Announcement

Collapse
No announcement yet.

DEEPAAVALI PUJAS.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • DEEPAAVALI PUJAS.

    லக்ஷ்மி குபேர பூஜை.14-11-2020.


    லக்ஷ்மி குபேர பூஜை செய்ய முதலில் 16 மாத்ரு கண பூஜையும், பிறகு நவ தான்யங்களில் நவ கிரஹங்களை ஆவாஹனம் செய்து, தர்பையினால் கூர்ச்சம் செய்து அதில் எட்டு லோக பாலகர்களை ஆவாஹனம் செய்து பிறகு லக்ஷ்மி தேவியை பூஜிக்க வேண்டும். 16 நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.




    விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், கலச பூஜை, 16 மாத்ரு கண பூஜை= ஓம் கெளர்யை நம: பத்மாயை நம: ஶஸ்யை நம: மேதாயை நம: ஸாவித்ரியை நம: விஜயாயை நம: ஜயாயை நம: தேவ ஸேனாயை நம:


    ஸ்வதாயை நம: ஸ்வாஹாயை நம: மாத்ருப்யோ நம:லோக மாத்ருப்யோ நம: த்ருத்யை நம: புஷ்ட்யை நம: துஷ்டியை நம: ஆத்ம தேவ்யை நம: த்யாயாமி, ஆவாஹயாமி, அர்க்கியம்,


    பாத்யம், ஆசமணீயம் ஸமர்பயாமி, ஸ்நபயாமி, ஸ்நானாந்திரம் ஆசமணியம் சமர்ப்பயாமி. வஸ்த்ரம், கந்தம்,குங்குமம், புஷ்ப தூப தீபாதி ஸகல உபசாரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி.


    கதலி பழம் நிவேதயாமி. வாழை பழம் நிவேதனம் செய்யவும்.




    நவகிரஹ பூஜை:- நவகிரஹ தான்யங்கள் மீது நவகிரகங்களை புஷ்பம் அக்ஷதை எடுத்து கொண்டு அஸ்மின் மண்டலே அதிதேவதா ப்ரதி அதி தேவதா ஸஹிதம் ஆதித்ய கிரஹம் த்யாயாமி ஆவாஹயாமி


    என்று வரிசையாக ஆவாஹனம் செய்து விட்டு ஆதித்யாதி நவகிரஹ தேவதாப்யோ நம: ஆஸனம், பாத்யம், ஆசமனீயம், வஸ்த்ர யக்யோப வீத உத்தரீயார்த்தம் , ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி.கந்தம், குங்குமம், அக்ஷதை ஸமர்பயாமி.






    புஷ்பானி பூஜயாமி வரிசையாக அர்ச்சனை செய்யவும். தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கற்பூரம், ப்ரதக்ஷிண நமஸ்காரம்.


    லோக பால பூஜை கூர்ச்சத்தில் செய்யவும். மஹா லக்ஷ்மி பூஜாங்க பூதாம் ப்ருஹ்ம விஷ்ணு, த்ரியம்பக க்ஷேத்திர பால பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொள்ளவும்.


    அஸ்மின் கூர்ச்சே ப்ருஹ்மன் ஸரஸ்வத்யா ஸஹ இஹ ஆகச்ச ஆகச்ச ஸ ப்ரஸ்வதி ஸஹித ப்ருஹ்மானம் ஆவாஹயாமி ஆசனம் ஸமர்ப்பயாமி.


    லக்ஷ்மி விஷ்ணுப்யோ நம: ஆவாஹயாமி, த்யாயாமி, ஆஸனம் சமர்பயாமி.




    துர்கா த்ரயம்பிகாப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி.


    க்ஷேத்திர பால பூமிப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி என்று அக்ஷதை சேர்த்து, அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்,ஸ்நபயாமி ,ஸ்நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி உத்திரணி தீர்த்தம் காண்பித்து பேலாவில் சேர்க்கவும்.


    ப்ருஹ்மாதீனாம் வஸ்த்ர உத்தரீய கந்த புஷ்ப தூப தீபாதி ஸமஸ்தோப சாரான் ஸமர்ப்பயாமி.அக்ஷதை சேர்க்கவும்.ப்ருஹ்மாதிப்யோ நம: கதலி பலம் நிவேதயாமி. ப்ருஹ்மாதிப்யோ கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி.


    கையை கூப்பிகொண்டு விஸ்வக்ஸேனம் நமஸ்க்ருத்ய பிதாமஹம் விஷ்ணும் ருத்ரம், ஶ்ரியம், துர்காம், வந்தே பக்த்யா ஸரஸ்வதீம், க்ஷேத்ராதிபம் நமஸ்க்ருத்ய திவா நாதம் நிஶாகரம் தரணீ கர்ப ஸம்பூதம் ஶஶி புத்ரம் ப்ருஹஸ்பதிம்.


