*15 &16 Oct 2020 No Broadcaste.*
*17/10/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணஙகளின் வரிசையை மேலும் தொடர்கிறார்*
*அதிலே அஷ்டகா சிராத்தம் பெருமைகளையும் மேலும் மிகவும் முக்கியமானதொரு புண்ணியகாலம் என்று விரிவாக தெரிந்து கொண்டோம்.*
*நாம் இதுவரையில் இந்த ஷண்ணவதி தர்ப்பணத்தை பார்த்தோம் ஒரு வருடத்தில் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து குறைந்தபட்சம் 96 தர்ப்பணங்களை நாம் செய்ய வேண்டும்.*
*அதாவது இந்த 96 என்கின்ற எண்ணிக்கை எப்படி வருகின்றது என்றால், அமாவாஸ்யா 12 வருடத்தில். யுகாதி ஒரு வருடத்தில் 4. மன்வாதி ஒரு வருடத்தில் 14. சங்கரமனம் அதாவது மாசப் பிறப்பு மாதத்தில் 12. வைதிருதி புண்ணிய காலம் வருடத்தில் 13. வயதீபாதம் 13. மஹாலய பக்ஷம் ஒரு வருடத்தில் 16. திஸ்ரோஷ்டாகஹா அதாவது அஷ்டகா புண்ணிய காலம் 12. ஆக இதையெல்லாம் கூட்டினால் 96 வரும். இந்த 96 தான் நாம் நம்முடைய பிதுருக்களை உத்தேசித்து செய்யவேண்டியதான குறைந்தபட்ச தர்ப்பணங்கள்.*
*அதிக மாதம் வந்தால் சில புண்ணிய காலங்கள் அதிகப்படியாக வரும். இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை நாம் அவசியம் செய்ய வேண்டும். இதைத் தவிர வருடத்தில் நாம் செய்யக்கூடிய தாயார் தகப்பனார் சிராத்தம் கிரகண காலங்கள் வந்தால் செய்யக்கூடிய புண்ணிய தர்ப்பணங்கள் இதெல்லாம் அதிகப்படியாக நாம் செய்ய வேண்டி வரும்.*
*இந்த 96 யும் நாம் ஏன் சிராத்தம் ஆக செய்யக்கூடாது இப்பொழுது தர்ப்பணம் ஆக செய்து கொண்டிருக்கிறோம். இதை சிராத்தம் ஆக செய்யலாம் ஆனால் அதில் விசேஷங்கள் நியமங்கள் கட்டுப்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது.*
*அதை நன்றாக தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டும். ஏனென்றால் சில சிராத்தங்களில் முன்னால் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். சில சிராத்தங்களில் பிண்டப் பிரதானம் கிடையாது. சில சிராத்தங்களில் உபவாசம் உண்டு சிலவற்றில் கூடாது. இப்படி சில விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது ஷண்ணவதி ஸ்ராத்தங்களில்.*
*ஆகையினாலே தான் நம்முடைய முன்னோர்கள் இதை தர்ப்பணம் ஆக செய்ய வேண்டும் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதியில் சிலவற்றை நாம் அன்ன ரூபமாக செய்கிறோம் என்றால், சில வருடங்களுக்கு முன்னால் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். அதாவது அமாவாசை நாம் அன்ன ரூபமாக செய்தால், ஸ்ராத்தாங்க தர்ப்பணத்தை முதலில் செய்துவிட்டு பின்பு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
அதுபோல் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். சங்கர மன சிராத்தம். வயதீபாதம். கிரகணம். இந்த மாதிரியான புண்ணிய காலங்களை உத்தேசித்து வரக்கூடியது ஆன சிராத்தங்களை முதலில் சிராத்தாங்க தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சிராத்தம் செய்ய வேண்டும்.*
*அதேபோல தட்சணாயன உத்தராயண புண்ணிய காலங்கள், மேலும் துலா மற்றும் சைத்ர விஷு, யுகாதிகள் 4. இவைகளில் எல்லாம் பிண்ட பிரதானம் கிடையாது/கூடாது. அதனாலே நமக்குத் தெரியாமல் அன்ன ரூபமாக செய்கிறோம் என்று செய்து பிண்டப் பிரதானம் செய்து விட்டோம் என்றால் குடும்பம் விருத்தி அடையாமல் போய் விடும். புத்திர சோகம் வந்து விடும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது.*
*மூத்த பையன் காலமாகி விட நேரிடும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு எச்சரிக்கை செய்கிறது. இப்படி நிறைய விஷயங்களை காண்பிக்கிறது. இது எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும். நான் நல்ல காரியம் தானே செய்கிறேன் எனக்கு இப்படி கஷ்டங்கள் எல்லாம் வருகிறதே என்று நிறைய பேர் சொல்வதை* நாம் இன்று கேட்கிறோம்.
