Announcement

Collapse
No announcement yet.

AMAVASYA THARPANA M-TAMIL MEANING.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • AMAVASYA THARPANA M-TAMIL MEANING.

    அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.ஸ்தல சுத்தி: - தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு தக்க இடம் என எங்களுக்கு தந்தனர்.அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன; என்று சொல்லி கருப்பு எள்ளை இந்த இடத்தில் கையை திருப்பி இறைக்கவும்.இந்த இடத்தை அண்டி வசிக்கின்ற அஸுரர், ராக்ஷசர், பிஶாசர், முதலியவர் ---பித்ரு கர்மாவுக்கு விக்னம் செய்பவர்கள் --இந்த இடத்தை விட்டு அவர் மனம் எங்கு செல்கிறதோ அங்கு செல்லட்டும்.உபவீதி--பூணல் வலம். தீர்த்தத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டிய மந்திரம்.அ பவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசி: பூர் புவஸ்ஸுவோ பூர் புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹநான் மஹா விஷ்ணு ஸ்மரனையுடன் தெளிக்கும் இந்த தண்ணீர் இந்த இடத்தை பவித்ர மாக்கட்டும். நம் மனது ஒருமுகப்பட்டு பித்ருக்களின் உருவ ஞாபகம் மனதில் தோன்றும். வாய் மந்திரத்தை சொல்லும்.ப்ராசீனாவீதி- பூணல் இடம்;ஸம்ப்ரதாயப்படி தர்பைகளை தெற்கு நுனியாக போட்டு கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிற மற்ற விரல்களால் எள்ளை எடுத்து ஆவாஹனம் செய்ய வேண்டும்.ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்சஓ பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.அஸ்மின் கூர்ச்சே ---------கோத்ரான்--------ஶர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ----------கோத்ரா:----------தா: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி.என்னுடைய இந்த கூர்ச்சத்தில், எனது இந்த கோத்ரத்தை உடைய இந்த பெயர் உடைய வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்களான எனது தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா , எனது இந்த கோத்திரத்தை உடைய இந்த பெயர்கள் உடைய எனது தாய், பாட்டி, கொள்ளு பாட்டி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டுகிறேன். ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.ஒரே கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்திரம் -------- பெயர்------- வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீ: மாதா மஹ, மாதுஹ் பிதாமஹ, மாதுஹ்ப்ரபிதாமஹீஸ் ச ஆவாஹயாமி. என்று சொல்லி ஆவாஹணம் செய்யும் வழக்கமும் உண்டு. குடும்ப ஸம்ப்ரதாயப்படி செய்யவும். சிலர் மற்றொரு கூர்ச்சத்தில் இம்மாதிரி ஆவாஹனம் செய்யும் வழக்கமும் உண்டு.வட மொழியில் பிதா= தகப்பனார்; பிதா மஹர்-அப்பாவின் அப்பா; ப்ரபிதாமஹர்= அப்பாவின் தாத்தா; மாதா=அம்மா; பிதாமஹி=அப்பாவின் அம்மா; ப்ரபிதாமஹி= அப்பாவின் பாட்டி;மாதா=அம்மா; மாதாமஹர்= அம்மாவின் அப்பா; மாத்ரு பிதாமஹர்-= அம்மாவின் தாத்தா; மாத்ரு ப்ரபிதாமஹர்= அம்மாவின் கொள்ளு தாத்தா. ஸ பத்னீ;= மனைவியுடன்.; பத்னி=மனைவி; மாதாமஹி=அம்மாவின் அம்மா;மாத்ரு பிதாமஹி=அம்மாவின் பாட்டி; மாத்ரு ப்ரபிதாமஹி= அம்மாவின் கொள்ளு பாட்டிஆஸன மந்திரம்;-ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ரூர்ணா ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்அஸ்மின் ஸீதந்து மே பிதரஸ் ஸோம்யா: பிதா மஹா; ப்ரபிதா மஹா: ச அனுகைஸ்ஸஹ. என்று சொல்லி பித்ரு, பிதா மஹ, ப்ரபிதாமஹானாம் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹானாம், ஸ பத்னீக மாதா மஹ மாது; பிதாமஹ; மாதுஹு ப்ரபிதாமஹானாஞ்ச இதமாஸனம். மூன்று தர்பங்களை கூர்ச்சத்தின் கீழ் வைக்க வேண்டும்.ஓ தர்பையே நீ ஒரு முறை என்னால் அறுக்கப்பட்டாய். உன்னை பரப்புகிறேன். எங்கள் பித்ருகளுக்கு அதி ம்ருதுவான ஆஸனமாக இரு. இதில் அனுக்கிரஹ மூர்த்திகளான என் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா தங்களை சார்ந்தவர்களுடன் அமரட்டும்.