Announcement

Collapse
No announcement yet.

RADHASHTAMI.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • RADHASHTAMI.

    24-10-2020--ராதா ஜயந்தி:--சுக்ல பக்ஷ அஷ்டமி திதி விசாக நக்ஷத்திரத்தில் ஆஸ்வின மாதம் ராதை அவதரித்தாள். எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்வதால் ராதா என சொல்கிறோம்.




    மற்றொரு வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் கண்ணனுக்கும் ராதைக்கும் திருமணம் நடந்தது.




    மூல ப்ரக்ருதியின் ஏவலினால் துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ராதா, சாவித்திரி என ஐந்து வித சக்திகள் உண்டாயின..இவர்களே பஞ்ச ப்ரக்ருதிகள். ப்ரக்ருதி என்றால் சிருஷ்டியால் மனவெழுச்சி உடையவர்




    என அர்த்தம் கொள்ளலாம். சிருஷ்டிக்கு ஆதியில் உள்ளவர்கள். சத்வ, ராஜஸ தமஸ் குணங்களை தன்னகமான சக்தியோடு சிருஷ்டிப்பதில் இவ்வைவரும் முதல் சக்தியாக இருப்பவர்கள்.




    இந்த ஐந்து வித ப்ரக்ருதியான சக்தி , பரமாத்மாவான ப்ருஹ்மத்தோடு கலந்திருக்கும் சித்சக்தி ஆகும். சிருஷ்டி காலத்தில் இந்த சக்தி வலது பாகம் ஆணாகவும் இடது பாகம் பெண்ணாகவும் இருப்பாள்.




    அக்நியில் உஷ்ணம் எப்படி இரண்டற கலந்திருக்கிறதோ அதுபோல ஆண் , பெண் என இரண்டு உருவமாக தென்பட்டாலும்




    அந்த சக்தி ஒன்றே. ஒரே ப்ருஹ்ம சொரூபம் தான். அந்த சக்தி இரண்டு உருவமாக தோற்றமுற்ற போது அதில் மூல ப்ருக்ருதி பெண் உருவமான ஈஸ்வரி; சிவ ரூபமான க்ருஷ்ணரை--- ஆண் உருவை




    தோற்று விக்க வேண்டும் என்று எண்ணி தன்னியல்பாய் தனி இரண்டாக பிரிந்து தோன்றினாள்.




    துர்க்கா தேவி:--
    பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அருள் செய்பவள். இவள் சிவப்ரியை. கனேசருக்கு அன்னை; விஷ்ணு மாயை. முழு ப்ரம்ம ஸ்வரூபிணி.எல்லா பொருட்களிலும் நிறைந்து இருப்பவள்.




    பிரம்மா முதலான தேவர்கள், மகரிஷிகள், மநுக்கள், முதலியவர்களால் துதிக்க படுபவள்; எல்லா பொருட்களிலும் நிறைந்து இருப்பவள். புகழ், உயர்வு, மங்களம், சுகம், மோக்ஷம் முதலியவற்றை வழங்குபவள்.




    துக்கம் பீடை முதலியவற்றை ஒழிப்பவள். தன்னை சரண் அடைந்த வர்களையும், பலஹீனர்களையும் காப்பாற்றுபவள். தேஜோ மயமானவள்; தேஜஸிற்கு நிலை களமான தேவதை.சக்திகளுக்கெல்லாம்




    மஹேஸ்வரி. சித்தியை தருபவள்; அறிவுணர்வு, தூக்கம்., பசி, தாஹம், சோம்பல், கருணை, கவனம், பொறுமை, பிரமை, மெய்யரிவு, துஷ்டி, லக்ஷ்மி, தைரியம், மாயை ஆகியவற்றின் சக்தி உருவாக திகழ்பவள்;




    சிவ ரூபமான க்ருஷ்ணரை அடைந்திருக்கும் போது நாராயணியாகவும் தோண்றினவள். இவளது குண சிறப்புகள் அளவற்றவை.ரஜோ குணம்.










