இதில் ஷட் என்பது 6 என்றும் திலம் என்பது எள் என்றும் பொருள்படும். இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது.


அன்னதானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும் கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.


இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஆறு விதமாகப் பயன்படுத்துவார்கள்.


1. எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.


2. எள் தானம் செய்வது.


3. எள்ளால் ஹோமம் செய்வது.


4. எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.


5. எள் அன்னம் உண்பது.


6. எள் தானம் பெறுவது.


இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது. இதனால் அநேகப் பாவங்கள் விலகுகின்றன என்றும் எள்தானம் செய்த அளவிற்கேற்ப அத்தனை ஆயிரம் வருடகாலம் சுவர்க்கத்தில் வசிக்கும் பேறு பெறுவர். முன்னொரு காலத்தில் பூலோகத்தில் பல தர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள்.


சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. ஒருவன் அன்னதானம் செய்யாமல் அவனால் தேவலோகத்தில் ஜீவிப்பது கூட கடினம். எனவே அவளது இக்குறையைத் தீர்க்க எண்ணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பிச்சைக்காரன் வடிவில் சென்று அவளிடம் அன்னபிக்ஷை வேண்டினார். அதைக் கேட்டவள் ஆத்திரத்தில் மணலால் ஆனதொரு பிண்டத்தை அவருக்கு தானமளித்தாள். அதனை எடுத்துக் கொண்டு அவரும் வந்துவிட்டார்.


அதனைக்கொண்டு சுவர்க்கத்தில் ஒரு அழகான வீட்டை ஸ்ரீ கிருஷ்ணர் அமைத்தார். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவள் வாழ்வு முடிந்து சுவர்க்கம் வந்தபோது மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் வீட்டினுள் தனம், தானியம், இருக்கைகள் ஏதுமின்றி அவள் அளித்த மண்ணைப் போலவே இருந்தது. அதனைக் கண்டவள் மிகவும் பயத்துடனும், கோபத்துடனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து பூவுலகில் இத்தனை விரதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் எனது வீட்டில் ஏதும் இல்லாததற்கான காரணம் என்ன இறைவா? என்றாள்.


அவளிடம் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கான காரணத்தைக் கூறிய போது, அதிலிருந்து மீள வழி என்ன என்று கேட்டாள். அப்போது அவளிடம், இப்போது உன் இல்லத்திற்கு உன்னைக் காண தேவஸ்த்ரீகள் வருவர். அவர்கள் வரும் வேளையில் கதவை அடைத்து, அவர்களிடம் இந்த ஷட்திலா ஏகாதசி மகாத்மியத்தைக் கேள். அவர்கள் கூறும் வரை கதவைத் திறக்காதே என்றார். அவளும் அப்படியே செய்தாள். அதனைக் கேட்ட அனைத்துப் பெண்களும் சென்றுவிட்டனர். சற்று நேரத்தில் அவளைக் காணும் ஆவலில் திரும்பி வந்த தேவஸ்த்ரீகள், அவளிடம் ஷட்திலா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கூறினர். பிறகு அதனைக் கேட்டு, கதவைத் திறந்தாள். அந்த வீட்டில் இருப்பது ஒரு கந்தர்வியோ, நாகரோ, இல்லாமல் ஒரு மானுடப்பெண் நிற்பது கண்டு வியந்து சென்றனர்.


அதன் பின்னர், அந்த பிராமணஸ்திரீ ஷட்திலா ஏகாதசி விரதத்தை நியமம் தவறாது கடைப்பிடித்தாள். அதன் பலனாக அவளது உடல் தேவஸ்த்ரீகளைப் போன்று ஜொலித்தது. அவளது இல்லம் முழுவதும் தனம், தானியங்களால் நிரம்பி வழிந்தது. அவளது வீடு ஸ்வர்ணமயமான மாளிகையாக மாறி பேரொளியோடு மின்னியது. எனவே, பகட்டுக்காக இல்லாமல் பக்தியுடன் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் இறுதியில் சுவர்க்கமும், எல்லாப் பிறவிகளிலும் ஆரோக்கியமும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.


எவரொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் அவருடைய பாவங்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் இந்த விரதத்தினால் அவரை எந்தவொரு தீய சக்தியும், தீய சகுனங்களும் பின்தொடராது என்றும் அவரது இல்லத்தில் வறுமை என்ற பேச்சுக்கே இடமின்றி தனம், தானியங்களால் நிரம்பி வழியும். அது மட்டுமின்றி, இந்த விரதத்தினை தான, தர்மங்களோடு கடைப்பிடிப்பவருக்கு என்றும் உணவுப் பஞ்சமே வராது என்றும் அவர்கள் பல பிறவிகளிலும் நித்ய ஆரோக்கியத்துடன் விளங்குவதோடு இறுதியில் அவர்கள் முக்தி அடைவர் என்று புலஸ்திய முனிவர் தாலப்ய முனிவருக்குக் கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் குறிப்பிடுகிறது.
16-2-2019 ஏகாதசிக்கு ஷட் திலா ஏகாதசி என்று பெயர்.. கருப்பு எள்ளை இன்று ஆறு விதமாக உபயோக படுத்த வேண்டும்.


கருப்பு எள்ளை அறைத்து உடலில் பூசிக்கொண்டு கறுப்பு எள் கலந்த நீரில் ஸ்நானம் செய்தல்


கறுப்பு எள்ளால் ஹோமம் செய்தல். கறுப்பு எள் கலந்த நீரால் தர்ப்பணம் அல்லது தானம் செய்தல்.


கறுப்பு எள் அல்லது நல்ல எண்ணைய் தானம் செய்தல்.


துவாதசி அன்று எள்ளு சாதம் சாப்பிட வேண்டும்.


ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் மேற்கூறிய வாறு செய்து விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட்டு வேண்டுதல் செய்தால் பாபங்கள் பல நீங்கும் .


ஸ்ம்ருதி கெளஸ்துபம்- 480 படி மறு நாள்17-02-2019 துவாதசி அன்று நல்ல எண்ணைய் விளக்கு விஷ்ணு சன்னதியில் ஏற்றி எள்ளு சாதம் நிவேதனம் செய்து


விநியோகம் செய்வதால் பாபங்கள் போம்.எல்லா சுகங்களும் கிடைக்க பெறும்.


மாக மாத சுக்ல பக்ஷ துவாதசி திதியன்று தான் விஷ்ணு பகவான் கடுந்தவம் புரிந்து தனது உடலிலிருந்து கறுப்பு எள்ளை வெளிபடுத்தினார்.


மாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு ஷட் தில ஏகாதசி என்று பெயர். திலம் என்றால் கருப்பு எள். தில ஸ்நாயீ திலோத்வர்த்தீ தில ஹோமீ திலோதகீ தில புக் தில தாதா ச ஷட் திலா: பாபா நாசன:
ஸ்ம்ருதி கெளஸ்துபம் 480:- மாகே து சுக்ல துவாதசியாம் யதோ ஹி பகவான் புரா திலான் உத்பாத யாமாஸ தப: க்ருத்வா ஸுதா ருணம் தில தைலேன
தீபாஸ் ச தேயா: தேவ க்ருஹேஷு ச நிவேதயேத் திலா நேவ.