Announcement

Collapse
No announcement yet.

nirjala aekaadasi.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • nirjala aekaadasi.

    கங்கோத்பத்தி--பாப ஹர தசமி. 12-06-2019; நிர்ஜல ஏகாதசி-13-06-2019; கவாயமான துவாதசி-14-06-2019.
    ஸ்ரீ மஹா பாரதம் தான தர்ம ப்ரஹரனம் சொல்கிறது. அஹோராத்ரேண துவாதஸ்யாம் ஜ்யேஷ்டே மாஸி த்ரிவிக்ரமம்
    கவாமயன மாப்னோதி அப்ஸரோபிஸ்ஶ மோததே. ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ துவாதசியன்று த்ரிவிக்ரம மூர்த்தியான மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் கவாமயனம் எனும் யாகம் செய்த பலன் கிடைக்கும், எல்லா சுகங்களும் கிடைக்கும்.
    வாசனையுள்ள பூக்களாலும், துளசியாலும் காலையில் மஹா விஷ்ணு வை பூஜித்து மாம்பழம் நிவேதனம் செய்து அன்ன தானம் செய்து பிறகு சாப்பிட வேண்டும்.


    நிர்ஜலா ஏகாதசி 13-06-2019. ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ ஏகாதசி.பீமன் வேத வியாஸரிடம் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க விருப்பம் உள்ளது. அதற்கு வழி கூறுங்கள் என வேண்ட ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று ஜலம் கூட அருந்தாமல் உபவாசம் இருந்தால் ஒரு வருடம் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைத்து விடும் என்றார்.
    அதன் படி பீமனும் சுத்த உபவாசம் இருந்து துவாதசி அன்று சாப்பிட்டார். அனைத்து பாவங்களும் துன்பங்களும் இதனால் விலகும். கலி யுக தோஷத்தால் ஏற்படும் பாவ, துன்பங்கள் போக்கடிக்கும். முயர்ச்சித்து வெற்றி பெறுங்கள். அதனால் இதற்கு பீம ஏகாதசி என்ற பெயரும் உண்டு.


    12-06-2019 பாப ஹர தசமி:- ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ தசமி--இது நிர்ஜல ஏகாதசிக்கு முதல் நாள் வரும்.
    பகீரத ப்ரயத்தினத்தினால் கங்கை சிவனின் தலைமுடியிலிருந்து இறங்கி பூமிக்கு அவதரித்த நாள். தீபாவளி மாதிரி இன்றும் கங்கை எல்லா ஜலத்திலும் இருக்கிறாள். கங்கா ஸ்நான பலன் உண்டு என்கிறது ஸ்காந்த புராணம். காசியில் கங்கையில் ஸ் நானம் செய்து விட்டு தசாஅசுவமேத கட்டத்தில் கங்கா ஆரத்தியில் பங்கு கொள்கிறார்கள்.
    ஜ்யேஷ்டே மாஸி ஸிதே பக்ஷே தசம்யாம், பெளம ஹஸ்தயோ:வ்யதீபாதே கரா நந்தே கன்யா சந்த்ரே வ்ருஷே ரவெள இன்று பத்து விதமான காலங்களும் ஒன்று சேர்கின்றன. ஜ்யேஷ்ட மாதம்,சுக்ல பக்ஷம்; தசமி திதி, புதன்கிழமை,
    ஹஸ்த நக்ஷத்திரம்,வ்யதீபாத யோகம், கரம் என்னும் கரணம், கன்யா ராசியில் சந்திரன் இருத்தல், சூரியன் ரிஷப ராசியில் இருத்தல், புதன் கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் ஒன்று சேருவதால் அமையும் ஆனந்த யோகம்.ஆகிய பத்தும் ஒன்று சேருவதால் இந்த நாள் பெரிய மகத்வம் பெறுகிறது.


    இன்று முறையாக ஸ்நானம் செய்து அர்க்கியம் கொடுப்பவனுக்கு பத்து விதமான பாபங்களிலிருந்து விடுபட முடியும்.
    பத்து விதமான பாபங்கள்:- உடலால், உள்ளத்தால், வாக்கால் செய்ய படும் பாபங்கள். 1. தனகென்று கொடுக்க படாத பொருட்களை தான் உபயோகித்து கொள்வது; 2.உயிர்களை ஹிம்சிப்பது;3. மற்றவர் மனைவியிடத்தில் தவறான எண்ணத்துடன் பழகுவது. இவைகள் உடலால் செய்ய படும் பாபங்கள்;


    4. கடுஞ்சொல் பேசுதல்; 5. பொய் பேசுதல்; 6. ஒருவரை பற்றி மற்றவரிடம் கோள் சொல்லுதல்; 7. சம்பந்தமில்லாத் தேவையற்ற பேச்சுக்களை பேசுதல்; இவை வாக்கால் செய்ய படும் பாபங்கள்;
    8. காரணமில்லாமல் ஒருவரை வெறுத்து ஒதுக்குதல்.;9.மற்றவரின் பொருட்களை அடைய வேண்டும் என்று எண்ணுதல்; 10. மற்றவருக்கு கெடுதல் நினைத்தல். இவை மனதால் செய்ய படும் பாபங்கள்.