    லக்ஷ்மி தேவி:--ஸத்வ குணம்.சுத்த ஸத்வத்தின் தன் வடிவமாகவும், ஸகல ஸெளபாக்கியங்களின் தன் உருவமாகவும், அவற்றிர்க்கு அதிஷ்டான தேவதை யாகவும் லக்ஷ்மி தேவி விளங்குகிறாள்.




    இவள் மனோஹரி; அமைதி; அழகு; ஒளி, சாந்தி; முதலியவற்றின் வடிவம். நற்குண மயமான சுசீலை; ஸர்வ மங்கள ஸ்வரூபிணி; காமம், லோபம், மோஹம், ரோஷம், மதம், அஹங்காரம், ஆகியவற்றை




    வர்ஜிப்பவள்; இந்திரிய நிக்ரியை யாகவும் பக்தர்களிடம் ப்ரிய மானவளாகவும் இருப்பாள். இவள் விஷ்ணுவின் ப்ரேமைக்கு உரியவள். விஷ்ணுவின் ப்ராணனுக்கு இணையானவள், ஸகல பல வடிவினி;




    ஜீவநோ உபாய உருவினி; இவள் வைகுண்டத்தில் விஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மி; சுவர்கத்தில் சுவர்க்க லக்ஷ்மி; ராஜ்யங்களில் ராஜ்ய லக்ஷ்மி; ராஜாக்களிடம் ராஜ லக்ஷ்மி;




    இல்லற வாசிகளிடம் கிரஹ லக்ஷ்மி; எல்லா ப்ராணிகளிடத்தில் சோப லக்ஷ்மி; புண்ணியவான்களிடம் ப்ரீதி லக்ஷ்மி; க்ஷத்திரியரிடம் கீர்த்தி லக்ஷ்மி;




    வைசியரிடம் வர்த்தக லக்ஷ்மி; பாவிகளிடம் கலக லக்ஷ்மி; வேதாந்திகளிடம் தயா லக்ஷ்மியாகவும் இப்படி பல்வேறு பெயர்களோடு விளங்குகிறாள்.








    ஸரஸ்வதி தேவி:-- தாமஸ குணம்.
    வாக்கு, புத்தி, வித்தை, சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யறிவு; ஞானம் என்பனவற்றின் நிலை களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும் ஸரஸ்வதி தேவி விளங்குகிறாள்.




    அதனால் இவள் தன்னை வழிபடுபவர்களின் புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவிதையின் கவிஉருவாகவும், அந்த கவியில் யுக்தி வடிவமாகவும்,அந்த யுக்தியில் நுண் பொருளின் வடிவமாகவும், அந்த




    நுண் பொருளை மறவாதிருக்க செய்யும் சிந்தனை வடிவமாகவும், அந்த சிந்தனையின் ஆதாரமான பல வித சித்தாந்த பேதங்களின் வடிவாகவும்,




    அச்சித்தாந்த பேதங்களின் உட்பொருள் விசாரனையில் விளக்க கூடிய விசாரணை வடிவமாகவும், அந்த வாக்கிய பேதங்களால் எல்லா சந்தேஹங்களையும் நீக்க கூடிய நாச காரணியாகவும், அதனால்




    தெளிவுறும் விசார காரணியாகவும், அந்த விசாரம் இதுதான் என்று எடுத்தியம்பும் கிரந்த காரணியாகவும், அக்கிரந்தங்களை அறிவிக்கும் ஆற்றல் வடிவமாகவும், ஸரஸ்வதி தேவியே விளங்குகிறாள்.








    எல்லா விதமான ஸங்கீதங்களின் வடிவமாகவும், அவ்வின்னி சைகளுக்கு ஏற்ற தாள, பேத, காரண வடிவாகவும், அவற்றிர்க்கு ஏற்ற




    பொருளறிவு வடிவமாகவும் அப்பொருளறிவிற்கு ஏற்ற கவிதை வடிவமாகவும், அவற்றால் மகிழ்ச்சி பெறும் ப்ரபஞ்ச வடிவமாகவும் ஸரஸ்வதி தேவியே விளங்குகிறாள்.