    தைத்யாசார்யம் நமஸ்க்ருத்ய ஸூர்ய புத்ரம் மஹா க்ரஹம் ராஹு கேது நமஸ்க்ருத்ய யக்யாராம்பே விஶேஷத:




    ஶக்ராத்யா தேவதாஸ்ஸர்வா: முனீஸ்ச ப்ரணமாம்யஹம் கர்கம் முனீம் நமஸ்க்ருத்ய நாரதம் முனி ஸத்தமம். வஸிஷ்டம் முனிஶார்தூலம் விஸ்வாமிஸர்த்ரம் ப்ருகோஸ்ஸுதம் வ்யாஸம் முனீம் நமஸ்க்ருத்ய ஆசார்யாம்ஸ்ச தபோதனாத்.


    ஸர்வான் தான் ப்ரணமாம்யேவம் யக்ஞ ரக்ஷா கரான் ஸதா ஶங்க ஶக்ர கதா ஶாரங்க பத்ம பாணீர் ஜனார்தன: ஸர்வாஸு திக்ஷுரக்ஷேன் மாம் யாவத் பூஜா வஸானகம்.


    பிறகு லக்ஷ்மி பூஜை 16 உபசார பூஜை; ஈசானாதி பூஜை




    ஈசானாய நம: ஶஶினே நம: மருத்ப்யோ நம: ஸூர்யாய நம: விஶ்வ கர்மணே நம: குரவே நம: அதர்வாங்கிரோப்யாம் நம: ப்ரஜாபதயே நம:


    விஶ்வேப்யோ தேவேப்யோ நம: அமர ராஜாய நம: அஶ்வினிப்யாம் நம: மித்ரா வருணாப்யாம் நம: விஷ்ணவே நம: ஈஶானாதிப்யோ நம: ஷோட ஶோபசார பூஜார்த்தே புஷ்பானி ஸமர்ப்பயாமி .


    வடக்கு பக்கத்தில் குபேரனுக்கு 16 உபசார பூஜை .




    லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம். ப்ரார்த்தனை.


    விசுவ ரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே மஹாலக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுக ராத்ரிம் குருஷ்வ மே. விஷ்ணோர் வக்ஷஸி பத்மே சகடகே சக்ரே ததாம்பரே லக்ஷ்மி நித்யா ததாஸி த்வம் மயி நித்யா ததாபவ நமஸ்தே ஸர்வ தேவானாம் வரதாஸி ஹரி ப்ரியே.யாக திஸ்த்வத் ப்ரபன்னானாம் ஸா மே பூயாத் த்வத் அர்ச்சனாத்.


    இந்திரனை ப்ரார்திக்க ஸ்லோகம். விசித்ரை ராவதஸ்தாய பாஸ்வத் குலிஶ பாணயே பெளலோம் யாலி தாங்காய ஸஹஸ்ராக்ஷாய தே நம:




    குபேரனை ப்ரார்திக்க ஸ்லோகம்.


    தனதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பய ச பவந்து த்வத் ப்ரஸாதான் மே தன தான்யாதி ஸம்பத;


    ஹேமாத்ரி புத்தகம் இம்மாதிரி பூஜை செய்பவர் வீட்டிலும் செய்பவரிடத்திலும் லக்ஷ்மி தேவியின் பரிபூர்ண கிருபை கிடைக்கும் எங்கிறது.
    16-11-2020---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .


    தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தனது ஸஹோதரன் யமனை தனது






    வீட்டிற்கு வரச்சொன்னாள்.. யமனும் தனது ஸஹோதரியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு






    நிறைய ஆபரணங்களுடநும், ஜவுளி, சீர்களுடன் யமுனையின் இல்லத்திற்கு சென்றார்.


    யமுனையும் தனது கையாலேயே பல விதமான ஆஹாரங்கள் தயார் செய்து யமனை சாப்பிடச்செய்து உபசரித்தாள். யமனும் யமுனைக்கு கொண்டு சென்ற பரிசுகளை தந்தார்.


    அந்த திருநாள் தான் யம த்வீதீயை எனப்பெயர் பெற்றது. “”ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம் தாநாதி ச ப்ரதேயாநி பகினீப் யோ விசேஷத:


    யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்னுயாத்.


    எந்த பெண் தனது ஸஹோதரரை த்வீதீயை அன்று சாப்பாடு முதலியவைகளால் சந்தோஷ படுத்துகிறாளோ அவள் ஒரு போதும் விதவை ஆக மாட்டாள்.


    தனது ஸஹோதரி வீட்டிற்கு போக முடியாதவர்கள் தனது ஸஹோதரிக்கு பணம் , பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம்.


    உடன் பிறந்த சஹோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா, பெரியப்பா பெண், மாமா பெண் முதலியவர்களை உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.


    இதற்கு உபவாசம், பூஜை மந்திரம் இல்லை. இதனால் ஒற்றுமை, அன்பு வளரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வலிமை ஐஸ்வரியம் கிடைக்கும்.
    கார்த்திகை ஸ்நானம் 16-11-2020 முதல் 14-12-2020 முடிய.


    ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாக தினமும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.


    இதற்கு கார்த்திகை ஸ்நானம் எனப்பெயர் .இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகி மனதில் சுத்தமான எண்ணங்கள் உன்டாகும். இன வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.


    ஸ்நானம் செய்யும் போது கூற வேண்டிய மந்திரம்.




    கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராதஸ் ஸ்நானம் ஜநார்தன: ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.


    ஸ்நானம் செய்துவிட்டு காய்ந்த ஆடைகள் உடுத்திகொண்டு நெற்றிக்கு இட்டுகொண்டு மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்கிய


    ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்துகொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு அர்க்கியம் விடவும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி.


    வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதிவன் மம க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தநுஜேந்திர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.


    நித்ய நைமித்திகே க்ருஷ்ண கார்திகே பாபநாசனே க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ராதயா ஸஹிதோ ஹரே ; ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.


    அநேன அர்க்கிய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம் எனச்சொல்லி கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய முடியா விட்டலும் முடிந்த நாட்களில் செய்யலாம்.




    தீபாவளி மருந்து.
    Sukku- 50 gm, சுக்கு
    Chitharathai-50gm, சித்தரத்தை
    parangi pattai-25 gm, பரங்கிப்பட்டை




    kanda thippili-50gm, கண்டதிப்பிலி
    arisi thippili-100gm, அரிசிதிப்பிலி
    vaayu vidangam-50gm, வாயுவிடங்கம்




    krambhu-50gm, க்ராம்பு
    vaal milagu-50gm, வால்மிளகு
    sathakuppai-50 gm, சதகுப்பை




    seeragam-50gm, ஜீரகம்
    perunjeeragam-50gm, பெருஞ்ஜீரகம்
    kasturi manjal-50 gm, கஸ்தூரி மஞ்சள்




    athimathuram 50 gm, அதிமதுரம்
    virali manjal-50gm, விராளி மஞ்சள்
    adhi vidayam-50gm, அதிவிடயம்




    kadukkai poo-50gm, கடுக்காய்
    sirunaagap poo-50 gm, சிறுநாகப்பூ
    thaalisa pathri-50 gm, தாளிசாபத்திரி




    kaattaathi poo-50, காட்டத்திபூ
    omam-250gm, ஓமம்




    ghee- நெய் தேவையான அளவு.
    honey enough quantity. தேன் தேவையான அளவு.


    மேற் கண்ட பொருட்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி வறுத்து மிக்ஸியில் பொடித்து தீபாவளி லேகியம் செய்து சாப்பிடலாம்.






    தீபாவளி 13-11-2020 இரவு .
    13-11-2020 அன்று காலை 6-12 க்கு சூரிய உதயம். நம் எல்லோருக்கும் 13-11-2020 6-12 முதல் 13-11-2020 காலை 6-11 வரை வெள்ளி கிழமை தான். பிறகு தான் 14ந்தேதி சனிக்கிழமை ஆரம்பம்.
    மேலை நாடுகளுக்கு தான் இரவு 12 மணிக்கு மறு நாள்.
    சதுர்தசி திதியிலும் அமாவாசை திதியிலும் யாருமே எண்ணய் தேய்த்து குளிக்க கூடாது என்பது நமது சாஸ்திர விதி. மஹாவிஷ்ணுவிற்கும் பூமா தேவிக்கும் பிறந்தவனே இந்த நரகாசுரன். பூமா தேவி தீபாவளி
    அன்று மாத்திரம் எண்ணைய் தேய்த்து குளிக்க இந்த நேரத்தில் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கினாள். மற்றும் சிவன் தலையில் உள்ள கங்கையில் நீராடவும் பர்மிஷன் பெற்றாள். ஸ்ரீ க்ருஷ்ணர் யமுனை நதி கரையில் தானே வசித்தார்.


    நிர்ணய சிந்து—147:--- “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.


    அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.


    ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.


    நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்
    ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை


    ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித


    ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;


    தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.




    ஆகாச தீபம் கடனை போக்கும்: 16-11-2020 முதல் 14-12-2020 முடிய.






    கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸ மேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).






    சாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில்










    உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.






    16-11-2020 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்






    ஸங்கல்பம் செய்துகொண்டு பெரிய , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்திலோ அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்






    லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .


    எல்லா கடன்களும் அடைப்பீர்கள்.. லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.






    எல்லா தினங்களும் முடியாவிட்டாலும் முடிந்த தினங்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .






    தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.எட்டு திக்குகளுக்கும் ஒவ்வொரு திரியாக போட வேண்டும்.






    ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..


    யம தர்ப்பணம்.14-11-2020.
    தீபாவளி ஸ்நானம் 13-11-2020 இரவு 14-11-2020 விடியற் காலை 4-30 மணி முதல் 6 மணிக்குள் நல்ல எண்ணைய் தேய்த்து கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். முதலில் அபாமார்க்கம் என்னும் நாயுருவி செடியை அபாமார்க்கம் அதோ தும்பீம் ப்ரபுன்னாட மதாபராம் ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை










    என்றபடி ஸ்நானம் செய்யுமுன்பு நாயுருவி செடியை கையில் எடுத்து கொண்டு அபாமார்க லதே தேவி அபவர்க ப்ரதே சுபே அலக்ஷ்மீம் நாசய மே கேஹே ம்ருத்யும் வாரய வாரய போ ---ஸீதா லோஷ்ட ஸமாயுக்த






    ஸ கண்டக தளான்வித ஹர பாபம் அபாமார்க்கம் ப்ராம்யமாணஹ புந;புநஹ என்று சொல்லி நாயுருவி செடி இருக்கும் வலது கையினால் தலையை மூன்று முறை சுற்றி வாசலில் தூக்கி போடவும்.






