Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    *25/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி அதாவது எப்பொழுது செய்யவேண்டும் யார் செய்ய வேண்டும் எந்தக் காலத்தில் அதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் அப்படி செய்யவில்லை என்றால் அதனால் விளையக்கூடிய துன்பங்கள் என்ன என்பதை மிக விரிவாக இதுவரை பார்த்தோம்.*


    *இதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்யாணமான குழந்தைகளுக்கு இதனுடைய முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த கர்ப்பாதானம் என்பதை நாம் விரிவாக பார்த்து முடித்த பிறகு அடுத்ததாக இரண்டாவது சம்ஸ்காரம் பார்க்க இருக்கிறோம்.*


    *கர்ப்பாதானம் என்பது முதலாவதாக உள்ள சம்ஸ்காரம் ஒவ்வொரு ஜீவன்களுக்கும். ஒவ்வொரு புருஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும். இரண்டாவது சம்ஸ்காரம் பும்ஸுவனம்.*


    *இதற்கு பும்ஸுவனம் என்று ஏன் பெயர் வந்தது என்று பார்ப்பதற்கு முன்னர், ஆபஸ்தம்பர் இந்த சம்ஸ்காரம் பற்றி சொல்லும் பொழுது, இதை எப்போது செய்ய வேண்டும் என்றால், இந்த கர்ப்பத்தில் ஒரு குழந்தையானது உற்பத்தி ஆகிவிட்டது என்று தீர்மானம் ஆன உடனேயே செய்யப்பட வேண்டும் இந்த பும்ஸுவனம்.*


    *இந்த கர்மாவிற்கு பும்ஸுவனம் என்ற பெயர் ஏன் வந்தது என்றால், ஒவ்வொரு மகரிஷிகளும் ஒவ்வொரு மாதிரியான அர்த்தங்களை காண்பித்துள்ளனர். அவசியம் தேவை என்று நமக்குத் தெரிய வருகிறது.*


    *இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்றால் ஆண் நட்சத்திரத்தில் இது செய்யப்பட வேண்டும் அதனால் இதற்கு பும்ஸுவனம் என்று பெயர். ஒரு ஆண் காரணமாக கர்ப்பம் உற்பத்தி ஆகி இருக்கிறது. அந்த ஆணிற்கு இதை செய்து வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதினால் இதற்கு பும்ஸுவனம் என்று பெயர் என்று ஒரு மகரிஷி சொல்லி இருக்கிறார்.*


    *இன்னும் ஒரு மகரிஷி இதற்கு பும்ஸவனம் என்று சொல்கிறார். அதாவது கர்ப்பத்தில் குழந்தை உற்பத்தி ஆகி விட்டது. அந்த குழந்தை முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவது இந்த கர்மா/பும்ஸவனம்.*


    *இன்னும் ஒரு மகரிஷி பும் அப்படி என்றால் ஒரு ஆண் வஸ்து இருக்கிறது. ஒரு வஸ்துவை வைத்துக்கொண்டு இந்த கர்மாவை செய்ய வேண்டும். அந்த வஸ்து ஆண் தன்மை உடையதாக இருக்க வேண்டும். அதனால் இதற்கு பும்சவனம் என்று பெயர்.*


    *அது என்ன வஸ்து என்பதை பின்னால் பார்க்க இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு மகரிஷிகளும் ஒவ்வொரு காரணத்தை காண்பித்திருக்கிறார்கள் அந்த பெயருக்கு. நமக்கு அவ்வளவு காரணங்களும் பொருந்தும். அதாவது ஒரு ஆண் மூலம் உற்பத்தியான கர்ப்பத்திற்கு ஆணே செய்து வைக்க வேண்டும் என்பதும் நமக்கு பொருந்துகிறது. ஆண் வஸ்துவை கொண்டு இதை செய்ய வேண்டும் என்பதினால் இதுவும் பொருந்துகிறது. ஆண் நட்சத்திரத்தில் நாம் செய்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


    *பிறக்கப்போகும் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும் என்பதும் நமக்கு எண்ணம் தானே. ஆக இவ்வளவும் நமக்கு பொருந்துகிறது. இந்த பும்ஸுவனம் என்பதை எப்போது செய்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தில் ஒரு குழந்தை உற்பத்தி ஆகி விட்டது என்று தீர்மானம் ஆனவுடனேயே செய்ய வேண்டும் என்று ஆபஸ்தம்பர் காண்பிக்கிறார்.*


    *எப்படி தீர்மானம் நமக்குத் தெரியும் என்றால், பிரகஸ்பதி சொல்கிறார், கர்ப்பாதானம் என்பதை எப்பொழுது செய்து கொள்ள வேண்டுமென்றால், பகிஷ்டை அதாவது (தூரம்) ஆன நான்காவது நாளிலிருந்து பதினாறாவது நாளுக்குள் அந்த ருது காலத்தில் செய்ய வேண்டுமோ, அதேபோல் கர்ப்பத்தில் ஒரு சிசுவானது மெதுவாக அசையும் பொழுது இதை செய்ய வேண்டும் என்பதை காண்பித்துள்ளார்.*


    *லேசான ஒரு அசைவு தெரிந்தவுடன் இந்த பும்ஸுவனம் என்கின்ற கர்மாவை செய்ய வேண்டும் பிரகஸ்பதி என்கின்ற மகரிஷி காண்பித்துள்ளார். வேண்டிய காலம் என்று நாம் பார்த்தோமேயானால் மூன்றாவது மாதம் ஆரம்பத்தில் இதை செய்ய வேண்டும். ஸ்நானம் ஆனதிலிருந்து 60 நாட்கள் கழித்து, கர்ப்பத்தில் சிசு உற்பத்தி ஆகி இருக்கிறதா என்பது தீர்மானமாகும்.*


    *திரிதியே மாசி இன்று மகரிஷிகள் காண்பிக்கிறார்கள். சில பேர்களுக்கு மூன்றாவது மாதத்தில் தீர்மானமாக தெரியாது, அதனால் நான்காவது மாதத்தையும் சில மகரிஷிகள் காண்பித்துள்ளனர். மூன்றாவது அல்லது நான்காவது மாதத்தில் கர்ப்பத்தில் ஒரு குழந்தை உற்பத்தி ஆகி விட்டது என்ற தீர்மானமான உடனே செய்ய வேண்டும்.*


    *ஏனென்றால் இது பெண்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டிய விஷயமாக இருப்பதினால், பெண்கள் எப்போது தீர்மானமாக சொல்கிறார்களோ, அப்போதுதான் இந்த பும்ஸவனம் என்பதை செய்ய வேண்டும் இது லோகப் பிரசித்தி தானே என்று அந்த மகரிஷி சொல்கிறார்.*


    *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X