Announcement

Collapse
No announcement yet.

AGASTHIAR TALKS.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • AGASTHIAR TALKS.

    மனம்தடுமாறி தீய வழியில் செல்லாமல்இருக்க ஜீவ நாடியில் அகத்தியபெருமான் கூறும் வழி !


    மனம்தடுமாறாமல் இருக்க,மனம்சபலத்தில் ஆழாமல் இருக்க,மனம்சாத்வீக எண்ணங்களோடு இருக்கஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம்.ஆஞ்சநேயர்காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.பஞ்சாக்ஷரத்தைஜபிக்கலாம்.அஷ்டாக்ஷரத்தைஜபிக்கலாம்.இவையனைத்தும்சிறப்புதான்.எதுவும்ஒன்றுக்கொன்று குறைவில்லை.இஃதோடுஇன்னமும் சிறப்பாக மனம்அடங்குவதற்கு உச்சிஷ்டமகாகணபதியின் மூல மந்திரத்தைஅன்றாடம் வடகிழக்கு திசைநோக்கி அமர்ந்து பிரம்மமுகூர்த்தத்தில் தொடர்ந்துஉருவேற்றிக்கொண்டே வந்தால்,மனம்சலனங்களுக்குள் ஆட்படாமல்இருப்பதற்கு,நல்லதொருநிலையை நோக்கி செல்வதற்குஒரு வாய்ப்பாக இருக்கும்.இதுபக்தி வழி.


    பக்தியைஏற்றுக்கொள்ளாத மனிதருக்குஅறிவுபூர்வமாகக் கூறுவதென்றால்ஒரு செயலை செய்யும்பொழுதோஅல்லது ஒரு எண்ணத்தை எண்ணும்பொழுதோ,அவன்எப்படி சிந்திக்கவேண்டும்?என்றால்,உதாரணமாகஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான்.‘ இதுவெறும் எண்ணம்தானே ?செய்தால்தானேபாவம்.செய்தால்தானேதவறு.அதனால்பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது.மனதில்தானேஎண்ணுகிறோம் ‘ என்று அவன்எண்ணுவதாகக் கொள்வோம்.அதேஎண்ணத்தை பிறர் எண்ணினால்அதை நியாயம் என்று இவன்ஏற்றுக்கொள்வானானால்,இவன்அதை தாராளமாக எண்ணலாம்.


    இன்னொன்று.சிலர்,சிலசெயல்களை செய்துவிட்டு ‘என்ன செய்வது ?எனக்குபிடிக்கவில்லை.ஆனாலும்செய்யவேண்டிய கட்டாயத்திற்குஆட்பட்டுவிட்டேன் ‘ என்றுதனக்குத்தானே சமாதானம்கூறுவார்கள் அல்லது ‘ என்விதி,என்கிரக நிலை,என்திசாபுத்தி,அதனால்இப்படி செய்துவிட்டேன் ‘என்று சாமர்த்தியமாகக்கூடபேசலாம்.நாங்கள்ஒத்துக்கொள்கிறோம்.விதிதான்,அவனுடையசூழ்நிலைதான் வாய்ப்பைத்தந்தது என்று.ஆனால்அதே செயலை மற்றவர்கள் செய்தால்அவன் ஏற்றுக்கொள்வான் என்றால்தாராளமாக அவன் அதனை செய்யட்டும்.இப்படிஅறிவுபூர்வமாக ஒன்றை சிந்தித்துப்பார்த்து,‘ இந்தஎண்ணம் நன்மையா ?தீமையா?இந்தசெயலை நாம் செய்கிறோமே,யாரும்பார்க்கவில்லை என்று ?.இதேசெயலை நம் வாரிசுகள் செய்தால்,நம்சகோதர,சகோதரிகள்செய்தால் இதை நியாயம் என்றுஒத்துக்கொள்வோமா ?ஆதரிப்போமா?என்றுசிந்தித்துப் பார்க்கவேண்டும்.இதுஒரு நிலை.


    அடுத்த்தாகஞான நிலை என்று பார்த்தால்,இதுபோன்றசெயலால் இறையருள் கிட்டப்போகிறதா?அல்லதுஇறை தரிசனம் கிடைக்கப்போகிறதா?உலகியல்ரீதியாக இதனால் ஆதாயம் உண்டா?அல்லதுகுறைந்தபட்சம் தன் ஆன்மாவிற்குஆதாயம் உண்டா ?இதனால்தீய பின்விளைவுகள் என்னென்னஏற்படும் ?இந்தவிளைவுகள் ஒரு மனிதனை எந்தவகையில் பாதிக்கும் ?இந்தசெயலை செய்தால் என்னென்னசாதகங்கள் ?செய்யாமலிருந்தால்என்னென்ன நன்மைகள் ?செய்வதால்ஒரு கணம் அல்லது ஒரு நீர்த்துளிஅளவு காலம் ஒரு மனிதனுக்குஇன்பத்தை தரலாம்.ஆனால்அதனால் ஆண்டாண்டிற்கு,ஆன்மமுன்னேற்றத்திற்கு எஃதாவதுலாபம் இருக்கிறதா ?