    பிறகு நல்ல எண்ணய் தேய்த்து கொண்டு சுடு தண்ணீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.






    நெற்றிக்கு இட்டுக்கொண்டு புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி இனிப்புகள் உண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு ஸந்தியா வந்தனம் காயத்திரி ஜபம் செய்து விட்டு யம தர்ப்பணம் செய்யவேண்டும்.






    கிழக்கு பக்கம் பார்த்து உட்காரவும். ஆசமனம் செய்யவும்.






    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம்;






    மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத் வாரா ஸ்ரீ் பரமேஸ்வர ப்ரீத் யர்த்தம் ஆஸ்வயுஜ க்ருஷ்ண பக்ஷ சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே. என்று சொல்லி கைகளை துடைத்து க்கொண்டு






    பூணல் வலம்.( உபவீதி ) கையில் மஞ்சள் கலந்த அக்ஷதை வைத்து கொண்டு கிழக்கு நோக்கி நுனி விரல்கள் மூலம் ( தேவ தர்ப்பணம் ) ஜலத்தால் அர்க்கியம் விடவும். தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யலாம்.








    யமாயதர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாயச,வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாயவை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.மூன்று தடவைகள்.ஒவ்வொன்றும்.


    1.யமாயநம: யமம்தர்பயாமி.
    2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி
    3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
    4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.


    5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
    6.காலாயநம:காலம்தர்பயாமி.




    7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
    8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.


    9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி
    10.நீலாயநம:நீலம்தர்பயாமி
    11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.




    12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
    13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி


    14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..






    தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.


    யமோ நிஹந்தாபித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி. ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே. ஆசமனம்.
    தந்வந்திரி பூஜை.13-11-2020.






    பாற்கடலில் இருந்து தந்வந்திரி அவதரித்த நாள். ஆதலால் இன்று தந்வந்திரி பகவானுக்கு 16 உபசார பூஜை செய்வதால் வியாதிகள் குணமாகும். வியாதிகள் வராமலும் இருக்கும். ஆயுர்வேத மருத்துவம் இயற்றியவர்.


    யம தீபம்:-- 13-11-2020 அன்று




    ஆஸ்விநஸ்யா சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி. ----சிதே பக்ஷம்=க்ருஷ்ண பக்ஷம். ஆஸ்விநம்= சாந்திர மான மாதம்.






    தீபாவளிக்கு முதல் நாள் வரும் த்ரயோதசி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வீட்டு வாசலில் அல்லது கோவிலில் மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.






    வீட்டில் வசிக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவரும் தனி தனியே ஒவ்வொரு மண் அகல் விளக்கு அவரவர்களே ஏற்றி ஸ்லோகம் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்.






    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்கின உப சாந்தயே. ப்ராணா யாமம்.






    மமோ பாத்த ஸமஸ்த துருதய க்ஷயத் வார ஸ்ரீ் பர மேஸ்வர ப்ரீத்யர் த்தம் மம ஸர்வாரிஷ்ட நிவிருத்தி பூர்வகம் அப ம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே.






    ஒவ்வொருவரும் அவரவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை நோக்கி ம்ருத்யாநா பாச தண்டாப்ப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தானாத் ஸூர்யஜ; ப்ரீயதாம் மம. என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்.






    ஆக்ஸிடெண்ட் -வியாதி இவற்றால் அகால மரணம் ஏற்படாமல் பாது காக்கும். கந்த புரணம்..இம்மாதிரி இயம்புகிறது.
    14-11-2020. தீபாவளி மாலையில் தீபம்.
    தத்தோ தீப சதுர்தஸ்யாம் நாக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி ஸமாயுக்த:ஸர்வ பாபாப நுத்தயே.
    ( நிர்ணய சிந்து 141.) சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் அனைத்து பாபங்களும் விலகி நரக பயம் நீங்குவதற்காக என்னால் தரபட்டது.
    ஆகவே எனது பாபங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து என்னை காப்பாற்றுங்கள் எனும் இந்த ஸ்லோகம் சொல்லி ப்ரார்த் தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் விலகும்.
    தீபாவளி அன்று மாலையில் தனது வீட்டிலும் சிவ, விஷ்ணு, அம்பிகை ஆலயங்களிலும் 4 திரி போட்டு விளக்கு ஏற்றி ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.


    14-11-2020 கேதார கெளரி விரதம்.
    கேதாரேஸ்வரர் விரதம்.:-




    முதலில் ஆசமனம். விக்னேஸ்வர பூஜை செய்யவும். பிறகு ப்ரதான பூஜை.






    வினேஸ்வர பூஜை;- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே.


    ப்ராணாயாமம். ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மான கர்மண: நிர்விக்னேன பரி ஸமாப்தியர்த்தம் ஆதெள மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே.






    பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் போடவும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் மஹா கணபதிம் த்யாயாமி. ஆவாஹயாமி, ஆஸநம் ஸமர்ப்பயாமி; பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி. ஹஸ்தயோ: அர்க்கியம்


    ஸமர்ப்பயாமி; ஆசமணியம் ஸமர்ப்பயாமி; மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி; பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி; ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி; ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; உபவீதார்தம்


    அக்ஷதான் ஸமர்ப்பயாமி; ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கந்தாந்தாரயாமி; கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி; புஷ்பானி பூஜயாமி.






    ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாயை நம: கபிலாய நம; கஜ கர்ணகாய நம;லம்போதரய நம: விகடாய நம: விக்ன ராஜாய நம:வி நாயகாய நம: தூம கேதுவே நம: கணாத்யக்ஷாய நம: பால சந்திராய நம: கஜானனாய நம: வக்ர துண்டாய நம:






    ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம: மஹா கணபதயே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி; தூப தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.


    நிவேதனம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: ------தேவ ஸவி தப்ரஸவீ: ஸத்யம் த்வர்த்தேண பரிஷஞ்சயாமி; அம்ருதோபஸ் தரண மஸி. ப்ராணாயஸ்ஸுவா: அபானாயஸ்ஸுவா: வ்யானாயஸ்ஸுவாஹா; உதானாயஸ்ஸுவா: ஸமாணாயஸ்ஸுவா:






    ப்ருஹ்மணேஸ்ஸுவாஹா ;கணபதயே நம: கதலி பலம் நிவேதயாமி. அம்ருதாபிதா நமஸி. பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். தாம்பூலம் ஸமர்ப்பயாமி; கற்பூர நீராஞ்சனம் ; மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி.






    வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸம ப்ரப அவிக்னம்குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.










    ப்ரதான பூஜை.:-






    ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்சதுர்புஜம் . ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.






    ப்ராணாயாமம்.ஓம் பூ:; ஓம் புவ:; ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேயம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸ: அம்ருதம் ப்ருஹ்ம ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.






    ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: தவிதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஶதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே






    பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -------- நாம ஸம்வத்ஸரே -------- ருதெள -----------மாஸே----------பக்ஷே -------ஶுப திதெள-----------






    -----------வாஸர யுக்தாயாம் ----------- நக்ஷத்ர யுக்தாயாம்------ சுப யோக சுப கரண யேவங்குண ஸகல விஶேஷேன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------- ஶுப திதெள அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யானாம் அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த






    ஸித்தியர்த்தம் புத்ரபெளத்ராதி அபிவ்ருத்தியர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்தியர்த்தம் மனோவாஞ்சாபல ஸித்தியர்த்தம் கேதாரேஶ்வர வ்ரத புஜாம் கரிஷ்யே. அப உபஸ்பர்சியா.






    விக்னேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. என்று கூறி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து வடக்காக மஞ்சள் பிள்ளையாரை நகர்த்தி வைக்கவும்.






    கலச பூஜை:- பஞ்ச பாத்டிர உத்திரிணி தீர்த்த பாத்திரதிற்கு சந்தனம், குங்குமம், அக்ஷதை ஆகிய வற்றால் அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு கலஶஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர : ஸமாஶ்ரித:






    மூலே தத்ர ஸ்திதோ ப்ருஹ்மா மத்யே மாத்ரு கணாஸ்ம்ருதா: குக்ஷெளது ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா. ருக் வேதோ அத யஜுர் வேதோ ஸாமவேதோ அப்யதர்வண . அங்கைஸ்ச ஸஹிதா ஸர்வே கலசாம்பு ஸமாஶ்ரிதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:






    கங்கே ச யமுனேஸ் சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு. என்று ஜபித்து கலச தீர்த்தம் சிறிது எடுத்து பூஜா த்ரவியங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.






    சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே. கேதார தேவம் ஈசானம் த்யாயேத் த்ரிபுர காதினம். கேதாரேஸ்வரம் த்யாயாமி.


    கைலாச சிகரே ரம்யே பார்வத்யா ஸஹித ப்ரபோ. அக்கச்ச தேவ தேவேஶ மத் பக்த்யா சந்த்ர சேகர. கேதாரேஸ்வரம் ஆவாஹயாமி.






    ப்ராண ப்ரதிஷ்டை செய்யவும்.


    ஸுராஸுர ஶிரோரத்ன ப்ரதீபித பதாம்புஜ. கேதார தேவ மத்தத்தம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்.கேதாரேஸ்வராய ஆஸனம் ஸமர்ப்பயாமி.






    கங்காதர நமஸ்தே அஸ்து த்ரிலோசன வ்ருஷத்வஜ. மெளக்திகாஸன ஸம்ஸ்தாய கேதாராய நமோ நம:கேதாரெஸ்வராய பாத்யம் ஸமர்ப்பயாமி.






    அர்க்கியம் க்ருஹான பகவன் பக்த்யா தத்தம் மகேஶ்வர. ப்ரயஸ்சமே மனஸ்துஷ்டிம் பக்தானாம் இஷ்ட தாயக. கேதாரேஸ்வராய அர்க்கியம் ஸமர்ப்பயாமி.






    முனிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ. கேதார தேவ பகவன் க்ருஹானா ஆசமனம் விபோ. கேதாரேஸ்வராய ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.






    கேதாரதேவ பகவன் ஸர்வலோகேஸ்வர ப்ரபோ மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் ஶுபங்கர. கேதாரேஸ்வராய மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.






    ஸ்நானம் பஞ்சாம்ருதைர் தேவ ஶ்ரிதம் ஶுத்தோதகைரபி. க்ருஹாண கெளரி ரமண த்வத் பக்தேன மயார்ப்பிதம். கேதாரேஸ்வராய பஞ்சாம்ருத ஸ்நானம் சமர்ப்பயாமி.






    நதீ ஜலம் ஸமாயுக்தம் மயா தத்தமனுத்தமம்.ஸ்நானம் ஸ்வீகுரு தேவேச சதாசிவ நமோஸ்துதே.கேதாரேஸ்வராய ஸுத்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி.






    வஸ்த்ரயுக்மம் ஸதா ஶுப்ரம் மனோஹரமிதம் ஶுபம். ததாமி தேவ தேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம். கேதாரேஶ்வராய வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.






    ஸ்வர்ண யக்ஞோபவீதம் ச காஞ்சனம் சோத்தரீயகம். ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ. கேதாரேஸ்வராய யக்ஞோபவீதோத்தரீயே ஸமர்ப்பயாமி.






    ஸமஸ்த கந்தர்வபாணாம் தேவ த்வமஸி ஜன்மபூ: பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம்.கேதாரேஸ்வராய கந்தாந் தாரயாமி.






    அக்ஷதோபி ஸ்வபாவேன பக்தானாமக்ஷதம் பதம். ததாஸி நாத . மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவான். கேதாரேஸ்வராய அக்ஷதான் ஸமர்ப்பயாமி.






    கல்ப வ்ருக்ஷ ப்ரஸூனைஸ்த்வ மப்யர்ச்சிதப ஸுரை:குங்குமை: பார்த்டிவைரேபி:இதானீ மர்ச்சியதே மயா. கேதாரேஸ்வராய புஷ்பை பூஜயாமி.






    இந்திராதி அஷ்ட திக் லோக பாலக பூஜை:-






    ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷதை சேர்க்கவும்.










    இந்திரன்-கிழக்கில்--ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் இந்திரம் திக்பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.






    அக்னி- தென் கிழக்கில்-


    --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம்அக்னிம் திக் பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.






    யமன் தெற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் யமம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹ்யாமி.






    நிருருதி தென் மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.






    வருணன் மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வருணம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.






    வாயு வட மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வாயும் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.






    குபேரன் வடக்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.






    ஈசானன் வட கிழக்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் ஈசானம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.






    இந்த்ராதி அஷ்ட திக் பாலக தேவதாப்யோ நம: ரத்ன ஸிம்மாஸனம் ஸமர்ப்பயாமி; பாத்யம் ஸமர்ப்பயாமி; அர்க்கியம் ஸமர்ப்பயாமி; ஆசமணீயம் சமர்ப்பயாமி; ஸ் நாபயாமி; ஸ் நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ர உத்தரீய யக்ஞோபவீத ஆபரணார்த்தம்






    அக்ஷதான் ஸமர்ப்பயாமி; கந்தாந்தாரயாமி; கந்தஸ்யொபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி.அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்பானி ஸமர்ப்பயாமி; தூப மாக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; மஹா நைவேத்யம் கதலி பலம் நிவேதயாமி; தாம்பூலம் ஸமர்ப்பயாமி;






    கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி; மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.






    இந்திராதி அஷ்ட திக் பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.






    பிறகு சிவபெருமானுக்கு தெற்கில் ப்ரஹ்மணே நம: என்று பிரம்மாவையும், வடக்கில் விஷ்ணவே நம: என்று விஷ்ணுவையும் நடுவில் கேதாரேஸ்வராய நம: என்று கேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு த்யானிக்கவும்.






    அங்க பூஜை:- மஹேஶ்வராயை நம: பாதெள பூஜயாமி; ஈஶ்வராய ஜங்கே பூஜயாமி; காம் ரூபாய நம: ஜானுனி பூஜயாமி; ஹராய நம: ஊரூ பூஜயாமி; த்ரிபுராந்தகாய நம: குஹ்யம் பூஜயாமி; பவாய நம: கடிம் பூஜயாமி; கங்காதராய நம: நாபிம் பூஜயாமி; மஹாதேவாய நம: உதரம் பூஜயாமி; பசுபதயே நம: ஹ்ருதயம் பூஜயாமி; பி நாகினே நம: ஹஸ்தான் பூஜயாமி;






    ஶிவாய நம: புஜெள பூஜயாமி; ஶிதிகண்டாய நம: கண்டம் பூஜயாமி; விருபாக்ஷாய நம: முகம் பூஜயாமி, த்ரி நேத்ராய நம: நேத்ராணி பூஜயாமி; ருத்ராய நம: லலாடம் பூஜயாமி;


    ஶர்வாய நம: ஶிர: பூஜயாமி; சந்திர மெளலயே நம: மெளலீம் பூஜயாமி; பஶுபதயே நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி;






    சிவ அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி அர்ச்சனை செய்யவும்.