    இந்த பத்து பாபங்களே நமது துன்பத்திற்கு காரணம்;இந்த பாபங்களை அவ்வப்போது போக்கடித்துக்கொள்ள பாபஹர தசமியான இன்று ஸங்கல்ப ஸ் நானம் செய்து அர்க்கியம் கொடுக்க வேண்டும்.
    இன்று ஆண்களும் பெண்களும் காலையில் ஸ் நானம் செய்யுமுன் இந்த சங்கல்பம் செய்து கொள்ளவும். மம ஏதஜ் ஜன்மனி ஜன்மாந்திர சமுத்பூத த்ரிவித காயிக,சதுர்வித வாசிக, த்ரிவித மானஸேதி ஸ்காந்தோக்த , தசவித பாப நிராஸ, த்ரயஸ்த்ரிசத் சத பித்ருத்தார, ப்ருஹ்ம லோகா அவாப்த்யாதி பல ப்ராப்த்தியர்த்தம்,ஜ்யேஷ்ட மாஸ,


    சுக்ல பக்ஷ, தசமி திதி, ஸெளம்ய வாசர,ஹஸ்த நக்ஷத்ர, கர கரண,வ்யதீபாதா ஆனந்த யோக,கன்யாஸ்த சந்திர, வ்ருஷபஸ்த ஸூர்யேதி தச யோக பர்வணி பாப ஹர தசமி புண்ய காலே ஸ்நானம் அஹம் கரிஷ்யே. இம்மாதிரி சொல்லி பத்து வித மான பாபங்கள் விலகுவதாக மனதில் எண்ணிக்கொண்டு பத்து தடவை ஸ் நானம் செய்யவும்.
    கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜநானம் சதைரபி முச் யதே ஸர்வ பாபேப்ப்யோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி. நமோ பகவத்யை தச பாப ஹராயை கங்காயை நாராயண்யை ரேவத்யை சிவாயை, தக்ஷாயை அம்ருதாயை விசிவரூபிண்யை நந்தின்யே தே நமோ நம; என்று சொல்லிக்கொன்டு ஸ்நானம் செய்யவும்.
    பிறகு ஆடைகள் கட்டீகொன்டு, நெற்றீக்கு இட்டுகொண்டு கிழக்கு நோக்கி நின்று கொண்டு கை நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்கியம் விடவும்.


    நம: கமல நாபாய நமஸ்தே ஜல சாயினே நமஸ்தேஸ்து ரிஷிகேச க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே ஜல சாயினே நம: இதமர்க்கியம்.
    ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ தேஜோராஜே ஜகத்பதே அநுகம்பய மாம் பக்தியா க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே.
    ஸூர்யாய நம: இதமர்க்கியம்.


    மஹா பல ஜடோத்பூதே க்ருஷ்ணே உபயதோமுகி வேதேன ப்ரார்திதே கங்கே க்ருஹானார்க்கியம் நமோஸ்துதே.க்ருஷ்ணாவேண்யை நம; இதமர்க்கியம். பிறகு மயா க்ருத தச ஹரா ஸ்நானாங்கம் யதா சக்தி தானம் அஹம் கரிஷ்யே என்று சொல்லி பத்து ஏழைகளுக்கு பத்து விதமான பழங்கல்; அரிசி 16 கைப்பிடிக்கு குறையாமல் தானம் செய்ய வேண்டும்.


    மாலையில் விஷ்ணு கோவில் சென்று விஷ்ணு சன்னதியில் பத்து தீபங்கள் ஏற்றவும். பத்து விதமான புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும். பத்து விதமான உணவு பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்யவும்.
    ஹேமாத்ரி புத்தகம் இந்த மாதிரியாக தச ஹரா விருதத்தை செய்பவர்கள் பத்து விதமான பாபங்களிலிருந்து விடுபடுவார்கள். அனைத்து சுகங்களையும் பெறுவார்கள் என்கிறது.


    பாரத தேசம் வருங்கால் ஜானு என்கின்ற ரிஷியின் ஆஶ்ரமத்தை கங்கை ப்ரவாஹம் அழித்தது. கோபம் கொன்ட ஜானு ரிஷி கங்கை ப்ரவாஹத்தை குடித்து விட்டார். பகீரதனும் மற்றவர்களும் ஜானு ரிஷியிடம் மன்றாடிகேட்டு பின் ஜானு ரிஷி தன் காதில் மூலம் கங்கையை வெளியே விட்டார். வைசாக சுக்ல பக்ஷ ஸப்தமி அன்று.


    இதனால் ஜானுவின் புதல்வி ஜான்னவதி என்ற பெயர் கங்கைக்கு ஏற்பட்டது. வைசாக சுக்ல பக்ஷ ஸப்தமி 30-04-2020 அன்று வரும், இதற்கு கங்கா ஜயந்தி, கங்கோத்பத்தி, கங்கா ஸப்தமி என்று பெயர். இன்றும் கங்கையில் நீராடுவர். கங்கா தசமி வேறு. கங்கா ஸப்தமி வேறு. இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்.
Working...
X