    சொற் பொருள் வாதங்களின் வடிவமாகவும், அவற்றால் அடையும் அமைதி வடிவமாகவும், விளங்குகிறாள். சகல வித்தைகளின் வடிவம் தானே என்பது தோன்றும் படி எப்போதும் வீணை, புத்தகத்துடன் காட்சி அளிப்பாள்.


    இத்தகைய வித்தைகளால் விளைய கூடிய ஆத்ம பலனான சுத்த சத்துவ ஸ்வரூபிணியாகவும், --தூய அமைதி பண்பின் தன்




    வடிவமாகவும், நற்குணையாகவும் , திருமகளுக்கும் திருமாலுக்கும் இனிமையான வளாகவும் விளங்குகிறாள்.




    மஹா விஷ்ணுவை இரத்தின மாலையால் பூஜிப்பவள். தவ வடி வினவளாக இருந்து தவ யோகிகளுக்கு பலனளிப்பவள். ஸித்தி வித்தை




    வடிவினவளாக இருந்து அவற்றை வழங்குபவள். இவை வேதத்தில் கூறப்பட்டுள்ள ஜகதம்பிகையான ஸரஸ்வதி தேவியின் சிறப்புகளின் சிலவன வாகும்


    சாவித்ரி தேவி நான்கு குலங்கள், வேதாந்தங்கள், சந்தஸ்,ஸந்தியா வந்தன மந்திரம், தந்திர சாஸ்திரங்களுக்கு தாயாக விளங்குபவள்.




    சாவித்ரி தேவி பிராமண குல வடிவினள்; ஜப வடிவினள்;தவ உருவமாகவும், அதனால் ஏற்படும் ப்ரும்ம தேஜஸின் வடிவினள்.




    அதனால் ஏற்படும் தூய திருவுருவ மாகவும், நமஸ்கார ஸ்வரூபிணி யாகவும், , காயத்ரி வடிவாகவும், அவற்றை அனுஷ்டிக்கும் அந்தண ப்ரியை யாகவும்,தீர்த்தத்தின் வடிவ மாகவும்,அந்த தீர்த்தத்தை




    தொட்டவுடன் தூய்மை படுத்த விரும்புவளாகவும்; சுத்த ஸ்படிக சுத்த ஸத்துவ ஸ்வரூபிணியாகவும், அதனால் ஏற்படும் பரமானந்த ஸ்வரூபிணி யாகவும், அந்த வடிவில் அநாதியாய் உள்ளவளாகவும்,




    பர ப்ருஹ்ம வடிவாகவும் அதை அடையும் ப்ருஹ்ம ஞானிகளின் பிரும்ம தேஜோ மயமாகவும், அந்த சக்திக்கு அதிஷ்டான




    தேவதையாகவும் விளங்குகிறாள்.அவளது பாத தூளியால் உலக மெல்லாம் தூய்மை அடைகிறது.




    ராதா தேவி:--




    பஞ்ச பிராணன்களுக்கும் ஆதி தேவி. ஐந்து வகை ப்ராணன்களின் வடிவானவள். பிராணனை விட மிகவும் ப்ரீதி பொருளாகவும், எல்லா தேவிகளிடமுள்ள அழகு உருவாகவும், எல்லாரிடத்தும் உள்ள




    சம்பத்தாகவும், எல்லா உடல்களிலும் இடது பாக ஸ்வரூபமாகவும், குணத்தினாலும், தேஜஸினாலும் நிறைந்துள்ள பெருமை உருவம், பரா பரங்களுக்கு சாராம்சம், அவைகளுக்கு ஆதி மூலமாகவும்,




    அநாதியாயும்,பூஜைக்கு உகந்தவள்; அனைவராலும் பூஜிக்க படுபவள்; ராஸ க்ரீடைக்கு அதிதேவதை; பரமாத்மாவின் ராஸக்ரீடை மண்டபத்தில் இருப்பவள்; ராஸ க்ரீடையால் அலங்காரமானவள்;




    ராஸக்ரீடைக்கு இறைவி; மா ரகசியமானவள்; ராஜ மாளிகையிலும் கோ குலத்திலும் வசிப்பவள்; கோபிகா ஸ்த்ரீகளின் வேடம் பூண்டவள்,அளவற்ற ஆனந்த மயமானவள்; நிர்குணையாகவும்,




