Announcement

Collapse
No announcement yet.

mahalayam vegetables.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • mahalayam vegetables.

    16/09/2020
    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து மஹாளய சிராத்தம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.


    மஹாளய சிராத்தத்தை அன்ன ரூபமாக செய்யும்போது சமையலில் ஏதாவது வித்தியாசங்கள் வருமா என்று பார்க்கிறோம். பொதுவாக வருடா வருடம் நாம் தாயார் தகப்பனார்களுக்கு செய்யக் கூடியது ஸ்ராத்தங்களில் என்ன விதமான காய்கறிகளை சேர்த்துக் கொள்கிறோமோ அதே நியமம் தான் ம*ஹாளய ஸ்ராத்தம் செய்ய வேண்டும்.


    தர்மசாஸ்திரம் நாம் என்ன மாதிரியான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்பதை வருடாவருடம் நாம் செய்கின்ற சிராத்தத்தை செய்யும்போது பார்க்கலாம்.


    இது விஷயமாக நிறைய தகவல்களை தர்ம சாஸ்திரம் நமக்கு கொடுத்திருக்கிறது. அதாவது பொதுவாக தர்மசாஸ்திரம் ஒரு கட்டுப்பாடு சொல்கிறது. நாம் சமைக்கின்ற பொழுது அந்தக் காயை ஒரே மாதிரியான நிறம் நமக்கு தெரிய கூடாது.


    அதேபோல் சமைக்கின்ற பொழுது அதிகப்படியான வாசனைகள் வரக்கூடாது. அந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான ஒரே நிறம் வருகிறது என்றால் அதையும் தவிர்க்க வேண்டும். #பீட்ரூட்_போன்ற_காய்கறிகளை நாம் சமைக்கும் பொழுது செக்கச்செவேல் என்று நமக்கு தெரிகிறது. இந்த மாதிரியான காய்கறிகளை நாம் மருந்தாக சில வியாதிகளுக்கு சாப்பிடலாமே தவிர, தினமும் சமையலில் அதை சேர்த்துக் கொள்ளக் கூடாது.


    அதேபோல் #சமைக்கின்ற பொழுது #வாசனை_வருகிறது_என்றால்_அதை நாம் சாப்பிடக்கூடாது. அதுவும் சில நோய்களுக்கும் மருந்தாக சாப்பிடலாம். ஆனால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.


    அதனால்தான் நமக்கு #வெங்காயம் #பூண்டு_முருங்கை என்று இப்படி நிறைய காய்கறிகள் இருக்கின்றன. சமைக்கின்ற பொழுதே வாசனை வர கூடியதான காய்கறிகள். முள்ளங்கி பீர்க்கங்காய் போன்ற இந்த காய்கறிகளை ஏன் சாப்பிட கூடாது என்று சொல்கிறோம். இவைகள் சமைக்கின்ற பொழுது வாசனைகள் வரும்.


    #முக்கியமாக_பிதுர்_காரியங்களில்
    #இந்த_வகையான_வாசனை_வரக்கூடிய #காய்கறிகளை_சேர்க்கவே_கூடாது. அதேபோல் இந்த காய்கறிகளை பறிக்கின்ற போது #நகங்களை_வைத்து #பறிக்கக்கூடிய_காய்கறிகளை_சமைக்க கூடாது.


    #தேசாசாரம்_என்று_ஒன்று_இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும் ஒருவிதமான காய்கறிகள் சாகுபடி நடக்கும். எந்த தேசத்தில் அது சாகுபடி செய்து இருந்தாலும் வாசனைகள் இல்லாமல் இருந்தால் அதை சமைக்கலாம். ஒரே விதமான நிறம் இல்லாமலும் சமைக்கும் போது வாசனை வரக்கூடிய காய்கறிகள் இல்லாமலும் இருந்தால் அதை சமைக்கலாம் தோஷமில்லை.


    #ஒரே_விதமான_நிறத்தையோ_அல்லது அதிகப்படியான வாசனையை கொடுக்கக்கூடிய காய்கறிகளை சாப்பிட்டால் அது புத்தியை கெடுக்கும். அதேபோல் நெய்யை சேர்த்து நெய்யில்/எண்ணெயில் பக்குவமாக கூடிய வஸ்துக்கள், உப்பு சேர்த்து செய்யக்கூடிய வஸ்துக்கள், வெல்லம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்யக்கூடிய வஸ்துக்களை* சேர்த்து
    கொள்ளலாம்.


