Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *10/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானத்தில் மேலும் தொடர்கிறார்.*


    *அதில் செய்யப்படுகின்ற ஆகுதிகளில், நம்மால் சொல்லப்படுகின்ற மந்திரங்களின் பெருமைகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். இதுவரை நான்கு மந்திரங்களை பார்த்திருக்கிறோம்.*


    *இன்னும் நான்கு மந்திரங்கள் இருக்கின்றன. இதுவரை சொன்ன நான்கு மந்திரங்கள் எங்கு உபயோகப்படுகிறது என்று பார்க்கும் பொழுது, இராஜசூய யாகத்தில் உபயோகப் படுகிறது என்பதை முதலில் நாம் பார்த்தோம்.*


    *ஒரு இராஜாவானவர் நேர்மையான முறையில், நாம் இராஜ்ய பாலனம் செய்ய வேண்டும், மக்கள் நம் சொல் பேச்சு கேட்க வேண்டும், மக்களுக்கு நல்ல நிறைய எண்ணங்கள் ஏற்பட வேண்டும், பொருளாதார வசதியில் இந்த இராஜ்ஜியம் உயர்ந்து நிற்க வேண்டும் இப்படி எந்த இராஜா ஆசைப்படுகின்றாரோ, அந்த இராஜா இந்த இராஜசூய யாகம் செய்ய வேண்டும் என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.*


    *அந்த இராஜசூய யாகத்தில் சில இஷ்டிகள் சொல்லப்படுகிறது. அதில் இதுவும் வருகிறது. இந்த மந்திரங்களைச் சொல்லி செய்யக்கூடியதான இஷ்டியும் வருகிறது.*


    *வேதம் இதற்காகவே ஒரு அனுவாகத்தையும் நமக்கு காண்பித்துள்ளது. இந்த மந்திரத்தை பும்ஸுவனத்தில் மகரிஷிகள் ஏன் காண்பித்து உள்ளனர்? இதில் ஒரு சுவாரசியம் உள்ளது.*


    *இந்த ஐந்து தேவதைகளும் கால தேவதைகள் என்று பெயர். தாதா அனுமதிஹி இராகா சினிவாலி புஹுஹூ என்கின்ற இந்த ஐந்து தேவதைகளும், கால தேவதைகள் என்று பெயர்.*


    *_இந்த ஐந்து தேவதைகளும் பவுர்ணமி அல்லது அமாவாசை ஒட்டி வரக்கூடிய தேவதைகள். ஆகையினாலே தான் நாம் கர்ப்பாதானம் செய்ய வேண்டும், என்று மகரிஷிகள் சொல்கின்ற பொழுது, இதுபோன்ற காலங்களில் கர்ப்பாதானம் செய்யக்கூடாது என்று காண்பித்து, எப்பொழுதுமே ஒரு ஆண் பெண் சேர்க்கை என்பது, பவுர்ணமி அல்லது அமாவாசையில் கூடாது என்று தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது._*



    *_வேதம் இதை நமக்கு நேரடியாகவே சொல்கிறது. இந்த இரண்டு காலங்களில் பெண் சேர்க்கை என்பது கூடாது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. ஏன் அப்படி என்றால், அதுதான் மனிதர்களுக்கும் மற்ற பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம். மற்ற பிராணிகளுக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் கிடையாது. ஒரு பெண்ணான மிருகமாக இருந்தாலும் சரி அல்லது மரம் செடிகொடிகள் ஆக இருந்தாலும் சரி பக்ஷிகள் ஆக இருந்தாலும் சரி தன் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர், அதற்கான தகுதியை அது சம்பாதித்துக் கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட காலம்

    எடுத்துக் கொண்டு, அதன் வாரிசை பெறுவதற்கான தகுதியை சம்பாதித்துக் கொள்கிறது. அது வரையிலும் அதற்கு கிடையாது. அதனால்தான் மரம் செடி கொடிகள் பசு பக்ஷிகள் எல்லாம் பருவத்துக்கு வருகிறது, என்று ஒரு காலம் உண்டு. ஆனால் மனிதர்களுக்கு அப்படி கிடையாது. ஸ்திரீகள் எப்போதும் தயாராக இருப்பார்கள் குழந்தையைப் பெற்றுகொள்வதற்கு. அதை ஒரு வரமாகவே ஸ்த்ரீகள் அடைந்தார்கள் என்று வேதம் ஒரு சரித்திரம் ஆகவே காண்பிக்கிறது._*


    *அப்படி எப்பொழுதும் குழந்தையை பெறுவதற்கான தகுதியோடு பெண்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில், அவர்களுடைய உடல் சுத்தி செய்யப்படுகிறது. அது மூன்று இடங்களில் செய்யப்படுகிறது. அதில் ஒன்று தான் பகிஷ்டா (தீட்டு) காலம் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது அம்மாவாசை பௌர்ணமி இந்த இரண்டு காலங்களில் என்பதினால்தான் அந்த சமயங்களில் கர்ப்பாதானம் முதற்கொண்டு செய்யக்கூடாது என்று மகரிஷிகள் காண்பித்துள்ளனர். அந்த சமயத்தில்தான் இந்த கால தேவதைகள் உடைய ஆதிக்கம் நமக்கு இருக்கிறது.*


