Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam. 6

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam. 6

    29/12/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் மந்திரங்களின் அர்த்தங்களை விரிவாக மேலும் தொடர்கிறார்.*
    *அந்த ஆவஹந்தி ஹோமம் இரண்டு பாகங்களாக இருக்கிறது என்று பார்த்தோம் முதலில் இந்திரனை குறித்து ஜபம் செய்வதாகவும், ஹோமம் செய்வது என்பது இரண்டாவது பகுதி.*


    *ஜபம் செய்ய வேண்டிய மந்திரம் வேறு ஹோமம் செய்ய வேண்டிய மந்திரம் வேறு. பொதுவாக எந்த மந்திரத்தை ஜபம் செய்கிறோமோ அதேதான் ஹோமம் செய்வதும் வழக்கம். ஆனால் இங்கு மாத்திரம் ஜெபத்திற்கு மற்றும் ஹோமத்திற்கு*
    மந்திரங்கள் தனித்தனி.


    *இப்படி இரண்டு பாகமாக வேதமே நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த மந்திரத்திற்கான அர்த்தம் என்று பார்க்கும் பொழுது, இந்த மந்திரம் தான் ஜெபம் செய்ய வேண்டிய மந்திரம். இந்திரனுடைய சன்னதியில் ஜபம் செய்ய வேண்டிய மந்திரம். நாம் வாக்கினால் உபயோகப்படுத்தக் கூடிய அனைத்து வார்த்தைகளுக்கும் சந்தஹா என்று பெயர்.*


    *மனுஷர்கள் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகள் பிராணிகள், பக்ஷிகள் மரம் செடி கொடிகள், பஞ்சபூதங்கள் அனைத்துமே ஒவ்வொரு விதமான சப்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து சப்தங்களுக்கு ம் அதிபதி தலைவன் யார் என்றால் பிரணவாத்தகமாக உள்ள இந்திரன், ஓம் காரத்திற்கு பிரணவம் என்று பெயர். இந்த பிரணவம் தான் அனைத்து வார்த்தைகளுக்கும் முதலாக இருக்கக்கூடிய ஈஸ்வர சப்தம்.*



    *அனைத்து வார்த்தைகளுக்கும் சிறந்தது. அந்தப் பிரணவமும் சிறந்ததாகவும் பிரணவ் ஆத்மாவாக உள்ள இந்திரனும் நமக்கு பிரகாசிக்கிறார்.*
    *அனைத்து தேவதைகளுக்கும் அதிபதியாகவும் அவர்கள் ஆவிர்பவிப்பதற்க்கு*
    *முதன்முதலாக* *இருப்பவரும், இந்திரன் இருக்கிறார் அமிர்தம்*
    *அதாவது மரணமே இல்லாமல் இருப்பவர்களுக்குத்தான் தேவர்கள்/தேவதைகள் என்று பெயர்.*
    *தேவதைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், மரணம் என்பது கட்டாயம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பிறந்தவனுக்கு இறப்பும் இறந்தவனுக்கு பிறப்பும் கட்டாயம் உண்டு. இவை இரண்டுமே இல்லை என்பது தான் என்பவர்கள் தான் தேவர்கள் தேவதைகள்.*


    *இறந்தவர்கள் தான் பிறக்கப் போகிறார்கள். அந்த இறப்பு என்பது இல்லை என்றால், அவன் எங்கிருந்து பிறக்கப்போகிறான் எப்போதும் தான் இருக்கின்றானே.*


    *நம் வாழ்க்கையில் முதலில் வரக்கூடியது இறப்பு*
    *தான். இறந்ததன் மூலமாகத்தான் நாம் ஒருவரும் பிறக்கின்றோம். அப்போது அந்த இறப்பு என்பதை நாம் தவிர்க்க வேண்டும் நிறுத்த வேண்டும். அந்த இறப்பு என்பது நமக்கு இல்லாமல் செய்பவர்கள் தான் தேவர்கள்.*