    ஸ்ராத்த்தில் இது போன்ற காய்கறிகளை தான் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளின் உடைய பட்டியலை தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது. ஒவ்வொரு தேசங்களிலும் ஒவ்வொரு விதமான பெயர்களை சொல்கிறது.
    இப்பொழுது உதாரணமாக பார்த்தோமேயானால்,


    #களஞ்சம்_சாப்பிடக்கூடாது அப்படி என்றால் என்ன, ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் நமக்கு கிடைக்கிறது.*
    #களஞ்சம்_என்றால்_வெங்காயம்_பூண்டு #இவைகளுக்கு_அந்த_பெயர். இதை ஒரு பிரதேசத்திலே சொல்கிறார்கள். வேறு சில இடத்திலேயே நிலக்கடலையை அந்தப் பெயருடன் குறிப்பிடுகிறார்கள். நிலக்கடலையை தோலுடன் நிலத்தில் குழி தோண்டி அங்கங்கே போட்டு, மூடிவிடவேண்டும்.
    இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அதை நாம் தோண்டி எடுத்தோம் என்றால் நிலத்தினுடைய சூட்டிலேயே அது பக்குவமாக இருக்கும். அதற்கு சில பிரதேசங்களில் களஞ்சம் என்று சொல்லப்படுகிறது.


    அதேபோல் இன்னும் சில பிரதேசங்களில் சில காய்களினுடைய கொட்டைகளை வைத்து அதை உபயோகப்படுத்தி, சாப்பிடுவதற்கு களஞ்சம் என்று பெயர்.


    இப்படி தேசத்திற்கு தேசம் அவைகள் வேறுபடுகின்றன. #இதையெல்லாம் #மனதில்_வைத்துக்_கொண்டுதான்
    #மகா_பெரியவா_காபி_சாப்பிடக்கூடாது #என்று_சொல்லி_இருக்கிறார். ஏனென்றால் அது ஒரு செடியின் உடைய கொட்டையை எடுத்து காயவைத்து அதை பொடி செய்து போட்டு குடிக்கிறோம். அதை வெண்ணீரில் போடும் போதே வாசனை வரக்கூடிய வஸ்து.


    ஆகையினாலே தான் காபி கொட்டையை காப்பியை சாப்பிட கூடாது என்று பெரியவா காண்பித்திருக்கிறார். இப்படி அந்தந்த தேசா சாரங்கள் படி காய்கறிகள் மாறுபடுகின்றது.


    என்ன விதமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கின்ற பொழுது, அதாவது கருப்பு நிறத்தில் உள்ள எள், உளுந்து, இவைகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். யவை என்று ஒரு தானியம், கோதுமை மாவை போல அதை உபயோகப்படுத்தலாம். அரிசி, கோதுமை, பாசிப்பருப்பு, சிறுகடுகு, இந்த மாதிரியான தானியங்களை நாம் கட்டாயம் ஸ்ராத்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    முக்கியமாக சிலவற்றை சேர்த்துக் கொள்ளக் கூடாது. துவரம் பருப்பு, மொச்சை கொட்டை, கொள், கடலை, இவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் ஸ்ராத்த தினத்தில் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.


    #கோதுமை_என்கின்ற_தானியத்தை #அவசியம்_நாம்_சிராத்த_தினத்தில் #சேர்க்க_வேண்டும். கோதுமை சேர்க்காமல் செய்யக்கூடிய சமையல் சிராத்தம் நாம் செய்யாத தாகவே ஆகிவிடும். என்று தானியங்களின் வரிசைகளை காண்பிக்கின்றனர். காய்கறிகளும் என்னென்ன சேர்த்துக் கொள்ளலாம் என்று காண்பிக்கின்றனர் அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

  • #2
    Re: mahalayam vegetables.

