Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.

    *14/12/2020 to 19/12/2020 No Broadcaste*
    *20/12/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து தர்மங்களை பார்த்துக்கொண்டு வரக்கூடிய வரிசையில் ஆவஹந்தி ஹோமம் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் மேலும் தொடர்கிறார்.*


    *இந்த ஆவஹந்தி ஹோமம் வேதத்திலிருந்து எடுத்து அதை நாம் பயன்படுத்தி எல்லோருக்கும் அதனுடைய நன்மைகளை அடைய வேண்டும் என்று பிரபலப்படுத்தியவர், அதாவது அதற்கு முன்பு எல்லோராலும் இந்த ஹோமம் செய்ய முடியாமல் இருந்தது அதை சுலபமாக செய்ய முடியும் என்று வேத விற்பன்னர்களை கூட்டி எல்லோரும் பயன் பெற வேண்டும் என்று அனுப்பி வைத்து அதை நமக்கு சுலபமாக கொடுத்தவர் நமது மகா பெரியவா தான்.*
    *உபநிஷத் பாகத்திலே இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது 108 க்கு மேலே உபநிஷத்துக்கள் இருக்கின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் அனுகிரகித்தது என்று 108. அதிலேயே பத்திற்க்கு பாஷ்யம் செய்த போது ஆதிசங்கரர், அதில் தைத்திரீயோப உபநிஷத் என்று ஒரு பாகம் வருகிறது. அதில்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது.*
    *பொதுவாகவே, அனைத்து உபநிஷத்துக்களிலும் காமியம் ஆக சில பலன்களை உத்தேசித்து செய்யப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்டிருக்கின்றன.*
    *பொதுவாக உலகத்தில் எப்படி பிரச்சாரம் என்றால், உபநிஷத்துகள் அனைத்துமே லோகத்தில் பர பிரமத்தை அடையக்கூடிய ஒரு வழியைத்தான் காண்பிக்கிறது என்று நாம் பிரசித்தமாக சொன்னாலும், அவாந்தர பலனாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.*


    *அவாந்திர பலன் என்றால், மோக்ஷம் ஞானத்தை அடையவேண்டும் என்றால், அதற்கு முன்னால் செய்யவேண்டிய கடமைகள் நமக்கு நிறைய இருக்கின்றன. இந்த கடமைகள் எல்லாம் நாம் செய்த பிறகு உபநிடதங்களை நாம் வாசிக்க வேண்டும். அப்படி அந்தக் கடமைகளைச் செய்யும் போது நமக்கு இடையூறுகள் நிறைய ஏற்பட்டால், அவைகள் நீங்கி அதனுடைய பலன்கள் நமக்கு சீக்கிரமாக கிடைப்பதற்கு, உபநிடதங்கள் நிறைய காண்பிக்கின்றது.*


    *ஒவ்வொரு உபநிடதங்களிலும், நிறைய காமிய கர்மாக்கள் சொல்லப்படுகின்றன. நைமித்திகம் ஆகவும் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. ஒதுக்கும் படியாக இல்லை. அதாவது திருமணம் ஆகவில்லை கல்யாணம் தள்ளிப் போகிறது என்றால், கல்யாணம் நித்தியமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது காம்மியமாக இல்லை. இப்படி விவாகம் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் நமக்கு இடையூறு ஏற்படும் பொழுது, அவைகள் நீங்குவதற்கு உபநிடதங்கள் உபாயங்களை காண்பிக்கின்றன.*


    *அதேபோல் விவாகம் ஆனபிறகு தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்கிற பொழுது, பிரம்ம சொரூபம் உபநிஷத் முழுமையாக நமக்கு புரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்பொழுது அந்த இடைஞ்சல்கள் போய் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால் அதற்கான உபாயங்கள் உபநிஷத்துக்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.*


    *அதேபோல சந்ததிகள் ஏற்பட வேண்டும் என்பதற்கான உபாயங்களும் அதிலே சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான உபாயங்களும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்போது சுலபமாக சிசேரியன் வந்துவிட்டது என்று நாம் செய்து கொள்கிறோம். நம்முடைய தர்ம சாஸ்திரமும் வேதமும் அந்த சிசேரியன் என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. கூடாது என்று சொல்லி இருக்கிறது,*