    *அப்படி அனைத்துக்கும் ஆதாரமாகவும் முதன்முதலாக சிறந்தவராகவும் உள்ள அந்த இந்திரன் ஆனவர் தேவராஜன் என்று இந்திரனுக்கு பெயர். தேவதைகளுக்கு எல்லாம் அதிபதியாக இராஜா போலுள்ள இந்திரன் ஆனவர் எனக்கு சில அனுக்ரஹத்தை செய்ய வேண்டும். என்ன அனுகிரகம் என்றால், நல்ல ஞாபக சக்தி அனைத்து விஷயங்களையும் கிரகிக்க கூடிய சக்தி. நம்முடைய மூளை மூன்று விதமாக செயல்படுகிறது. அதாவது அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கிரஹிக்க கூடியது.*


    *உள்வாங்கியதை நம்முடைய மனதில் நிலைநிறுத்துவது. அப்படி நம்முடைய மூளையில் நிலைநிறுத்தியதை தக்க சமயத்தில் வெளிப்படுத்துவது. இந்த மூன்றும் மூளைக்கு கட்டாயம் தேவை.*


    *இதற்குத்தான் மேதா என்று பெயர் இந்த மூன்றும் சேர்ந்தது. அனைத்து உலக விஷயங்கள் வித்தைகள் எல்லாவற்றையும் சரியான முறையில் நம்முடைய புக்தி சக்தியானது சரியான முறையில் கிரகிக்க வேண்டும். படிக்கப் படிக்க நமக்கு அது மறந்து கொண்டே வருகிறது என்றால் அது புரோஜனம் படாது. அப்படி இருந்தால் வேடிக்கையாக அனைத்தும் படித்தவன் என்று சொல்வது.*


    *அதை சரியான சமயத்தில் வெளிப்படுத்த தெரியவேண்டும். இந்த சக்தியை இந்திரன் ஆனவர் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். அதற்கு தகுந்தார்போல் என்னுடைய மேத்தா சக்தி இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கின்றது அதாவது ஒவ்வொருவருடைய மூளையும் 10 கம்ப்யூட்டருக்கு சமம். ஆனால் அதை நமக்கு வெளிப்படுத்த தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லாமல் நன்றாக நமக்கு அதை புத்தி சக்தியுடன் நானே கிரகிக்கும் படியாக ஆக வேண்டும்.*


    *எதற்கு என்னுடைய படிப்பை வைத்துக்கொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்து மரணத்தை நான் ஜெயிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்தியை இந்த இந்திரன் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்.*


    *அதற்கு ஆதாரமாக உள்ளது இந்த சரீரம் தேகம். இந்த சரீரம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற காரியங்களில் நாம் ஈடுபட முடியும். அதற்கு என்னுடைய அனைத்து இந்திரியங்களும் சரியான முறையில் செயல்பட வேண்டும். நம்முடைய உடம்பில் என்னென்ன அங்கங்கள் இருக்கின்றன அவ்வளவும் சரியான முறையில் ஆரோக்கியமான முறையில் செயல்பட வேண்டும்.*


    *என்னுடைய வாக்குகளில் இருந்து நல்ல வார்த்தைகளே வரவேண்டும். மற்றவர்களுக்கு ஒரு கோபத்தையோ தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. என்னுடைய காதுகள் மூலம் எப்போதும் நல்ல விஷயங்களையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். நல்ல விஷயங்கள் தான் என்னுடைய காதில் விழவேண்டும்.*


    *இவ்வளவு அனு கிரகத்தையும் செய்ய முடியும் என்கின்ற இடத்திலுள்ள இந்திரனே, நீ எங்கு இருக்கிறாய் என்றால் பரமேச்வரனுடைய ஸ்தானத்திலே இருக்கிறாய். ஈஸ்சானாம் சர்வ வித்யானாம் என்று பரமேஸ்வரனை வேதம் சொல்கிறது. அனைத்து வித்தைகளுக்கும் அதிபதி வித்தைகள் ஆக உள்ளவர் யார் என்றால் பரமேஸ்வரன்.*


    *பஞ்சபூதங்களாக உள்ளவர் பரமேஸ்வரன். அந்த இடத்தில் நீ இருப்பதினால் இந்த அனுபவங்கள் அவ்வளவையும் எனக்கு நீ செய்ய வேண்டும். மேலும் சில அனுபவங்களையும் எனக்கு செய்ய வேண்டும் அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X