையை உத்தேசித்து. இதைப் பற்றி வேதம் நமக்கு ஒரு அநுவாகத்தில் காண்பிக்கிறது.*


    *நிறைய காமனைகளுக்காக இந்த தேவதையை நாம் ஆராதிக்க வேண்டும் என்று வேதம் காண்பிக்கிறது. முதலில் ஒரு நல்ல வாரிசை பெறுவதற்காக இந்த ஐந்து தேவதைகளை ஆராதிக்கனும் என்று வேதம் காண்பித்து, முதலில் தாதா என்கின்ற தேவதையை ஆராதிக்கனும் பிறகு அனுமதிஹி இராஹா, சினிவாலி, கூஹுஹூ என்கின்ற வரிசையில் ஆராதிக்கனும் நல்ல வாரிசை பெறுவதற்கு. இந்த தேவதைகளின் உடைய வரிசை மாறுபட்டால் பலன்கள் மாறுபடும். இதை வேதம் காண்பிக்கிறது.*


    *இதைப் பற்றி சொல்லும்போது பசு காமனைகளுக்காக ஆராதிக்கலாம் என்று வேதம் காண்பிக்கிறது. நாம் பிறந்தது முதல் சிறிது காலம் வரையிலும் தாய்ப்பால் நமக்கு துணை புரிகிறது. பிறகு நம்முடைய ஆயுட்காலம் வரை நமக்கு துணைபுரிவது பசுவினுடைய பால். பால் என்பது அத்தியாவசியமான பொருள். விரதம் உபவாசம் போன்ற காலங்களில் கூட பால் சாப்பிடலாம் என்று மகரிஷிகள் காண்பிக்கின்றனர். ஏனென்றால் விரதபங்கம் ஏற்படாது

    நமக்கு உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் பாலில் உள்ளது என்பதை காண்பித்து, பசுக்கள் நமக்கு மிகவும் தேவை, ஆரோக்கியமான ஒரு பாலை கொடுக்கக்கூடிய தான பசுக்களின் உடைய எண்ணிக்கை குறைந்தால் இதே ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும் என்று வேதம் காண்பிக்கின்றது.*


    *அப்படி செய்கின்ற பொழுதும், முதலில் தாதா என்கின்ற தேவதையை உத்தேசித்து பசு காமனைகளுக்காக செய்ய வேண்டும் என்று வேதம் காண்பிக்கிறது. நாம் ஒரு ஊரில் நம் முன்னோர்கள் பூர்வீகமான ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமத்தோடு ஒட்டி, அந்த கிராம ஜனங்கள் ஓடு ஒருவருக்கு ஒருவர் அன்யோன்யமாக சமூகமாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.*


    *அந்த ஒரு தொடர்ச்சியை விட்டு விட்டு, உத்தியோகம் குழந்தைகளுக்கு படிப்பு மருத்துவம் இதைக் காரணமாகக் காட்டி நாம் எங்கெங்கோ வந்துவிட்டோம். நம்முடைய பூர்வீகமான கிராமத்தை விட்டோம். பூர்வீகமான குலதேவதை ஆராதனையை விட்டுவிட்டோம். பூர்வீக சொத்துக்களை கைவிட்டு விட்டோம். அல்லது விற்று விட்டோம். இப்படி வந்ததினால், நமக்கு நம்முடைய சொந்தங்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,

    நம் குழந்தைகளுக்கு, ஆண் குழந்தைகளுக்கு பெண்ணும் பெண் குழந்தைகளுக்கு ஆண் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று வாழ்க்கையில் தெரியாமல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.*


    *ஆனால் வேதம், கிராமம் என்றால், கூட்டு வாழ்க்கை என்று அர்த்தம். சேர்ந்து வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தோடு சேர்ந்து ஒற்றுமையோடு வாழ வேண்டும்.*


    *நம் சமூகத்தோடு சேர்ந்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்கின்ற ஆசை இருந்தால் இந்த தேவதைகளை ஆராதிக்க வேண்டும் என்று காண்பித்து, இந்த தாதா என்கின்ற தேவதையை நடுவில் ஆராதிக்க வேண்டும். அதாவது, முதலில் அநுமதி, இராகா என்கின்ற தேவதையை ஆராதித்து, நடுவில் தாதா என்கின்ற தேவதை ஆராதிக்க வேண்டும். அப்படி செய்வதினால் என்ன ஆகிறது என்றால், நாம் நம் சமூகத்தோடு* *ஒற்றுமையாக வாழலாம்*