    *அந்தக் கால தேவதைகள் அனுக்கிரகத்தினால் தான் நமக்கு நல்ல சந்ததிகள் கிடைக்கிறது. நாம் இந்த பும்ஸுவனம் என்கின்ற அனுஷ்டானத்தை சிரத்தையாக இந்த ஹோம மந்திரங்களை நன்றாக சொல்லி செய்யா விடில், நாம் வாழ்க்கையில் என்னவெல்லாம் அடைய வேண்டும் என்று நினைத்தோமோ அதை அடைவதற்கு கஷ்டப்படுவோம் என்று ஒரு அனுவாகத்தில் வேதம் நமக்கு காண்பிக்கிறது.*


    *இந்த பும்ஸுவன அனுஷ்டானத்தில் மந்திரங்களை நன்றாக சொல்லி செய்யாவிடில், நாம் சில காமனைகளுக்காக இதே கால தேவதைகளை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டி வரும். ஏனென்றால் ஒரு நல்ல ஆரோக்கியமான வாரிசை நமக்கு கொடுப்பவர்கள் இந்த ஐந்து தேவதைகள்.*


    *இந்த ஐந்து தேவதைகளையும் நாம் பும்ஸுவனம் மற்றும் ஸீமந்நத்தில் ஆராதிக்கின்றோம். இந்த இரண்டிலும் இந்த தேவதைகளை நாம் ஆராதனை செய்யாமல் விட்டால், நாம் கட்டாயம் சில காமனைகளை இந்த தேவதைகளிடமிருந்து எதிர்பார்ப்போம் என்று வேதம் காண்பிக்கிறது*


    *அந்த அனுவாகத்தில் கடைசியில் சொல்கின்ற பொழுது, இந்த காலங்களுக்கு தேவதைகள் இவர்கள் என்று வேதம் நமக்கு காண்பிக்கிறது. அதாவது சுக்கில பக்ஷ தேவதை இராஹா. அபர பக்ஷம் அதாவது கிருஷ்ண பக்ஷம் தேவதை புஹுஹூ. அமாவாஸ்யா சினி வாலி பௌர்ணமாஸ்சியா என்கின்ற தேவதைதான், அனுமதிஹி. தாதா என்கின்ற தேவதை, சந்திரன். இப்படி இந்த காலத்திற்கான தேவதைகள் இவர்கள்.*


    *இந்த தேவதைகளை தான் பும்ஸவனம் மற்றும் சீமந்தத்தில் ஆராதிக்கின்றோம். இந்த ஐந்து தேவதைகளையும் சொல்லி ஆராதிக்க வில்லையே தவிர, அதில் முதல் தேவதையான தாதா என்கின்ற தேவதையை கொண்டு, இந்த ஆகுதிகளை செய்கிறோம்.*


    *இதனால் இந்த ஐந்து தேவதைகளின் உடைய அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கின்றது என்றால், ஒரு கர்ப்பத்தில் குழந்தை உற்பத்தி ஆகின்றது, இந்த ஐந்து தேவதைகளின் உடைய அனுக்கிரகத்தினால் தான் என்று முதலில் பார்த்தோம்.*


    *அதாவது தாதா என்றால், சிருஷ்டி கர்த்தா என்று பெயர். ஒரு கர்ப்பத்தில் ஒரு சிசுவை தரிப்பதற்கும், அந்த கர்ப்பத்தை போஷிப்பதற்க்கும் மாக, உள்ள தேவதைதான் தாதா. அனுமதிஹி என்கின்ற தேவதை, அந்தக் குழந்தைக்கு நல்ல மனநிலை ஏற்படுகிறது. கணவன் மனைவி இருவருக்கும் ஒருமித்த மனசு இருந்தால்தான் கர்ப்பத்தில் குழந்தை ஏற்படும். அது மட்டுமில்லாமல் இருவரும் ஒப்புக் கொண்டு ஒத்துக்கொண்டு ஒரு குழந்தையை உற்பத்தி

    செய்கிறார்கள். அந்தக் குழந்தை நல்ல மனநிலையில் நமக்கு அமைவதற்கு இந்த அனுமதிஹி என்கின்ற தேவதை துணைபுரிகிறது. இராஹா என்றால், அந்தப் பெண்ணிற்கு அந்த கர்ப்பத்தை தரிக்க கூடியதான சக்தியை கொடுக்கிறது.*


    *சினி வாலி என்கின்ற தேவதை, அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது. கூஹுஹூ என்கின்ற தேவதை அந்தப் பிரசவ காலத்தில் உதவி புரிகிறது. இப்படி இந்த ஐந்து தேவதைகளையும் நாம் ஆராதிக்கிறோம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X