Announcement

Collapse
No announcement yet.

bhagya suktham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bhagya suktham

    22/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் பாக்கிய சூக்தம் பற்றி விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.*


    *காலை வேளையில் நாம் எந்த ஒரு காரியங்களை செய்வதற்கு முன்பும் இந்த பாக்கிய சூக்த்தை சொல்வது என்று வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளோம். இதில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்கள் நமக்கு என்னென்ன பலன்களை அனுகிரகம் செய்கிறது என்பதை பார்த்துக் கொண்டு வருகிறோம்.*


    *அதில் இதுவரை ஐந்து மந்திரங்களை விரிவாக தெரிந்து கொண்டோம். இது ஆறாவது மந்திரம். உக்ஷக் காலத்தில் நமக்கு துணை இருந்து அனுக்கிரகம் செய்ய கூடியதான தேவதைகளை குறிக்கின்றது.*


    *சூரியன் சந்திரன் முதலிய கிரகங்கள் அக்னி தேவ இராஜாவான இந்திரன் இவர்கள் அனைவரும் தான் நமக்கு காலை முதல் நம் கூடவே இருந்து நமக்கு நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி, நல்ல செயல்களை நமக்கு செய்து வைக்கிறார்கள்.*


    *இவர்கள் அனைவரையும் பார்த்து இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது, இந்த உஷத் காலமுதல் எங்களுக்கு கூடவே இருந்து துணை வருகின்ற தேவதைகளே, நான் இன்றைக்கு ஆரம்பிக்கக் கூடிய எந்த ஒரு அனுஷ்டானம்/ஜெபங்கள்/பூஜை/ஹோமம் ஆகட்டும், இவைகளுக்கு அனைவரும் வரணும். இதை எங்களுக்கு நீங்கள் அனைவரும் வந்து நடத்திக் கொடுக்க வேண்டும்.*


    *எது போல் என்றால், அக்கினியாதானம் என்று ஒரு அனுஷ்டானம் இருக்கிறது. நாம் கல்யாணம் செய்து கொண்டது முதல் நம்மிடத்தில் இருக்கின்ற ஔபாசனா அக்னி முதல் அதிலிருந்து ஓர் அக்னியைப் பிரித்து அக்னிகோத்ரி அக்னியை எடுத்துக் கொள்வதுதான் இந்த ஆதானம் என்பது. இதை செய்து கொள்ளும் போது, அந்த அக்னிக்கு அபாரமான சக்திகள் வேண்டும் என்பதற்காக சில காரியங்களை செய்கிறோம்.*


    *அதாவது நாம் எதையெல்லாம் பிரார்த்திக்கின்றோமோ அவ்வளவையும் அந்த அக்னி நமக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். முக்கியமாக நாம் இருக்கக்கூடிய தேசத்தையும் நம்மையும், ஆரோக்கியமாக காப்பாற்ற வேண்டும். எந்த ஒரு கெட்டவைகள் மூலமாகவும் நமக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.*


    *அந்த அக்னி இருக்கின்ற இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். எந்த ஒரு கெட்ட சக்திகளும் வேலை செய்யக்கூடாது, அந்த அளவுக்கு அந்த அக்னியை நாம் உற்பத்தி செய்கிறோம். அதற்காகத்தான் சில மண்கள் சில மரத்தினுடைய பட்டைகள் சில மரங்களின் உடைய இலைகள் இவைகளையெல்லாம் அந்த அக்னி வைக்கக்கூடிய இடத்தில் வைத்து ஏனென்றால் அந்த அக்னிக்கு முழுமையான தேஜஸ் வரவேண்டும்.*


    *அக்னி என்னுடைய தேஜஸ் அதாவது சக்தி பல இடங்களில் இருக்கிறது. அவையனைத்தையும் மந்திரம் சொல்லி ஓரிடத்தில் வைத்து அங்கே அந்த அக்னியைப் பிரதிஷ்டை செய்கிறோம்.*


    *அப்படி பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு, குதிரையை கூட்டிக் கொண்டு போக வேண்டும். அந்தக் குதிரை யானது அக்னி வைக்கக்கூடிய இடத்திலே, தன்னுடைய முன் வலது காலை வைத்து விட்டுப் போகும் அந்த இடத்தில். அப்படி சுற்றி அழைத்துக்கொண்டு வர வேண்டும் அந்த குதிரையை.*


