Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.

    *24/12/2020 No Broadcaste*
    *25/12/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி மேலும் தொடர்கிறார்.*



    *இந்த ஹோமம் இரண்டு விதமாக இருக்கிறது என்று முதலில் பார்த்தோம். அதாவது பூஜை ஜெபம் என்பது ஒரு பாகம். ஹோமம் என்பது ஒரு பாகம். இப்படி இரண்டு பகுதிகளாக இருக்கிறது அதிலே, நாம் ஜெபம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தின் அர்த்தங்களைத் தான் இப்போது பார்க்கிறோம்.*


    *ரொம்ப அற்புதமான மந்திரம் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரம். ஒரு தடவை சொன்னால் போதும் அதிகமான பலன்களை நமக்கு கொடுக்கவல்லது. இந்த மந்திரம் உபநிஷத் பாகத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.*


    *தைத்திரீய உபநிஷத்தில் இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இது ஒரு உபாசனை மந்திரமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஒரு உபாசனையும் நடுவில் இந்த ஆவஹந்தி ஹோம மந்திரமும் கடைசியில் ஒரு உபாசனையும் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்பொழுது ஆதிசங்கரர், நமக்கு ஞானத்திலே முழுமையான ஈடுபாடு வர வேண்டும் என்றால், நமக்கு சில சின்னச் சின்ன ஆசைகள், அதிலே ஒரு ஆசை நமக்கு ஐஸ்வர்யங்களை பற்றியது. மேற்கொண்டு நாம் அடுத்த விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்றால் நம் கையிலேயே ஐசுவரியம் இருக்க வேண்டும்.*


    *அதை கருத்தில் கொண்டு இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஐஸ்வர்யமும் பரம்பரையாக ஞானம் வரைக்கும் நமக்கு உபயோகப்படுகின்றன. இதை ஆதி சங்கரர் நமக்குச் சொல்கிறார். அதாவது தனஞ்சே கர்மார்த்தம். நாம் செய்ய வேண்டிய கர்மாக்கள் எல்லாம் எதற்கு என்றால் நமக்கு சித்த சுத்தி ஏற்பட வேண்டும் என்பதற்காக.*

    *நமக்கு சில பிராரப்தங்களினால் ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாவங்கள் போவதற்காக. அதைத்தான் நாம் சங்கல்பத்தில் மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்று சொல்கிறோம். அந்த மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாபங்கள் போவதற்காக.*


    *அந்த ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாவங்கள் போனால் தானே நமக்கு சித்த சுத்தி ஏற்படும். மனசிலே தெளிவு ஏற்படும் மகாபாரதத்தில், அதாவது ஒரு கண்ணாடி இருக்கிறது. நாம் நம்முடைய முகத்தை பார்த்து அலங்காரம் செய்து கொள்வதற்காகத்தான் அதை வாங்கி மாட்டிக் கொள்கிறோம். ஆனால் அந்தக் கண்ணாடியில் புழுதிகள் ஒட்டிக் கொண்டிருந்தால் நம்முடைய முகம் அதிலே தெரியாது. தெரிந்தவரையில் போரும் என்று நாம் கண்ணாடியை பார்க்கிறோமா இல்லை. அந்தக் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற புழுதியைத் துடைக்கிறோம். அது செய்ய முடியக்கூடிய காரியம் தானே. உடனே நம்முடைய முகம் அந்தக் கண்ணாடியில் பளிச்சென்று தெரிகிறது.*


    *அதுபோலத்தான் பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் நம்முடைய மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. எப்படி கண்ணாடியில் புழுதி ஒட்டிக்கொண்டு இருக்கின்றதோ அதே போல. அதே போல நம்முடைய மனசிலே இருக்கின்றது துரிதங்கள் அதாவது பாவங்களை அந்த புழுதியை துடைப்பது போல் துடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கர்மாக்கள் எல்லாம் நமக்கு வைத்திருக்கிறார்கள் துடைப்பதற்காக. அனைத்து கர்மாக்களுமே ஆச்ச மனத்தில் இருந்து ஆரம்பித்து, நாம் என்னவெல்லாம் செய்கின்றோமோ அனைத்துக்குமே கர்மாக்கள் என்றுதான் பெயர்.*



    *அவைகள் இரண்டாகப் பிரிந்து நமக்கு பலன்களை கொடுக்கின்றது ஒன்று புண்ணிய கர்மா இன்னொன்று பாப கர்மா. இப்படி இரண்டாக இருந்து நம்மை வழி நடத்துகிறது. நம்முடைய மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்ற அழுக்குகளைப் போக்கும் புண்ணிய கர்மா வாக இருந்தால், பாப கர்மாவாக இருந்தால் மேற்கொண்டு அழுக்கு ஒட்டிக் கொள்ளும். அதாவது நல்ல காட்டன் துணியை வைத்துக் கொண்டு ஒரு தடவை துடைத்தால் கண்ணாடி ஆனது பளிச்சென்று நம் முகம் தெரிகிறது. ஏற்கனவே ஈரமாக உள்ள புழுதி ஒட்டிக் கொண்டிருக்கின்ற துணியால் துடைத்தால் அதுவும் சேர்ந்து கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் பாப கர்மாவும்*


    *அப்படித்தான் நம்முடைய சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் பூர்த்தியாக வேண்டும். பாவம் நிவர்த்தியாகிறது சித்த சுத்தி ஏற்படுகிறது. இதைத்தான் பகவத்பாதாள் ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரத்திற்கு பாஷ்யங்கள் சொல்லும்பொழுது, அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.*



    *அதற்காகத்தான் உபநிஷத் பாகங்களில் இந்த மந்திரமானது வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆதிசங்கரர் சொல்லி, இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கான மந்திரத்திற்கான அர்த்தம், ஆத்மாத்திகமான முறையில் இந்த மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஈஸ்வரனை இந்த மந்திரமானது வர்ணிக்கின்றது. அதாவது ஆத்மா அனுபவம் என்பது நமக்கு வரவேண்டும். சுஷுக்தி நிலையிலே அந்த ஞானத்தை நாம் எப்படி அனுபவிக்கின்றோமோ ஆழ்ந்த உறக்கம் எப்படி நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம் அதாவது ஈஸ்வரனை அனுபவிக்கின்றோம். அதை நாம் முழித்துக் கொண்டிருக்கும்போதே அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதுதான் நம்முடைய முக்கியமான நோக்கம்.*



    *நாம் செய்யக்கூடிய தான அனைத்து காரியங்களுக்கும் பலன் அதுதான். அந்த ஈஸ்வரனுடைய ரூபத்தை தான் இந்த மந்திரம் வர்ணிக்கின்றது. ஈஸ்வரன் என்பது பரமாத்மா. பரமாத்மாவை இந்த மந்திரம் எப்படி வருணிக்கிறது என்பதை அடுத்த உபன்யாசத்தில்
Working...
X