    ஓம் ஶிவாய நம; ஓம் மஹேஸ்வராய நம: ஓம் ஶம்பவே நம: ஓம் பி நாகினே நம:


    ஓம் சசி ஸேகராய நம: ஓம் வாம தேவாய நம: ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்தினே நம:






    ஓம் நீல லோஹிதாய நம: ஓம் ஶங்கராய நம: ஓம் ஶூல பாணயே நம: ஓம் கட்வாங்கிணே நம: ஓம் விஷ்ணு வல்லபாய நம: ஓம் ஶிபிவிஷ்டாய நம: ஓம் அம்பிகா நாதாய நம:


    ஓம் ஸ்ரீ கண்டாய நம: ஓம் பக்த வத்ஸலாய நம: ஓம் பவாய நம: ஓம் ஸர்வாய நம:






    ஓம் த்ரிலோகேசாய நம: ஒம் ஶிதி கண்டாய நம: ஓம் ஶிவப்ரியாய நம: ஓம் உக்ராய நம: ஓம் கபர்தினே நம: ஓம் காமாரயே நம: ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம: ஓம் கங்காதராய நம: ஓம் லலாடாக்ஷாய நம: ஓம் கால காலாய நம: ஓம் க்ருபா நிதயே நம: ஓம் பீமாய நம;










    ஓம் பரஶு ஹஸ்தாய நம: ஓம் ம்ருக பாணயே நம; ஓம் ஜடாதராய நம: ஓம் கைலாச வாஸினே நம: ஓம் கவசினே நம: ஓம் கடோராய நம: ஓம் த்ரிபுராந்தகாய நம: ஓம் வ்ருஷாங்காய நம: ஓம் வ்ருஷபாரூடாய நம: ஓம் பஸ்மோதூளித விக்ரஹாய நம:










    ஓம் ஸாம ப்ரியாய நம: ஓம் ஸ்வர மயாய நம: ஓம் த்ரயீ மூர்த்தயே நம: ஒம் அநீஸ்வராய நம: ஓம் ஸர்வக்ஞாய நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் ஸோம சூர்யாக்னி லோசனாய நம:


    ஓம் ஹவிஷே நம: ஓம் யக்ஞமயாய நம: ஓம் ஸோமாய நம: ஓம் பஞ்சவக்த்ராய நம:










    ஓம் சதாசிவாய நம: ஓம் விஶ்வேஸ்வராய நம: ஓம் வீர பத்ராய நம: ஓம் கண நாதாய நம:


    ஓம் ப்ரஜாபதயே நம: ஓம் ஹிரண்ய ரேதஸே நம: ஓம் துர்தர்ஷாய நம: ஓம் கிரீசாய நம;


    ஓம் கிரிசாய நம: ஒம் அனகாய நம: ஓம் புஜங்க பூஷணாய நம: ஓம் பர்காய நம:










    ஒம் கிரிதன்வனே நம: ஓம் கிரிப்ரியாய நம: அஒம் க்ருத்திவாஸஸே நம: ஓம் புராராதயே நம: ஓம் பகவதே நம: ஓம் ப்ரமதாதிபாய நம: ஓம் ம்ருத்யஞ்ஜயாய நம: ஓம் ஸூக்ஷ்ம தனவே நம: ஓம் ஜகத்வ்யாபினே நம: ஓம் ஜகத் குரவே நம: ஓம் வ்யோம கேசாய நம:










    ஓம் மஹா ஸேன ஜனகாய நம: ஓம் சாருவிக்ரமாய நம: ஓம் ருத்ராய நம: ஓம் பூதபதயே நம: ஓம் ஸ்த்தாணவே நம: ஓம் அஹிர்புத்ன்யாய நம: ஓம் திகம்பராய நம: ஓம் அஷ்ட மூர்த்தயே நம: ஓம் அனேகாத்மனே நம: ஓம் ஸாத்வீகாய நம: ஓம் ஶுத்த விக்ரஹாய நம:










    ஓம் ஶாஶ்வதாய நம: ஓம் கண்டபரஶவே நம: அஜாய நம: ஓம் பாஶவிமோசகாய நம: ஓம் ம்ருடாய நம: ஓம் பஶுபதயே நம: ஓம் தேவாய நம: ஓம் மஹாதேவாய நம: ஓம் அவ்வயாய நம: ஓம் ஹரயே நம: ஓம் பூஷதந்த பிதே நம: ஓம் அவ்யக்ராய நம: ஓம் ஹராய நம:










    ஓம் தக்ஷாத்வரஹராய நம: ஓம் பக நேத்ரபிதே நம: ஓம் அவ்யக்தாய நம: ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: ஓம் ஸஹஸ்ர பதே நம: ஓம் அபவர்க ப்ரதாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் தாரகாய நம: ஓம் பரமேஸ்வராய நம:






    தோரக்ரந்தி பூஜை:-






    ஶிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி; வாஹாய நம: த்விதீய க்ரந்திம் பூஜயாமி.