    என்றுபார்க்கவேண்டும்.எப்படிபள்ளத்தைக் கண்டால் நீர்ஓடுகிறதோ,அப்படிதான்மனம் எப்பொழுதும் ஏற்கனவேபல பிறவிகள் எடுத்து,எடுத்துநுகர்ந்த ஒன்றை நோக்கிதான்செல்லும்.மனம்இயல்பாகவே நல்லவிதமாகஇருந்துவிட்டால் எல்லோருமேயோகியர்,ஞானியர்ஆகிவிடுவார்கள்.குழந்தையாய்இருக்கும்பொழுதே எழுதவும்,படிக்கவும்கூடிய அறிவோடு பிறந்துவிட்டால்எதற்கு வித்தைக்கூடம் ?எதற்குகல்விக்கூடம் ?முயற்சிஎடுத்துதான் குழந்தை தன்அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.அங்கேஅறிவு இருக்கிறது.அந்தஅறிவிலே எதை,எதையெல்லாம்ஏற்றி வைக்கவேண்டும் என்றநியதி இருக்கிறது.அந்தநியதியை மனிதன் நல்விதமாகஏற்றி வைக்கிறான்.அதைவைத்துக்கொண்டு பின்னால்அது செயல்படுகிறது.அப்படிஏற்றும்பொழுது எதையெதைஏற்றவேண்டும் ?என்றுபார்க்கவேண்டும்.இரும்பினால்செய்யப்பட்ட வாகனத்திலேஎரிபொருள் நிரப்புகின்றமனிதன்,எரிபொருளுக்குபதிலாக நீரை ஊற்றுவானா ?நீரைஊற்றினால் என்னவாகும் ?என்றுதெரியும் அவனுக்கு.


    ஆகஅஃறிணை பொருளான வாகனத்திலேயேஅதற்கு என்ன தேவையோ அதைமட்டும்தான் மனிதன் தருகிறான்.அதைவிடபலமடங்கு உயர்திணையாக இருக்கின்றமனிதனுக்கு எது தேவையோ அதைத்தானேஅவன் தனக்கு செய்துகொள்ளவேண்டும்?அந்தகணம் இன்பமாக இருக்கிறதுஎன்பதற்காக தேவையற்றதை செய்துநிரந்தர துன்பத்தை எதற்காகவரவழைத்துக் கொள்ளவேண்டும்?அல்லதுசுருக்கமாக ‘ இந்த செயல்எனக்கு பிடித்திருக்கிறது.நான்இப்படித்தான் செய்வேன்.இதனால்எனக்கு மனதிலே மகிழ்ச்சிஏற்படுகிறது

    ‘ என்றால் தாராளமாகசெய்யட்டும்
    .ஆனால்ஒரு நிபந்தனை.அதேசெயலை அவன் பிள்ளை செய்தால்அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அவன்மனைவி செய்தால் அவன்ஏற்றுக்கொள்ளவேண்டும்.அவன்சகோதர,சகோதரிகள்,உற்றார்கள்செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இந்தமனோ நிலைக்கு வந்துவிட்டால்யார் வேண்டுமானாலும்,எதைவேண்டுமானாலும் செய்யட்டும்.தான்செய்கின்ற ஒரு செயலை பிறர்செய்தால் அதை அருவருப்பாகவோ,கேவலமாகவோ,ஏளனமாகவோபார்க்கக்கூடிய மனிதன்,அதேசெயலை தான் செய்யும்பொழுதுமட்டும் நியாயப்படுத்துவதுஎந்த வகையில் நியாயம் ?என்பதைஞான ரீதியாக சிந்தித்துப்பார்த்தால் தவறுகளும்,சலனங்களும்,சபலங்களும்ஒரு மனிதனை விட்டு மெல்ல,மெல்லவிலகத் துவங்கும்.

    ஸ்ரீராம நாமம்:
    ஸ்ரீராமஜெயம்
    ஜெய்ஸ்ரீராம்

    ஆஞ்சநேயர்காயத்ரி மந்திரம்:
    ஓம்ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயுபுத்ராயதீமஹி
    தந்நோஹனுமன் ப்ரசோதயாத்

    பஞ்சாக்ஷரம்:
    ஒம்நமசிவாய

    அஷ்டாக்ஷரம்:
    ஓம்நமோ நாராயணாய

    உச்சிஷ்டகணபதி மூல மந்திரம் :

    ஓம்நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
    ஹஸ்திமுகாய,லம்போதராய
    உச்சிஷ்டமகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
    கம்கேகே ஸ்வாஹா
Working...
X