*காரணம் அங்கே நாம் செய்யக்கூடிய தான நல்ல காரியம் புண்ணிய காலங்களில் என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன, அதை எந்த முறையிலேயே செய்யவேண்டும், என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு செய்தால், அதற்கு பலன் உண்டு. மாத்தி செய்தால் விபரீதமான பலன்களை தான் நாம் அடைய வேண்டி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான புரிதல்கள் நமக்கு இல்லாததினால் தான் நல்ல காரியம் செய்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள் சென்ற பொதுப்படையாக பேசுவதை நாம் கேட்க நேரிடுகிறது.*
*நல்ல காரியம் செய்பவர்கள் மாற்றி செய்தாலும் கூட முதலில் கஷ்டம் வரும் பிறகு நல்லது நடக்கும். நான் எதுவுமே செய்யவில்லை என்று இருந்தால் அவனுடைய வாழ்க்கையில் சுகம் என்பது அணையப் போகும் விளக்கு. நமக்கு என்ன தோன்றும் எண்ணெயே இல்லாமல் திரி இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று ஆனால் கொஞ்ச நேரத்திலே திரியே கருகிப் போய் விடும்.*
*அதனாலேயே இந்த மாதிரியான புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடிய தான*
*தர்ப்பணமோ சிராத்தமோ அல்லது ஒரு தானமோ அதற்கு என்று ஒரு முறை உள்ளது. முறைப்படி அந்த காரியத்தை நாம் செய்ய வேண்டும்.*
*எந்த காரியத்தை நாம் செய்தாலும் நன்றாக தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். தெரிந்த வரையிலும் செய்கிறேன் என்று காரியங்களை செய்யக்கூடாது. நன்றாகத் தெரிந்து கொண்டு நாம் செய்தால் முழுமையான பலன்களை நாம் அடைய முடியும்.*
*இந்த ஷண்ணவதி புண்ணிய காலங்களில் அடுத்ததாக ஒரே நாளில் 2 / 3 / 4 புண்ணிய காலங்கள் வரும். இந்த சமயங்களில் தர்ப்பணங்களை நாம் எப்படி செய்வது என்கின்ற ஒரு சந்தேகம் வரும்.*
*வரிசையாக நான்கு தர்ப்பணங்களை செய்து விடுவதா, அல்லது சேர்த்து செய்வதா? இந்த விஷயங்களில் புரிதல் நமக்கு மிகவும் தேவை. நம்முடைய சாஸ்திரம் தனித்தனியாகவும் சேர்த்தும் செய்யலாம் என்று எங்கெல்லாம் சொல்லியிருக்கிறதோ, அதற்கு விகல்பஹா என்று பெயர்.*
*விகல்பம் என்பது இரண்டு வழியாக காண்பித்துள்ளது குறிக்கிறது. அப்பொழுது அந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கு அப்படி சொல்லவில்லையோ நாம் அவ்வாறு செய்யக்கூடாது.*
*தர்ப்பண விஷயங்களில் நமக்கு மிகவும் பொறுப்பு வேண்டும். இது என்ன ஒரு சொம்பு ஜலம் கொஞ்சம் எள் இதுதானே செலவாக போகின்றது தனித்தனியாகவே செய்துவிடலாம், என்கின்ற எண்ணம் நமக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் செய்தும் செய்ததாக கணக்கு வந்துவிடும். இது மிகவும் முக்கியம்.*
*இது எல்லாம் சேர்த்து அல்லது தனித்தனியாக செய்ய வேண்டும் என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*