    17/09/2020
    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து மஹாளயம் என்கின்ற தலைப்பில் நாம் வருடாவருடம் செய்யக்கூடிய பெற்றோர்களின் சிரார்த்த தினத்தில் சேர்க்க கூடிய காய்கறிகள் என்ன என்பதைப் பற்றி மேலும் விளக்குகிறார்.
    அதிலே சில முக்கியமான காய்கறிகளை நாம் சிரார்த்த தினத்தில் அவசியம் சேர்க்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.
    அப்படி என்னென்ன காய்கறிகள் சொல்லப்பட்டிருகிறதோ அவைகளை நாம் கட்டாயம் சேர்க்க வேண்டும். #அதேபோல்_கட்டாயம்_சேர்க்கப்பட #வேண்டிய_காய்கறிகள் நம்முடைய பிரதேசங்களில் கிடைக்கவில்லை என்றால், காசி போன்ற க்ஷேத்திரங்களுக்கு நாம் விட்டு விட்டு வந்து விட்டோம் என்ற காரணத்தினாலோ, சேர்க்காமல் இருக்க கூடாது.
    அதேபோல் சேர்க்கக்கூடாது இந்தக் காய்கறிகளைச் சேர்க்காமல் இருக்க வேண்டும். நம் தாயார் தகப்பனார் களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினாலோ, நம் பிரதேசங்களிலே அது எல்லோராலும் சேர்க்கப்படுகிறது என்கின்ற காரணத்தினாலேயோ, காய்கறிகளை சேர்க்கக்கூடாது.
    தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்ய வேண்டும் நாம். இதிலே சில மாறுதல்கள் வந்தால் அது செய்யாத கணக்கு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. எப்படி செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதன்படி #நாம்_செய்ய_இருந்தால்_அது #செய்யவில்லை_என்று தான் அர்த்தமாகும். ஆகையினாலே தான் நாம் சிராத்தங்கள் எல்லாம் செய்தாலும்கூட அவைகள் செய்யாத கணக்கிலேயே வந்துவிடுகின்றன.
    இதையெல்லாம் நாம் மனதில் வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் செய்ய வேண்டும். மிகவும் பொறுப்பெடுத்து இந்த காரியத்தை செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை தான் செய்கிறோம் சிரமம் பார்க்காமல் முயற்சி எடுத்து செய்ய வேண்டும்.
    நம் தாயார் தகப்பனார் கள் நமக்கு மிகவும் அன்பாக ஆகாரங்கள் கொடுத்து தாலாட்டி, படிப்பு நமக்கு கொடுத்து, துணிமணிகள் கொடுத்து, நம்மை ஒரு ஆளாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
    #அவர்களுக்கு_நாம்_மிகவும் #கடமைப்பட்டு_இருக்கிறோம். இவனெல்லாம் ஒரு குழந்தையா என்று அவர்கள் பிறந்தவுடனே நினைத்திருந்தால், நம்முடைய நிலைமை என்ன ஆகியிருக்கும், என்று ஒரு நிமிடம் நாம் யோசனை செய்து பார்க்க வேண்டும்.
    அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம், இதை மனதில் வைத்துக் கொண்டு சிரமத்தை பார்க்காமல் இந்த வஸ்துக்கள் எங்கே கிடைக்கின்றனவோ, அங்கு போய் வாங்கி வந்து இந்த சிராத்த காரியங்களை செய்ய வேண்டும்.
    என்னென்ன விதமான காய்கறிகளை சேர்க்கலாம் என்று சொல்கின்ற பொழுது, அதாவது #வெள்ளரிக்காய்_பாகற்காய் #புடலங்காய்_வாழைப்பூ_வாழைத்தண்டு #வாழைக்காய்_இவைகள்_கட்டாயம் #சேர்க்கப்படவேண்டும்
    #சிராத்த_தினத்தில்.
    இவைகள் இல்லாமல் சிரார்த்தம் செய்யக் கூடாது. #பசுவினுடைய_பால், #நெய்_உள்ளே_விதை_உள்ள #காய்கறிகள்_அவரைக்காய் #கொத்தவரங்காய்_இவைகளுக்கு #உள்ளே_விதை_இருக்கும்_விதைகள் #இல்லாத_காய்கறிகளை #சேர்க்கக்கூடாது_சிராத்தத்தில். #பொதுவாக_தினமும்_நாம்_விதைகள் #இல்லாத_காய்கறிகளை_சாப்பிடக் #கூடாது_விதை_கண்டிப்பாக_உள்ளே #இருக்க_வேண்டும்.