    மஹா தேவாய நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி; வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி; கெளரீஶாய நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி; ருத்ராய நம; ஷஷ்டம க்ரந்திம் பூஜயாமி.














    பஶுபதயே நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி; பீமாய நமள் அஷ்டம க்ரந்திம் பூஜயாமி.


    த்ரியம்பகாய நம: நவம க்ரந்திம் பூஜயாமி; நீல லோஹிதாய நம: தசம க்ரந்திம் பூஜயாமி.


    ஹராய நம: ஏகாதச க்ரந்திம் பூஜயாமி; ஸ்மரஹராய நம: த்வாதச க்ரந்திம் பூஜயாமி;










    பவாய நம: த்ரயோதச க்ரந்திம் பூஜயாமி; ஶம்பவே நம: சதுர்தச க்ரந்திம் பூஜயாமி;


    ஸர்வாய நம: பஞ்சதச க்ரந்திம் பூஜயாமி; ஸதாசிவாய நம: ஷோடதச க்ரந்திம் பூஜயாமி


    ஈஶ்வராய நம: ஸப்ததச க்ரந்திம் பூஜயாமி; உக்ராய நம: அஷ்டாதச க்ரந்திம் பூஜயாமி.










    ஸ்ரீ கண்டாய நம: ஏகோனவிம்ச க்ரந்திம் பூஜயாமி; நீலகண்டாய நம: விம்ஸதி தம க்ரந்திம் பூஜயாமி; கேதாரேஸ்வராய நம: ஏகவிம்ஶதிதம க்ரந்திம் பூஜயாமி.






    கேதாரேஸ்வராய நம; நாநா வித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்ப்பயாமி.






    தூபம்:- தஶாங்க தூபமுக்யஶ்ச அங்கார வினிவேஶித தூபஸ் ஸுகந்தை ருத்பன்னஹ த்வாம் ப்ரீணயது சங்கர கேதாரேஸ்வராய நம: தூபம் ஆக்ராபயாமி.






    தீபம்:- யோகீனாம் ஹ்ருதயஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி பாஹ்ய தீபோ மயா தத்த: க்ருஹ்யதாம் பக்த கெளரவாத்.கேதாரேஸ்வராய நம: தீபம் தர்ஶயாமி.






    நைவேத்யம்:- த்ரைலொக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி; நைவேத்யம் பக்த வாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ரியம்பக த்வயா. கேதாரேஸ்வராய நம: மஹா நைவேத்யம் நிவேதயாமி.






    தாம்பூலம்:- நித்யானந்த ஸ்வரூபஸ் த்வம் யோகிஹ்ருத் கமலேஸ்தித: கெளரீஶ பக்த்யா மத் தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கேதாரேஸ்வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி






    அர்க்கியம் க்ருஹான பகவன் பக்த்யா தத்தம் மாஹேஸ்வர ப்ரயஸ்சமே ம நஸ்துஷ்டிம்


    பக்தானாம் இஷ்ட தாயக. கேதாரேஸ்வராய நம: அர்க்கியம் ஸமர்ப்பயாமி.






    கற்பூரம்:- த்வேஶ சந்திர ஶங்காஶம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம். பக்த்யா தாஸ்யாமி கற்பூர நீராஞ்சனம் இதம் சிவே. கேதாரேஸ்வராய நம: கற்பூர நீராஞ்சனம் தர்சயாமி.






    பூதேச புவனாதீஸர்வ தேவாதிபூஜித ப்ரதக்ஷிணம் கரோமித்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு.






    ஹர ஶம்போ மஹாதேவ விஶ்வேஶாமர வல்லப ஶிவ ஶங்கர ஸர்வாத்மன் நீலகண்ட நமோஸ்துதே. கேதாரேஸ்வராய நம நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.






    ப்ரார்த்தனை:- அபீஷ்ட ஸித்திமே குரு ஶிவாவ்யய மஹேஸ்வர. பக்தானாம் இஷ்ட தானார்த்தம் மூர்த்திக்ருத களேபர. கேதார தேவ தேவேச பகவன் அம்பிகாபதே ஏக்விம்ஶத்தினே தஸ்மின் ஸூத்ரம் க்ருஹ்ணாம் யஹம் ப்ரபோ.






    தோரத்தை எடுத்து அணிதல்:- ஆயுஶ்ச வித்யாம் ச ததா ஸுகம் ச ஸெளபாக்கிய ம்ருத்திம் குரு தேவ தேவ. ஸம்ஸார கோராம்புனிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே.






    வாயன ப்ரதிமா தானம்:- கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோவை ததாதி ச .கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம:


    கேதார ப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸெளபாக்கிய வர்த்தனி தஸ்மா தஸ்யா ப்ரதானேன மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா. தக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேஸ்வர ப்ரதிமையை அளித்திடவும்.






    ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப்பணமஸ்து. ஆசமனம்.செய்யவும்.
Working...
X