    நிராகரையாகவும்.பாவ புண்ணிய மற்றவளாகவும் அமைதி, அகங்காரமின்மை; , அவாவின்மை, பக்தர்களுக்கு அருள் புரிதல்




    முதலியன வாய்ந்தவள்; வேத வழிகளால் தியானித்து அறிய கூடியவள்.தேவர்களாலும் ;முனிவர்களாலும் ஞான நோக்கால் பார்க்கபடுபவள்;




    நெருப்பால் சுத்தமான ஆடையை அணிந்து கொண்டு பல வித அலங்காரங்கள் செய்து கொண்டு கோடி சந்திரன் ஒருங்கே உதயமானது போல் அவளது திருமேனி ஒளி வீசும். ஸகல காந்தியோடும் அவள் தேகம் நேர்த்தியாக விளங்கும்.




    க்ருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தியும் பற்றுதலும் கொண்டவள். எல்லா சம்பத்துகளையும் வழங்குபவள். வராஹ அவதார வடிவாக இருக்கும் மஹா தேவியின் திருவடி தாமரை ஸம்பந்தபட்ட சிறப்பால் பூமாதேவியை தூய்மை படுத்துபவளாக ப்ரகாசிக்கிறாள்.




    புதுமையான மேகத்தில் ஒளி வீசும் மின்னலை போல் பரமாத்மாவின் மார்பில் பெண் ரத்தினமாக திகழ்கிறாள்.பிரம்மாவினிடம் பிருந்தா வனந்தோறும் தன்னை காணும் படி செய்தவள் இந்த ராதாதேவி.




    பிரம்மா அறுபதாயிரம் வருடம் தவம் புரிந்தும் காட்சி கொடுக்க .வில்லை.


    கங்கா தேவி:--
    கங்கா தேவி பிரகிருதி தேவியின் பிரதான அம்சமாவாள்.விஷ்ணுவின் தேக அம்சத்திலிருந்து நீர் வடிவாக பிறந்தவள்.நதி களுக்கு எல்லாம் அதி உன்னதமானவள்.. மோக்ஷம் வழங்குபவள். கோ லோகத்திற்கு ஆனந்தமாக ஏறக்கூடிய படிக்கட்டை போன்றவள்.




    பரமேஸ்வரரின் விரி சடையான மேருவில் முத்து போல் ஒளி வீசுபவள்.
    பாரத தேசத்தில் தவம் செய்பவர்களுக்கு தபஸ் சித்தியை வழங்குபவள்.








    துளசி தேவி.--
    பால் போல் பிரகாசிக்கும் சுத்த தத்துவ சொரூபிணியாகவும், பலமற்றவளாகவும், அகங்கார மற்றவளாகவும், பதிவிரதையாகவும் நாராயணருக்கு ப்ரியை யாகவும் துளசி தேவி விளங்குகிறாள்.




    பிரகிருதி தேவியின பிரதான அம்ச வடிவினள்.இலை உருவினள். விஷ்ணு ப்ரியை. விஷ்ணு பூஷண ஸ்வரூபிணி; திருமாலின் திருப்பாதத்தில் இருப்பவள்.
    தவம், சங்கல்பம், பூஜை முதலானவற்றை விளைவிப்பவள். எப்போதும் புண்ணியம் நல்குபவள்.




    தரிசனத்தினாலும், ஸ்பரிசனத்திலும் தென் திசையில் முக்தியை கொடுப்பவள். கலி யுகத்தில் பெருகும் பாவத்தை அக்னி போல் எரித்து ஒழிப்பவள். பூமி தேவியை தனது பாத ஸ்பரிசத்தால் தூய்மை




    படுத்துபவள்.
    எல்லா கர்மங்களும் வீணடையாமல் பயனடைய செய்பவள். மேலோர் செய்யும் தவம் தரிசனத்தாலும், ஸ்பர்சத்தாலும், சித்தியாவதற்கு தீர்த்த




    சொரூபிணியாக விளங்குபவள். பாரத தேசத்தில் போகத்தை விரும்புவோற்கு போகத்தையும், முக்தியை விரும்புவோர்க்கு முக்தியும் வழங்க வல்ல கற்பக விருட்சம் போன்றவள்.