    அது போன்ற காய்கறிகளைச் சிராத்தம் அன்று நாம் சேர்க்க வேண்டும். நெய்யின் மூலம் பக்குவமாக கூடிய வஸ்துக்கள் பாலில் பக்குவமாகக் கூடிய வஸ்துக்கள் சிராத்தத்தில் சேர்க்கலாம்.
    மேலும் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, பசும்பால் தான் சேர்க்க வேண்டும். நாம் இருக்கின்ற பிரதேசத்திலே பசும் பால் கிடைக்கவில்லை என்றால் மற்ற பால்களை உபயோகப்படுத்தலாமா என்றால் கூடாது. அது என்ன விதமான பால் என்று உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் பின்பு தான் உபயோகப்படுத்த வேண்டும். பசும்பாலை உபயோகப்படுத்துவது உத்தமம்.
    நாம் இருக்கும் இடத்தில் பசும்பால் கிடைக்கவில்லை என்றால் அப்பொழுது எருமைப் பாலை வாங்கி காட்சி தயிராக உபயோகப்படுத்த வேண்டும். நேரடியாக எருமைப் பாலை அப்படியே உபயோகப்படுத்தக் கூடாது.
    #பசும்_பாலை_நேரடியாக #உபயோகப்படுத்தலாம். ஒட்டகப்பால் செம்மரி பால் ஆட்டுப்பால் இவைகளை எப்பொழுதும் நாமும் சாப்பிடக்கூடாது பிதுர் காரியங்களிலும் அதை சேர்க்கக்கூடாது. இதை தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.
    இந்த காய்கறிகள் எல்லாம் நாம் சேகரிக்க என்ற பொழுது, எந்த இடத்திலே போய் நாம் சேகரிக்க வேண்டும் என்பதை #மகாபாரதம்_காண்பிக்கிறது. #காய்கறிகளை_நாமே_போய்_சேகரித்து #அன்றைய_தினம்_வாங்கி_வருவது #என்று_வைத்துக்_கொள்ளக்கூடாது. #அதாவது_ஒரு_கூலியோ_அல்லது #பணமும்_கொடுத்து_தான் #காய்கறிகளை_வாங்க_வேண்டும். நாம் கொடுக்க கூடியதான பணம் கணக்கில் வராத பணம் ஆக இருக்கக் கூடாது. கருப்பு பணமாக இருக்கக்கூடாது. லஞ்சம் வாங்கின பணமாக இருக்கக்கூடாது.
    #லஞ்சம்_வாங்கிய_பணத்திற்கு/#அரசாங்கத்தினுடைய_கணக்கிற்கு #வராத_வைத்துக்_கொண்டிருக்கக்_
    #கூடிய_பணத்திற்கும்_உத்கோஜம்
    #என்று_பெயர். அந்தப் பணமாக இருக்கக்கூடாது. நாம் சேகரித்த காய்கறிகளை கொடுக்கக் கூடியவன் சுத்தனாக இருக்க வேண்டும். காய்கறிகளை வியாபாரம் செய்யக் கூடியவனாக இருக்க வேண்டும். அவன் தப்பு செய்கின்றவன் என்று தெரிந்தால் அவன் இடத்திலேயே காய்கறிகளை வாங்க கூடாது. #தவறான_முறையில் #சாகுபடி_செய்ததாகவும் இருக்கக்கூடாது. இரசாயன உரங்கள் மருந்துகள் நிறைய போட்டு இவன் சாகுபடி செய்கின்றவன் என்று தெரிந்தால், அவனிடத்திலே அந்த காய்கறிகளை வாங்க கூடாது. தவிர்க்க வேண்டும்.
    #நாம்_பித்ரு_காரியங்களுக்கு_காய்கறி #வாங்குகிறோம்_என்று_சொல்லி #குறைத்து_கேட்டு_வாங்க_கூடாது. #கொடுக்கின்ற_அவனும்_ஏதோ_பிதுர் #காரியத்திற்காக_நீங்கள் #வாங்குகிறீர்கள்_என்று_கருவேப்பிலை #கொத்தமல்லி_கொடுத்தாலும்_அதை #வாங்க_கூடாது.
    நாமும் தொகையை குறைத்து கொடுத்து வாங்கினாலும் அவனும் தொகையை வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தாலும், அப்படி செய்யக் கூடிய தானே சிராத்தம் அவனைப் போய் சேரும் நாம் செய்யாத தாகவே ஆகும். அப்படி இருந்தால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து மறுநாள், அந்த சிராத்தத்தை செய்ய நேரிடும்.
    #இப்படி_எல்லாம்_நாம்_செய்வதினால் #தான்_சிரார்த்தம்_செய்தும்_நாம்
    #கஷ்டபடுகின்றோம்_அதை_கொடுக்கக் #கூடியவன்_சௌக்கியமாக இருக்கிறான்.
    காரணம் என்ன இது போன்ற சில தவறுகள் நடப்பதில் தான் பலன்கள் மாறி போய்விடுகின்றன என்று நமக்குத் தெரிய வருகிறது.
    மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

    Comment

    Working...
    X