    *அந்தக் குதிரையின் கால் பட்ட இடத்தில் இந்த அக்னியை வைத்து விட்டால், அந்த அக்னிக்கு மிகவும் தேஜஸ் கிடைக்கிறது. எதற்காக குதிரையின் உடைய காலை அங்கு வைக்கிறோம் என்றால், எந்த தேவதையை கூப்பிட்டாலும் உடனே அந்த தேவதை வரவேண்டும். அந்த அக்னியில் ஆகுதியை பெறுவதற்காக உடனே வர வேண்டும். எப்படி அந்த குதிரையின் உடைய பாதத்தை அங்கு வைத்து எடுத்து பிறகு அங்கு அக்னியை வைக்கிறோமோ, ததிக்ராவா என்று அந்தக் குதிரைக்கு பெயர் அக்னியின் தேஜஸ் உடையது.*


    *அப்படி சீக்கிரமாக தேவதைகள் எல்லாம் வரவேண்டும் என்பதற்காக குதிரை னுடைய பாதத்தை அங்கு வைத்து தேவதைகள் எல்லாம் துரிதமாக வருகின்றார்களோ, அதேபோல் நீங்கள் துரிதமாக வரவேண்டும்.*


    *இன்னுமொரு உதாரணம் வேதம் காண்பிக்கின்றது. மேலும் இதுபோல ஒரு வண்டியில் குதிரையை பூட்டினால், வாஜி என்று குதிரைக்கு பெயர். எதிர்பாராத அளவு வேகமாக செல்லக்கூடியது என்பது தான் வாஜி என்று பொருள்.*


    *அதனால் தான் மோட்டார் எல்லாம் நாம் ஆர்ஸ் பவர் என்று சொல்வோம். குதிரை திறன். வேகத்தை கணக்கிடும் முறை. அப்படி ரதத்தில் கட்டிய குதிரை எவ்வளவு வேகமாக போகுமோ, அதுபோல் நீங்கள் துரிதமாக வரவேண்டும். வந்து என்ன செய்ய வேண்டும் என்றால், எப்படி துரிதமாக வரவேண்டும் கையில் என்ன எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றால், நாம் ஒருவரைப் பார்க்கப் போகிறோம் என்றால் வெறும் கையோடு போகக்கூடாது. ஏதாவது ஒன்றை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து விட்டு பார்த்துவிட்டு வரவேண்டும்.*


    *குழந்தைகளைப் பார்க்க போனால் அவர்களுக்கு பிடித்தமான பட்சணங்களை செய்துகொண்டு போக வேண்டும். கல்யாணமான தம்பதிகள் ஒரு முகூர்த்தம் விசாரிக்க போகிறோம் என்றால், அவர்களுக்கு உபயோகப்படும் படியான ஒரு வஸ்துவை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும்.

    வயதானவர்களை பார்க்கப்போனால் பழங்களை வாங்கிக்கொண்டு கொடுத்து பார்த்துவிட்டு வரவேண்டும். அதுபோல் ஒரு யாகத்திற்கு கும்பாபிஷேகத்திற்கு போனால், சமித்து தர்பை இவைகளை வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு போனால் புஷ்பம் வாங்கிக்கொண்டு போக வேண்டும். அல்லது எண்ணெய் ஆவது வாங்கிக்கொண்டு போக வேண்டும். வெறும் கையோடு எங்குமே போகக்கூடாது.*


    *அதுபோல தேவதைகளான நீங்கள், எங்களுக்கு என்ன எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றால், ஐஸ்வர்யம் எங்களுக்கு நிறைய கொடுப்பவர்களையும், ஆரோக்கியத்தை/நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு கொடுப்பவர்களையும், அழைத்துக் கொண்டு வர வேண்டும். இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*


    *ஆவகந்து இத்தனை பேர்களை தேவதைகளான நீங்கள் கூட்டிக்கொண்டு, இன்றைக்கு நான் செய்யக்கூடியது ஆன அனைத்து ஜப ஹோமங்கள் அனுஷ்டானங்களில், நீங்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும், நாங்கள் பிரார்த்திக்க கூடியதான அனைத்து பலன்களையும் தேவதைகளான நீங்கள் எங்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X