    மாநஸா தேவி:---
    பாரத தேசத்தவரை மகிழ செய்ய வல்ல பிரக்ருதி தேவியின் பிரதான அம்ச ரூபிணி. இவள் பர தேவதை; சங்கரருக்கு பிரிய சிஷ்யை; மஹா ஞாந ஸ்வரூபிணி; அநன்தன் சகோதரியாகவும்,




    நாகங்களால் பூஜிக்கபடும், நாகேஸ்வரியாகவும், நாக மாதாவாகவும், நாகேந்திர கணங்களோடு கூடியிருப்பாள்.




    நாகங்களே ஆபரணங்கள். நாகத்தையே வாஹநமாகவும், பஞ்சணையாகவும் கொண்டிருப்பாள்.. சித்த யோகிணி; விஷ்ணு ரூபிணி.
    பேரழகி; தவம் புரிபவளாகவும், தபோரூபிணியாகவும்,




    தவ பலத்தை தருபவளாகவும் விளங்குபவள். பிரம்ம தேஜஸினால் ஒளிரும் பர ப்ரும்ம ஸ்வரூபிணி.




    ஸகல மந்திரங்களின் அதிதேவதை. ஜரத் காரு முனிவரின் பத்னி. ஆஸ்தீக முனிவருக்கு தாய். மஹா பதிவிரதை.மா பெரும் புகழ் பெற்றவள்.




    சஷ்டி தேவி:---




    பிரக்ருதி தேவியின் பிரதான அம்ச ரூபிணியாக விளங்குகிறாள். இவள் தேவசேனை யாகவும், மாத்ருகா கணங்களிர் பூஜிக்கபட்டவளாகவும் சிறந்து திகழ்கிறாள்.இவள் பிரக்ருதியின் ஆறாவது அம்சமாக தோன்றியவள்.




    மூன்று உலகிலும் வாழ்பவர்களுக்கு புத்திரர், பேரர் போன்ற சம்பத்துகளை கொடுத்து சந்ததியை காப்பாற்றும் சம்பத் ஸ்வரூபிணி; குழந்தகளிடம் வளர்ச்சி வடிவினள்; யோகினி வடிவாகவு முள்ளவள். எப்போதும் விருப்பங்களை நிறைவேற்றும் கருணை வடிவினள்.உத்தம தாய். பூமியிலும், வானத்திலும் குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் வராமல் காப்பாற்றும் ரக்ஷ காரிணி.




    மங்கள சண்டிகை:--
    பிரக்ருதி தேவியின் முகத்திலிருந்து தோன்றி எப்போதும் சர்வ மங்களத்தை கொடுப்பவள். படைப்பு காலத்தில் மங்கள ஸ்வரூபிணியாகவும், அழிப்பு காலத்தில் கோப உருவினவளாகவும் இருப்பதினால் அவளை மங்கள சண்டிகை என்று கூறுகிறார்கள்.
    செவ்வாய் கிழமை தோறும் பூஜிக்க படுகிறாள்.




    புத்ரன், பேரன், புகழ்; செல்வம் முதலியவற்றை பெண்களுக்கு வழங்கி மகிழ்வூட்டுகிறாள்.




    காளிகா தேவி:---


    பிரக்ருதியான துர்கையின் முகத்திலிருந்து பகுதி அம்சமாக சும்ப நிசும்பர்களின் பெரும் போராட்டத்தின் போது கோபதுடன் ஸகல ப்ரபஞ்சத்தையும் ஒரே கணத்தில் அழிக்க கூடிய சக்தியுடன் தோன்றினாள்.




    தேஜஸிநாலும் குணத்தினாலும் துர்கா தேவிக்கு ஸமமானவள். கோடி ஸூர்யர்களுக்கு ஈடாக ப்ரகாசிக்கும் உடற் காந்தி உள்ளவள்.வலிமை நிறைந்தவள்; சகல சித்திகளையும் கொடுப்பவள். கிருஷ்ணருக்கு ஸமமாந




    தேஜஸ், விக்கிரம குணங்கள், பாவனைகள், நிறம், முதலியவற்றை கொண்டவள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் விரும்புவர்களால் பூஜிக்க படுகிறாள்.


