Announcement

Collapse
No announcement yet.

seemantham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seemantham.

    சீமந்தம்:-
    ஸீமந்தம் என்பது ஒரு நிகழ்ச்சியின் பெயர். பெண்ணின் தலையில் உச்சி பகுதியில் இயற்கையாகவே இடைவெளி உண்டு. இதற்கு வகிடு என்று பெயர். இந்த தலை உச்சி பகுதியே ஸீமந்தம் எனபடுகிறது. இந்த இடத்திலுள்ள தலை முடியை ஒதுக்கி இந்த இடத்தில் வகிட்டை முள்ளம்பன்றியின் வெண்மையான முள்ளால் பெண்ணுக்கு தலை உச்சி பகுதியில் உள்ள வகிட்டு பகுதியை கோடு போட்டு நேர் செய்வதே ஆகும்.


    உச்சம் தலையில் ஸஹஸ்ராரம் என்னும் பகுதியில் எல்லோருக்குமே இயற்கையாக ஸூக்ஷ்மமாக ஒரு ஓட்டை அமைந்திருப்பதாகவும் , குழந்தை யின் சுவாசம் தாயாரின் தலை வகிட்டின் வழியாக வெளியேறுவதாகவும் நமது சாத்திரங்கள் பகர்கின்றன.


    ஆகவே ஸீமந்தம் செய்து வைப்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தை மூச்சு சுலபமாக சஞ்சரித்து மூச்சு விட இடம் கிடைக்கும். உச்சந்தலை ஸூக்ஷம துவாரம் திறந்தே இருப்பதால் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு சீமந்தம் செய்ய வேண்டாம்.


    கர்பிணி பெண்ணுக்கு அவள் கர்ப்பம் தரித்ததிலிருந்து 4 அல்லது 6 அல்லது 8 ஆவது மாதங்களில் வளர் பிறையில் அவளது கணவன் செய்து வைக்க வேண்டும். எட்டாவது மாதத்திலும் சீமந்தம் செய்ய முடியா விட்டால் குழந்தை பிறக்கும் வரையிலும் சீமந்தம் செய்யலாம்.


    பகவான் ஸ்ரீ க்ருஷ்ணருக்கு கர்க்காசாரியார் மஹரிஷி நாமகரணம் செய்து பெயர் சூட்டினார். இவர் சொல்கிறார். சீமந்தம் செய்யுமுன் குழந்தை பிறந்து விட்டால் , பிறந்த குழந்தையை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு
    சீமந்தம் மந்திர ஜபம் ஹோமத்துடன் வழக்கம் போல் செய்து வைக்க வேண்டும் எங்கிறார். ( வர்ணாஶ்ரமம்-255.)


    கருவிலுள்ள குழந்தைக்கு செய்து வைக்க வேண்டிய ஸம்ஸ்காரம் சீமந்தம். குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்டாயம் சீமந்தம் செய்து வைக்க வேண்டும். குழந்தை பிறக்குமுன் எங்கிறது சாஸ்திரம்.


    வேறு தேசத்திலிருந்து கணவனால் வர முடியாவிட்டால் கணவனின் தந்தை, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா , கணவனின் தம்பி, அல்லது குல குரு இவர்களில் யாரோ ஒருவர் அவசியம் சீமந்தம் செய்து வைக்க வேண்டும் .
Working...
X