வர்க்க த்வய பித்ருப்யோ நம: ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி கறுப்பு எள்ளை கை மறித்து கூர்ச்சத்தின் மேல் போடவும். வர்க்கத்வயம்= இரண்டு வர்க்கங்க்கள்=அப்பா வர்க்கம்; அம்மா வர்க்கம்.ஏகம்-=ஒன்று; த்வே=இரண்டு; த்ரீனீ=மூன்று; சத்வாரி=நான்கு.இரண்டு கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் செய்யும் குடும்ப வழக்க முடையவர்கள் இரண்டாவது கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்ரம், அம்மாவின் பெற்றோர் பெயர் சொல்லி ஆவாஹணம்., ஆஸனம், ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம் என்று மறுமுறை சொல்லி போடவும்.இடது காலை முட்டி போட்டுக்கொண்டு தெற்கு முகமாக ப்ராசீனாவீதியாய் தர்ப்பணம் செய்ய வேண்டும்.யக்யம் முதலான கர்மாக்களை செய்தவர் உயர்ந்த பித்ருக்கள். ஒளபாஸனம் முதலிய ஸ்மார்த்த கர்மா செய்தவர் மத்யம பித்ருக்கள். கர்பாதானம் முதலான ஸம்ஸ்காரம் இல்லாதவர் அதம பித்ருக்கள்.தற்காலத்தில் யாகம், யக்யம் செய்ய முடியாது. இதற்கு பதில் சுனந்து முனிவர் பவிஷ்யோத்திர புராணத்தில் திதி பூஜைகள் இம்மாதிரி செய்ய வேண்டும் என்று எழுதியதை பார்த்து திதி பூஜைகள் என்று வெளியிட்டு வருகிறேன். இதையாவது செய்து எல்லோரும் உயர்ந்த பித்ருக்கள் ஆக வேண்டும் என்ற அவாவில் முனிவர்கள் புராணங்களில் இம்மாதிரி எழுதி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எங்காத்து வழக்கம் இல்லை என்று சொல்லி கொண்டு தொலை காட்சியில் சீரியல் பார்த்து கொண்டு பொழுதை கழிக்கிறார்கள். இது மட்டும் அவாத்து பழக்கம்.1:1 உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூரவ்ருகா ரிதக்ஞஆஸ் தேனோஅவந்து பிதரோஹவேஷு.பித்ருக்களில் திவ்ய பித்ருக்கள்; அதிவ்ய பித்ருக்கள் என இரு வகை படுவர். ஒரு வகையினர் அழைத்தால் மட்டும் வருவர். மற்றொரு வகையினர் உங்கள் வீட்டில் எப்போதுமே இருப்பர். காலை ஸூர்ய உதயத்தின் போது உங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது வீட்டு வாசலில் சாணி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு வைத்தால் தான் உள்ளே வருகிறார்கள். குடுமி தலைமுடி தண்ணீரையும் , நீங்கள் வஸ்த்திரம் பிழியும் தண்ணீரையும் பருகுகிறார்கள். தற்காலத்டில் குடுமியும் இல்லை. வஸ்த்ரம் மந்திரம் இல்லாமல் வாஷிங் மெஷின் பிழிந்து கொடுக்கிறது.அஸ்து அஸ்து என்று சொல்லி கொண்டிருகிறார்கள் என்று முனிவர்கள் ஞான த்ருஷ்டியில் பார்த்து அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை செய்யாதே வேண்டாம் என்றும் நம் முன்னோர்கள் சொல்வது நம் காதில் விழ வில்லை. முற் பிறவிகளில் செய்த பாபங்கள் இது நம் காதில் விழாமல் தடுக்கிறது என்று ரிஷிகள் ல்கிறார்கள்.தற்போது உதீரதாம் என்ற மந்திர அர்த்தம் எழுதுகிறேன். தாழ்ந்தவர்களும், சிறந்தவர்களுமான நம் பித்ருக்கள் நாம் அளிக்கும் உணவை ஏற்று அருள் புரியட்டும். நாம் அழைத்து வந்த பித்ருக்கள் சிக்ஷிக்க தக்க குற்றம் செய்தாலும் ,நம்மை ஹிம்சிக்காமல் நாம் அளித்ததை ஏற்று நன்றி உள்ளவர்களாகி , நம்மை காப்பாற்றட்டும்.உத்தேசமாக 7 அல்லது 8 கருப்பு எள்ளுடன் (ஒவ்வொரு தடவையும்) 100 மில்லி தண்ணீருடன் கூர்ச்சத்தின் நுனியில் வலது கை மறித்து விட வேண்டும். தாழ்ந்தவர்கள் என்று எழுதியதற்கு விளக்கம் அக்காலத்தில் அவர்கள் எழுதி வைத்ததையே ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா 1956 ல் எழுதிய புத்தகத்தை பார்த்து இங்கு எழுதுகிறேன்.ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் தண்ணீர் விடுவது பித்ரு தீர்த்தம் எனப்பெயர். நான்கு விரல் நுனிகளால் விடுவது தேவ தீர்த்தம். சுண்டி விரலுக்கு கீழ் உள்ள உள்ளங்கையால் விடுவது ரிஷி தீர்த்தம் என்று பெயர்.உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வழியாக தீர்த்தம் வருவது ப்ருஹ்ம தீர்த்தம் என்று பெயர். ஆசமனம் செய்யும் போது தண்ணீர் அருந்துவது ப்ருஹ்ம தீர்த்தம்.--------கோத்ரான்---------ஶர்மண: இம்மாதிரி( : )உள்ளதை ஹ என்று உச்சரிக்க வேண்டும். வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.