    பூமா தேவி:--
    இவள் பிரகிருதி தேவியின் முக்கிய அம்சங்களால் பிறந்தவள். எல்லாவற்றுக்கும் அடிபடையானவள். பிரமன், தேவர்கள், முனிவர்கள் மனிதர்கள், மன்னர்கள் ஆகியோரால் போற்றி துதிக்க படுகிறாள்.




    எல்லா ஒளஷத ரூபிணியும் அவளே. ரத்னங்களுக்கு ஸ்தான மானவள். ரத்தின கர்பிணீ. ஸமுத்திரங்களுக்கெல்லாம் ஆதாரமானவள்.




    அனைவருக்கும் ஜீவனோப காரணியாகவும் ஸகல சம்பத்தையும் கொடுப்பவளாகவும் விளங்குகிறாள்.




    இனி தாவர ஜங்கமமாக விளங்கும் இந்தபிரபஞ்சமெல்லாம் எந்த பிரகிருதி தேவியை ஆதாரமாக கொண்டிருக்கிறதோ அந்த பிரக்ருதி தேவியின் கலைகளினால் தோன்றிய கலா தேவிகளையும் அவர்கள் யார்யாருக்கு பத்னிகள் என்பது பற்றியும் பார்ப்போம்.


    ஸ்வாஹா தேவி என்பவள் அக்னியின் பத்னி. இந்த தேவி இல்லாவிடில் ஹோமம் செய்யும் ஹவிஸை தேவர்கள் பெறுவதற்கு வலிமை இராது.




    யக்ஞ பத்னிகள்---தக்ஷிணா தேவி மற்றும் தீக்ஷா தேவி ஆவார்கள். இவர்கள் பூஜிக்க படா விட்டால் உலகில் எல்லா செயல்களும் வீணாகும்.




    ஸ்வதா தேவி:- தர்பண காலத்தில் உச்சரிக்கும் ஸ்வதா தேவி என்பவள் பித்ருக்களின் பத்னி. இவளை பூஜிக்காவிடில் பித்ருக்களின் பூஜை வீணாகும்.




    ஸ்வஸ்தி தேவி;- வாயுவின் பத்னி. தானம் வாங்கும் போதும் கொடுக்கும் போதும் இந்த தேவி போற்றி துதிக்க படுகிறாள்.




    கணேசரின் பத்னி புஷ்டி தேவி இவள் இல்லாவிட்டால் எல்லோரும் பலஹீனமடைந்து நலிந்து விடுவார்கள்.


    துஷ்டி தேவி ஆதி சேஷனின் பத்னி-- இவள் இல்லாவிடில் யாரும் ஆனந்த மடையார்.
    ஸம்பத்து தேவி ஈசான பத்னி;- இவள் இல்லாவிடில் யாரும் வறுமை அடைவார்.
    திருதி தேவி கபிலரின் பத்னி:- இவள் இல்லாவிட்டால் தைரியம் இருக்காது.


    ஸதி தேவி:- ஸத்திய பத்னியாக திகழ்கிறாள். இவள் இல்லாவிட்டால் உறவினர்களும் இருக்க மாட்டார்கள்.




    தயா தேவி, பதிவ்ரதா தேவி என்பவர்கள் மோக பத்னிகள்---இவர்கள் இல்லாவிடில் யாரும் ஒரு பயனும் அடைய முடியாது.




    ப்ரதிஷ்டை என்பவள் புண்ணிய பத்னி;-இவளை வழி படாத மனிதர்கள் நடை பிணங்களுக்கு ஒப்பாவார்கள்.
    சம்சித் தேவி, கீர்த்தி தேவி என்பவர்கள் ஸுகர்மத்திற்கு பத்னிகள். இவர்களை போற்றி துதிக்கா விட்டால் உலகமெங்கும் புகழ் நசித்து விடும்.




    கிரியை என்னும் தேவி உத்தியோக பத்னியாக இருக்கிறாள். இவள் இல்லாவிட்டால் உலகம் சோம்பலுற்று விடும்.
Working...
X