*05/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமையும் அது சொல்லக்கூடிய முறையும் அர்த்தங்களையும் பார்த்துக் கொண்டு வருவதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*
*12 ஆகுதிகள் செய்து முடித்த பிறகு உபஸ்தானம் செய்ய வேண்டும். மிகவும் முக்கியமானதொரு மந்திரம் இது. மிகவும் அற்புதமாக பிரார்த்திக்கின்றது.*
*நாம் உபயோகிக்கக் கூடிய அனைத்து வஸ்து களுக்கும் அபிமானி தேவதா பஹஹா. என்னை நீ எப்பொழுதும் என் அருகிலேயே இருந்து காத்தருள வேண்டும். என்னை அனைவருக்கும் தெரியும் படியாக நீ செய்ய வேண்டும். நான் படித்த படிப்பு அனைவருக்கும் உபயோகமாக இருக்க வேண்டும், படிப்பு விஷயமாக நான் பட்ட சிரமங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் அப்படி நீ என்னை செய்ய வேண்டும். எப்பொழுதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் என்னை விட்டு விலகி சென்று விடக்கூடாது என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது.*
*இப்படியாக இந்த உப ஸ்தானத்தை முடித்து, பிறகு ஜெயாதி முதற்கொண்டு உத்திர தந்திரத்தை செய்து அந்த கோபத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.*
*இதுதான் ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறை. அடுத்ததாக இந்த ஹோமத்தை யார் யாரெல்லாம் செய்யலாம் எப்பொழுது செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.*
*இந்த ஆவஹந்தி ஹோமத்தை அனைவருமே செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து செய்யலாம். அதேபோல எந்த வேத காரர்களும் செய்யலாம். எந்த சூத்திர காரர்களும் செய்யலாம்.*
*இது யஜுர்வேதத்தில் சொல்லப்பட்டதினால், அவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அனைத்து வேதக்காரர்களும் இதை செய்யலாம்.*
*தன்னுடைய வேதம் மற்றும் சூத்திரத்தில் இல்லாவிடில் மற்ற வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் எல்லா வேதகாரர்களும் இதை செய்யலாம் ஆனால் முதலில் அந்த மந்திரங்களை அத்தியனம் செய்து கொள்ள வேண்டும்.*
*ஒரு குருவை வைத்து அந்த மந்திரங்களை அத்தியனம் செய்து கொண்டு இந்த ஹோமத்தை செய்ய வேண்டும். அவரவர்களுடைய ஆசாரப்படி அந்த அக்னி முகத்தை செய்து இந்த ஹோமத்தை செய்து கொள்ள வேண்டும்.*
*ஏனென்றால் இந்த விஷயத்தில் சாஸ்திரங்கள் நமக்கு நிறைய தகவல்களைத் தருகின்றது. இதற்கு அதி தேசம் என்று பெயர். ஒரு இடத்தில் ஒரு விஷயம் சொல்லியிருந்தால் அதை எடுத்து இன்னுமோர் இடத்தில் செய்யலாம்/ எடுத்துக்கொள்ளலாம். அந்த முறையில் இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கின்ற படியால், யஜுர் வேத முறைப்படி அக்னி முகம் செய்து செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை.*
*அந்த பிரதானத்தை மட்டும் தான் யஜுர்வேதத்தில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்த அக்னி முகம் போன்றவற்றை நம்முடைய சூத்திரப்படி செய்ய வேண்டும். அதற்கு தர்மாதிதேசம் என்று சாஸ்திரங்களில் சொல்லுகின்ற வழக்கம்.*
*கல்பாத்தி தேசமென்று இருக்கிறது. இதற்கு அதிதேசஹா என்று சாஸ்திரங்களில் சொல்கிறார்கள். இந்த பிரதானத்தை மாத்திரம் எடுத்து செய்வது. இந்த ஆவஹந்தி ஹோமத்தினுடைய ஜபம் ஹோமம் உபஸ்தானம் இதை மட்டும் எடுத்து நம் சூத்திரப்படி முகம் செய்து இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்.*
*அதனால் எல்லா வேதத்தவர்களும் இதை செய்யலாம். எப்போது இதை செய்வது, இப்பொழுது வழக்கத்தில் அனுஷ நட்சத்திரத்தன்று செய்வது என்று வைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஏனென்றால் மகாபெரியவா தான் இதை நமக்கு ஆவஹந்தி ஹோமம் என்று கண்டுபிடித்தது சொல்லி உள்ளார்கள். அதனால் மகாபெரியவாவின் அனுஷ தினத்தில் நாம் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம்.*
*இப்பொழுது சிராவணம் என்று ஆவணி அவிட்டம் அன்று நாம் செய்கிறோம். பௌர்ணமி அன்று செய்கிறோம். அன்றைக்கு தான் மகரிஷிகள் நமக்கு வேதத்தை உபதேசித்த தினம் அதனால் அன்று அந்த உபாகர்மாவை செய்கிறோம். அதுபோல் இதை அந்த அனுஷ நட்சத்திர தினத்தன்று செய்யலாம்.*
*அதே போல் நம்முடைய ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யலாம். அல்லது கிருஷ்ணபக்ஷ திரயோதசி அன்று செய்யலாம் என்று மந்திர சாஸ்திரம் காண்பிக்கின்றது. கிருஷ்ண பக்ஷ திரயோதசி அன்று நாம் எந்த மந்திரத்தை ஜெபம் செய்தாலும் எந்த அனுஷ்டானத்தில் செய்தாலும் மிகவும் உயர்ந்த பலனை அது கொடுக்கின்றது என்று மந்திரோபதேசம் வாங்கிக் கொள்வதற்கான நாட்களை சொல்கின்ற பொழுது ஒரு குரு முகமாக மந்திரத்தை நாம் உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும்.*
*என்றைக்கு மந்திரோபதேசம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று மந்திர சாஸ்திரம் காண்பிக்கின்றது என்றால் கிருஷ்ணபக்ஷ திரயோதசி அன்று. அதனால் இந்த தினத்தில் இந்த ஹோமத்தை செய்வது மிகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது.*
*மிகவும் அற்புதமான மந்திரங்கள் பிராத்திக்கின்றது அதனால் அனைவரும் இதை செய்ய வேண்டும். அனைத்து வேத காரர்களும் மற்றும் சூத்திரகாரர்களும் இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்து நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவையான ஐஸ்வர்யங்களை/ஆரோக்கியம்/மனவலிமையை இந்த அனுஷ்டானத்தில் மூலம் சுலபமாக அடைந்து விடலாம் என்பதை நாம் விரிவாக பார்த்தோம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*