    *ஏனென்றால் சுகப்பிரசவம் ஆக இயற்கையான முறையில் என்று நடக்க வேண்டும். அப்படி பிறந்தால் தான் அந்த குழந்தை வேதம் படிப்பதற்கு வேதத்தில் சொன்ன கர்மாக்களை செய்வதற்கு அதிகாரம் வரும். அந்த அளவிற்கு முக்கியத்துவமாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நாம் கூடுமானவரையில் சுகப்பிரசவம் நடப்பதற்கான முறையை கடைபிடிக்க வேண்டும். சிசரியன் சுலபமாக இருக்கிறது என்று நினைத்தால் தாயாருக்கு உடல் பலஹீனம் மிகவும் ஆகிவிடும். நரம்பு சம்பந்தமான நோய்கள் பிற்காலத்தில் ஏற்பட்டு கஷ்டப்பட நேரிடும். இப்படி வந்து விட்டது இந்த நாட்களில் அதை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை அது மாற வேண்டும்.*


    *உபநிஷத்துக்களில் நிறைய உபாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன, சுலபமான முறையில் சுகப்பிரசவம் களை நாம் பெறுவதற்கு.*
    *அதேபோல நாம் குடும்பம் நடத்துவதற்கான பொருளாதார விஷயத்தில், குடும்ப விஷயத்தில் முன்னேற்றங்களுக்கு ஆன நிலையையும் நிறைய உபாயங்கள் உபநிஷத்துகளின் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படி உபநிஷத்துக்களில் சொல்லப்படாத விஷயங்களே கிடையாது. ஒவ்வொரு உபநிடதங்களையும் முதலிலிருந்து கடைசிவரை நாம் பார்க்க வேண்டும். நிறைய காமிய கர்மாக்களும் நைமித்திய கர்மாக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரசவத்திற்காக செய்யக்கூடியவை எல்லாம் நைமித்திகம் என்றும் பெயர். இதெல்லாம் காமியம் என்று ஒதுக்க கூடாது.*


    *அதேபோலத்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் விஷயமும். தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம். மகரிஷிகள் இரண்டு விதமாக இந்த ஆவஹந்தி ஹோமத்தை பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.*


    *ஒன்று வைதீக மான முறையில் அனுஷ்டிப்பது. மற்றொன்று தாந்த்ரீக முறையில் அனுஷ்டிப்பது. வைதிகம் தந்திரம் என்று இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். மந்திர சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்வது என்று அர்த்தம். சாஸ்திரங்களில் தந்திரம் என்று சொன்னால் அர்த்தங்கள் வேறு. இங்கு நாம் பார்ப்பது தந்திரம் என்றால் மந்திர சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்வது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் செய்யக்கூடியது. இப்படி வைதீக முறை தாந்திரிக முறை என்ற மகரிஷி இரண்டு விதமாக நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


    *மகாபெரியவா நமக்கு இந்த இரண்டையும் சொல்லிக் கொடுத்தாலும் கூட, வைதீக மான முறைக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தாந்திரிக முறையானது ஒரு நித்திய கர்மாவுடன் சேர்த்து செய்யக்கூடியதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போது காயத்ரி ஜபத்தை நாம் எடுத்துக் கொண்டால், காயத்ரி னுடைய பலன் நமக்கு அதிகமாக வேண்டுமென்றால், சந்தியாவந்தனத்தில் செய்யக்கூடிய தான காயத்ரி ஆவர்த்தியையே அதிகமாக செய்வது, என்று ஒரு முறை. அல்லது தனியாக சங்கல்பம் செய்துகொண்டு காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது என்பது ஒரு முறை. இதே போல் தான் இந்த ஆபத்து ஹோமத்தையும், நமக்கு பிரித்து கொடுத்திருக்கிறார்கள் இரண்டு விதமாக அதனுடைய பலன்களில் கூட வித்தியாசம் இருக்கின்றது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X