    *நம்மை பிரதானமாகக் கொண்டு இந்த சமூகமே மேன்மையை அடையும். இப்படி வேதம் காண்பிக்கின்றது. அதேபோல் ஆரோக்கியம் மிகவும் குறைவாக இருக்கிறது என்றால், ஆயுட்காலம் முடிய மருந்துகள் சாப்பிட வேண்டிய ரோகங்கள் இருப்பதால், அப்படி நாம் பீடிக்கப் பட்டால், இந்த ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும் என்று வேதம் காண்பிக்கின்றது.*


    *அப்பொழுதும், நடுவில் தாதா என்கின்ற தேவதையை வைத்து ஆராதிக்க வேண்டும். அப்படி செய்தோமே ஆனால் தீர்க்கமான வியாதிகள் குறையும். மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது குறையும். மன அமைதிக்காக தான் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். அப்படித்தானே, சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம், மாத்திரை சாப்பிட வேண்டும் என்றால், அந்த மாத்திரையை நமக்கு என்ன துணைபுரிகிறது, என்பதை யோசனை செய்து பார்க்க

    வேண்டும். அந்த மருந்து நம்முடைய சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றது என்றால் அதை ஏன் நம்முடைய ஆயுட்காலம் வரைக்கும் நாம் சாப்பிட வேண்டும். அப்பொழுது அந்த மருந்து நமக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டுமோ, அது குறைவாக இருக்கிறது, என்பதை நாம் உணர வேண்டும்.*


    *அப்பொழுது இந்த ஐந்து தேவதைகள் அனுகிரகம் இல்லாமல் அந்த வியாதியை நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியாது, என்பதை நாம் உணர்ந்து இந்த ஐந்து தேவதைகளை நாம் ஆராதிக்க வேண்டும். ஒரு யஞ்கியம் முதல் பெரிய காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால், செயல்படுத்த முடியவில்லை.*


    *நாம் பெரிய காரியங்கள் எல்லாம் பெரிய பெரிய பலனை எதிர்பார்த்து, நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் ஆரம்பமே தடங்களில் வந்து நிற்கிறது. அப்பொழுதும் இந்த ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும்.*


    *இங்கே முதலில் தாதாவை ஆராதித்து, பிறகு மற்ற தேவதைகளை ஆராதிக்க வேண்டும். அல்லது முதலில் பெரிய பெரிய யஞ்யங்கள் எல்லாம் செய்திருப்போம், பலன் குறைவாக இருக்கிறது, முயற்சிகள் நிறைய இருக்கிறது பலன்கள் குறைவாக உள்ளது, அப்பொழுது இதே ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும். இங்கே கடைசியில் தாதாவை ஆராதிக்க வேண்டும்.*


    *இப்படி அந்த தேவதைகளின் உடைய கிரமத்தையும் மாற்றி கொடுக்கிறது வேதம். குழந்தைகளுக்கு, புத்தி சக்தி மிகவும் குறைவாக உள்ளது, ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளது, இதே ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும். இதனால் நமக்கு நிறைய புத்தி சக்தி கிடைக்கிறது. நம்முடைய புத்தியை முழுமையாக நாம் ஈடுபடுத்த முடியும். இந்த நாட்களில் நாம் உபயோகிக்க கூடிய புதிய சக்தி வெறும் 20% தான். மீதமுள்ள 80% நாம் உபயோகப்படுத்தாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம்*


    *நம்முடைய புத்தி சக்தி முழுமையாக பயன்பட வேண்டும் என்றால், இந்த ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும். முதலில் தாதாவை ஆராதித்து, பிறகு மற்ற தேவதைகளை ஆராதிக்க வேண்டும்.*


    *நம் உடம்பில் தேஜஸ் குறைவாக இருக்கிறது மிகவும் சோர்வாக இருக்கிறது சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தால், இந்த ஐந்து தேவதைகளை ஆராதிக்க வேண்டும். இங்கே நடுவில் தாதாவை ஆராதிக்க வேண்டும். இவ்வளவு காமனைகளுக்கா இந்த ஐந்து தேவதைகள் ஆராதனையை வேதம் காண்பித்து, இந்த ஐந்து தேவதைகள் என்னுடைய துணை இல்லாமல் நம்முடைய வாழ்வில், மேன்மையை அடைய முடியாது என்று வேதம் நமக்கு காண்பிக்கிறது.
    *
    *அதில் பிரதானமாக முக்கியமாக உள்ள தேவதை தாதா என்று காண்பித்து, இந்த தேவதையினுடைய அனுக்கிரகத்தினால் தான், உலகத்தில் அனைத்து விதமான மேன்மையும் நாம் அடைகிறோம் என்று வேதம் காண்பிக்கின்றது. இப்படி மிகவும் முக்கியம் பும்ஸவனத்தில் நாம் செய்யக்கூடியது ஆன முதல் நான்கு ஆகுதிகள். மற்ற ஆகுதிகள் முக்கியத்துவத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X