பித்ருக்களை ரக்*ஷிக்க ஸ்வதா தேவி உண்டாக்க பட்டாள் என தேவி பாகவதத்தில் உள்ளது.1-2. அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞ்இயானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம:----------கோத்ரான்------சர்மண: வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.அங்கீரஸ், அதர்வா, ப்ருகு என்று நமது பித்ருக்கள் அழைக்க படுகிறார்கள். அவர்கள் மிக சிறந்த குணமுள்ளவர். ஸந்ததிகளிடம் புதிது புதிதாக அன்புள்ளவர். யாகத்தினால்ஆராதிக்க தக்க அவர்களது மங்கள கரமான மனதில் நாம் இருக்க வேண்டும்.1:3. ஆயந்துந; பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவ யானை:அஸ்மின் யக்ஞ்யே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்.--------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் பித்ருன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.யாகம் செய்யாமல் பித்ரு லோகம் சென்ற அக்னிஷ்வாத்தர் என்பவரும் மனோ வேகம் உள்ளவருமான பித்ருக்கள் தேவ யான மார்கமாக இங்கு வரட்டும். இங்கு நாம் செய்யும் தர்ப்பண யக்ஞ்யத்தில் ஸ்வதா என்று அளிக்கும் உணவினால் சந்தோஷம் அடையட்டும். பர லோகத்தில் நமக்காக பரிந்து பேசட்டும். நம்மை காக்கட்டும்.2-1. ஊர்ஜம் வஹந்தீர் அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.----------கோத்ரான்--------ஶர்மண: ருத்ர ரூபான் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.ஓ தீர்த்தமே கர்மவசமாகி , ஒரு ஸமயம் -மனுஷ்ய, தேவ, ராக்*ஷஸ, (குணம்) மரம், செடி, கொடி, சண்டாளன் முதலிய பிறவியை எங்கள் பித்ருக்கள் அடைந்திருந்தால் அவர்களுக்கு உசிதமான அன்னம், அம்ருதம், நெய்,பால், ரக்தம், கள், முதலிய அவரவர்களுக்கு உசிதமான உணவாகி , பித்ரு அன்னமாக இருந்து என் பித்ருக்களை ஸந்தோஷ படுத்து.2-2. பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: பிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: -------கோத்ரான்-------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.ஸ்வதா என்று கூறி அளிக்கும் உணவை விரும்புவர்களான பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர் ஆகியவர்களுக்கு ஸ்வதா என்று தர்ப்பணம் செய்து வணங்குகிறேன். பித்ருக்கள் உண்டு களிக்கட்டும்.2-3. யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்கும் ஸ்வதயா மதந்தி.-------கோத்ரான் ---------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.எல்லாம் அறிந்த ஓ அக்னியே எந்த பித்ருக்கள் இந்த உலகத்தில் உள்ளனர், எவர் இங்கு இல்லையோ எவரை நாம் அறிவோமோ , எவரை நாம் அறிய மாட்டோமோ அவர் அனைவரையும் நீர் அறிவீர். ஆதலால் அவர்களுக்கு ஏற்றதாக இந்த உணவை அவர்களுக்கு அளியும். அதனால் அவர்கள் சந்தோஷ மடையட்டும்.3-1. மதுவாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ: -----------கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.பித்ரு தர்பணம் செய்கின்ற எனக்கு காற்று நன்மையை தரட்டும். நதிகளும், ஓஷதிகளும் மதுரமானதை அளிக்கட்டும்.3-2. மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா.---------கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.இரவு, காலை, பகல் ஆகிய காலமும் நமக்கு இன்பத்தை தரட்டும். பூமியின் தூளியும் இன்பத்தை தரட்டும். ஆகாயமும் கபடமில்லாமல் இன்பம் தரட்டும்.3-3. மதுமான்னோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ----------கோத்ரான்-------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.மரங்களும் எங்களுக்கு இன்பம் தரட்டும். ஸுர்யன் அதிக தாபமின்றி ஜீவ சக்தியை அளிக்கட்டும்.பசுக்களும் மதுரமான பால் தந்து இன்பம் அளிக்கட்டும்.ஸ்த்ரீகளுக்கு தர்ப்பணம் செய்யும் போது வேத மந்திரம் கிடையாது.--------கோத்ராஹா--------நாம்னீ: (அல்லது தா: )மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்.
Working...
X