21/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொண்டதும் மேலும் தொடர்கிறார்.*
*கர்ப்பாதானம் ஆனபிறகு கணவன்-மனைவிக்குள் ஒரு கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. ஆரோக்கியமாகவும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல குழந்தைகளை பெற முடியும். ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதனால் தான் வேதம் கர்ப்பாதான மந்திரத்தை அனுக்கிரகம் செய்து, இந்த மந்திரங்களையும் அனுகிரகம் செய்துள்ளது. தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவதற்கான மந்திரங்கள் இது.*
*அந்த மந்திரங்களை தான் நாம் பாக்ய சூக்தம் என்று சொல்கிறோம். எந்த ஒரு காரியத்தை நாம் ஆரம்பிப்பதற்கு முன்பு இதை சொல்லிவிட்டு ஆரம்பிப்பது என்று வழக்கத்தில் வைத்துக் கொண்டுள்ளோம்.*
*நிறைய பலன்களை இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றது. தம்பதிகள் குடும்பம் சமூகம் மற்றும் நம் தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஒற்றுமையை இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றது.*
*அதில் மூன்று மந்திரங்களை நாம் விரிவாகப் பார்த்தோம். அடுத்ததாக நான்காவது மந்திரம், ஏ பஹா மேலும், இப்பொழுது வரையிலும் பஹனான உன்னோடு கூடவே நாங்கள் இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு பகன் நம்முடன் இருக்கிறார் என்ற தைரியத்தோடு இருக்க வேண்டும்.*
*இப்போதுவரையிலும் என்றால் இந்த சமயத்தில் மட்டுமல்ல, சாயங்காலம் ஆக இருந்தாலும்/மாத்தியான்னிக/இராத்திரி காலமாக இருந்தாலும் சரி எப்பொழுதும் நீ எங்கள் கூடவே இருக்கவேண்டும். மேலும் சூரியன் உதயமாகும் வரை, இன்று ஆரம்பித்து நாளை காலை உதயமாகும் வரை, இந்திரன் போல் உருவமுள்ள ஏ பஹா தேவதைகளுக்கும் தேவனாக எப்படி இந்திரன் உயர்வாக/நாயகனாக/தலைமைப் பொறுப்பில் இருக்கிறாரோ, அதேபோல் நாங்கள் ஒற்றுமையோடு கூட இருக்க வேண்டும்.*
*எந்த ஒரு பதவிக்கோ / பணத்திற்கோ அல்லது எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் ஆசை என்பது இல்லாமல், ஒற்றுமையோடு நாங்கள் வாழ வேண்டும். தம்பதிகளாக நாங்கள் இருந்தால் எங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். கொண்டும் எங்களுக்குள் மனக்கசப்பு / கருத்து வேறுபாடு ஏற்பட கூடாது. ஒற்றுமையானது எங்களுக்குள் இருக்க வேண்டும்.*
*மேலும் இந்த சமூகத்தோடு எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து நாங்கள் இருக்க வேண்டும். ஒத்துப்போக வேண்டும். பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்டு நடப்பது, என்கின்ற குணம் எங்களுக்கு அதிகமாக வர வேண்டும். அவரவர்கள் நானே இராஜா நானே மந்திரி என்கின்ற எண்ணங்கள் இல்லாமல், ஒருவர் சொல்வது மற்றவர்கள் அதைக் கேட்டு நடப்பது, என்பது எங்கள் குடும்பத்தில் இருக்க வேண்டும். கணவன்-மனைவிக்குள் அது இருக்க வேண்டும்.*
*இந்த சமூகத்தில் அது இருக்க வேண்டும் அதற்காக, பஹன் ஆன நீங்கள் தான் எங்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றது இந்த மந்திரம்.*
*இது அடுத்த மந்திரம் ஐந்தாவது. ஏ பஹா, இதுவரை நாங்கள் பிரார்த்தித்தது அனைத்தையும் கொடுப்பவராகவும் எங்கள் கூடவே நீங்கள் இருந்து, எங்களுக்கு தலைவனாக இருந்து எங்களை வழிநடத்த வேண்டும். அதனால் நாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தைரியமாக மன உறுதியோடு கூட ஆரோக்கியமாக நாங்கள் இருக்க வேண்டும்.*
*அதற்கு நீங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் பஹனான உங்களை அனைவரும் அழைக்கிறார்கள். காலை வேளையில் சூரிய உதயத்தை அனுசரித்து தான், அனைவரும் வாழ்க்கையை நடத்துகின்றனர்.*
*மனிதர்கள் மட்டும் அல்ல பசு பக்ஷிகள், மரம் செடி கொடிகள் அனைத்துமே, சூரியனான பஹன்னான உங்களை அனுசரித்து தான் அனைவரும் இங்கு நாங்கள் வாழ்கிறோம். அனைவரும் உங்களை விரும்புகிறார்கள்.*
*அதற்காகத்தான் உங்களை அனைவரும் ஆராதனை செய்கிறார்கள். லாபம் இல்லாமல் ஒருவரை ஒருவர் ஆராதிக்க மாட்டார்கள். வணக்கம் கூட சொல்ல மாட்டார்கள். நமஸ்காரம் என்று சொல்ல வேண்டுமானால் அவன் மூலம் நமக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்று பார்த்து தான் சொல்வோம்.*
*அதனால் அது மனிதனுடைய குணம் அல்ல. எந்தப் பெரியவர்களை எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் என்று சொல்ல வேண்டும். சிறியவர்களை பார்த்தால் இரண்டு வார்த்தை பேச வேண்டும் பெரியவர்களிடம் நமஸ்காரம் என்று சொல்ல வேண்டும். அதுதான் ஒற்றுமையை அதிகப்படுத்தும்.*
*நாம் போகிறோம் நம்ம காரியத்தை ரோட்டில் யார் பார்க்கப் போகிறார்கள் என்று அலட்சியமாக போவது. இது மிகவும் தவறானது இது கூடாது. எந்தப் பெரிய வரை பார்த்தாலும் நமஸ்காரம் என்று சொல்ல வேண்டும். இது எல்லாம் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.*
*அதை சொல்லிக் கொடுக்கத் தவறினால் அதன்மூலம் நாம் நிறைய இழக்க வேண்டி வரும். முக்கியமாக நாம் நம்முடைய குழந்தைகளை இழக்க வேண்டி வரும். அப்படி அனைவரும் இந்த தேசத்தில், பஹனான உங்களை எதற்காக எதிர்பார்க்கிறார்கள் என்றால், தன்னுடைய வாழ்க்கைக்கு தான்.*
*அவன் அவன் சுகமாக வாழ வேண்டும் எனக்கு பணம் வேண்டும். நான் சுகமாக வாழ வேண்டும் என்று தான் ஒவ்வொருத்தரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு லாபத்தையும் பார்க்காமல் இவன் நம்மை பார்க்கிறானா, இல்லையா என்கிற, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், இருக்கக் கூடியவன் ஒருவன் சூரியன்தான்.*
*அப்படிப்பட்ட சூரியனான உங்களை நான் பிரார்த்தனை செய்கிறேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். அந்த மாதிரியான நல்ல குணங்களை எங்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். அதனால் இந்த உலகத்தில் நாங்கள் நல்ல மேன்மையை அடைய வேண்டும் என்று இந்த வந்தரம் பிரார்த்தனை செய்கிறது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*