Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *26/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் இரண்டாவதாக உள்ள பும்ஸுவனம் என்பதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*
    *இந்தப் பெயர் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி பார்த்தோம். அதாவது 60 நாள் கர்ப்பம் உறுதியான உடன், மூன்றாவது அல்லது நான்காவது மாதத்தில் இந்த பும்ஸுவனம் செய்ய வேண்டும் என்பதைப் பார்த்தோம் ஆபஸ்தம்பர் இதை காண்பித்தார் என்பதை தெரிந்துகொண்டோம்.*


    *அதற்குள் செய்துவிட வேண்டும் அதற்குப் பிறகு செய்வது என்பது எதோ கணக்குக்காக செய்வோம் அவ்வளவுதான். சரியான காலத்தில் இந்த பும்சவனம் செய்தால்தான் அதற்கான பலனை நாம் அடைய முடியும். என் நாளில் சீமந்த தோடு சேர்த்து அதை செய்வது என்கின்ற ஒரு வழக்கம் வந்துவிட்டது. ஆனால் இவை இரண்டுக்கும் காலங்கள் வேறு வேறு.*


    *இந்த பும்ஸுவனம் செய்வதற்கான காலம் மூன்று அல்லது நான்காவது மாதங்கள் வரையில் தான் என்று மகரிஷிகள் காண்பித்துள்ளனர். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் நான்காவது மாதத்தை தாண்டி சீமந்தத்தோடு இந்த பும்ஸுவனத்தை செய்தால், என்னவாகும் என்றால் - முதலில் சீமந்தத்தை செய்துவிட்டு பிறகு பும்ஸவனம் செய்ய வேண்டும்.*


    *மாறிப் போய் விடும் ஏன் அப்படி என்றால் உதாரணத்திற்கு, சந்தியாவந்தனம் நமக்கு வைத்திருக்கிறார்கள். ப்ராதஸ் சந்தியா காலை வேளையில் சூரிய உதயம் முன்பு செய்ய வேண்டும். மாத்யானிகம் என்பது நடுவில் சூரியன் இருக்கும் பொழுது செய்ய வேண்டும். சாயம் சந்தியா மாலைவேளையில் அஸ்தமன நேரத்தில் செய்ய வேண்டும்.*


    *இப்படி மூன்றுக்கும் தனித்தனியாக காலங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. நம் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு இந்த விஷயங்களைப் பார்க்கும் பொழுது, காலை வேளையில் நம்மால் சந்தியாவந்தனம் செய்ய முடியாது போனால், அதை செய்வதற்கு எப்பொழுது வரையிலும் காலம் என்றால், மாத்யானிகம் காலம் ஆரம்பிக்கும் வரையிலும் ப்ராதஸ் சந்தியாவிற்கு காலம் உண்டு.*


    *மாத்யானிகம் காலம் ஆரம்பமாகிவிட்டது என்றால் அப்போது என்ன செய்யலாம், முதலில் மாத்யானிகம் செய்துவிட்டு பிறகு ப்ராதஸ் சந்தியா செய்ய வேண்டும். அதேபோல்தான் மாத்யானிகம் செய்யவில்லை, அதற்குள் சாயம் சந்தியா வந்துவிட்டது என்றால், சாயங்காலம் 5 மணி வரையிலும், மாத்யானிகம் செய்வதற்கு காலம் உண்டு. ஆனால் சாயம் சந்தியா காலம் வந்துவிட்டது என்றால், முதலில் சாயம் சந்தியா செய்ய வேண்டும். விட்டுப்போன மாத்யானிகம் செய்ய வேண்டும். இதுதான் நம்முடைய சாஸ்திரத்தின் பார்வை.*


    *அதேபோல் காலை சந்தியாவந்தனம் விட்டுப் போய்விட்டது மாத்யானிகம் விட்டுப் போய்விட்டது என்றால் சாயங்காலம் சந்தியாவந்தனம் வந்துவிட்டது, 5 மணிக்குள் இருந்தால் முதலில் மாத்யானிகம் பின்பு காலையில் செய்ய வேண்டியது அதன் பிறகு சாயம் சந்தியா செய்ய வேண்டும்.*


    *இல்லை சாயங்காலம் செய்ய வேண்டிய சந்தியாவந்தன காலம் வந்துவிட்டது என்றால், முதலில் சாயங்கால சந்தியா செய்ய வேண்டும். பிறகு விட்டுப்போன வரிசையில் செய்ய வேண்டும் அதாவது ப்ராதஸ் சந்தியா பிறகு மாத்யானிகம் செய்ய வேண்டும். இது எல்லாம் நம்முடைய சாஸ்திரங்களில் நிர்ணயம் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.*


    *எதை நாம் செய்ய இருந்தாலும் நம்முடைய தர்ம சாஸ்திரம், இப்படி செய் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படித்தான் நாம் செய்ய வேண்டுமே தவிர நம்முடைய மனம் போன போக்கில் செய்தால் அது செய்தது ஆகவே ஆகாது என்று சாஸ்திரங்கள் தீர்மானித்து நமக்கு காண்பித்துள்ளது.*


    *அதுபோல இந்த பும்ஸுவனம் என்பது, நான்காவது மாதம் வரையில் தான் அதற்கான காலம் சொல்லப்பட்டிருக்கிறது. நான்காவது மாதத்திற்கு மேல் நாம் பும்ஸுவனம் செய்ய வேண்டி இருந்தால், சீமந்தத்தை செய்து அதன் பிறகு பும்சவனம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தை வைத்துப் பார்க்கும் போது இவ்வாறு தெரிகிறது.*


    *அல்லது இன்னும் ஒரு வழியையும் சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. சீ மந்தத்தையும் பும்ஸவனத்தையும் சேர்த்தே செய்யக்கூடாது என்பதுதான் நம்முடைய சாஸ்திரம். இது விஷயமாக தர்ம சாஸ்திரம் சொல்லும் பொழுது, பும்ஸுவனம் என்பது சீமந்தத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். பிறகு சீமந்தம் செய்ய வேண்டும்.*


    *இரண்டையும் சேர்த்து செய்தால் முதலில் சீ மந்தத்தையும் பிறகு பும்ஸவனத்தையும் செய்ய வேண்டி வரும்.*


    *இரண்டையும் சேர்த்து செய்யக்கூடாது என்பதை தர்மசாஸ்திரம் காட்டுகிறது. மூன்றாவது மாதத்தில் நாம் பும்ஸவனம் செய்தால் நான்காவது மாதத்தில் சீமந்தம் செய்ய வேண்டும். நான்காவது மாதத்தில் பும்ஸுவனம் செய்தால் ஆறாவது அல்லது ஏழாவது மாதத்தில் சீமந்தம் செய்ய வேண்டும். இதை தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*


    *இரண்டையும் சேர்த்து செய்யக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது. அப்படி செய்வதற்கு நேர்ந்தால் முதலில் சீமந்தம் செய்துவிட்டு பிறகு பும்ஸவனம் செய்ய வேண்டும். எப்படி நாம் சந்தியாவந்தனத்தில் பார்த்தோமோ அதேபோல் செய்ய வேண்டி வரும். அதனால் இந்த காலம் என்பது மிகவும் முக்கியம்.*


    *ஆண் நட்சத்திரத்தில் முதலில் நாம் பார்த்ததுபோல் மூன்றாவது அல்லது நான்காவது மாதத்தில் இதை செய்ய வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X