சுக்லபக்ஷம் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு கந்த மூலாதிகளால் வாசனையான திரவியங்கள், , பலகாரங்கள் ஆகியவற்றுடன் பூஜை செய்ய வேண்டும். அரளி பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.பிள்ளையார் முன்பு அந்தணர்கள் ஸ்வஸ்திவாசகம் சொல்ல பூஜை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின் பார்வதி, சங்கரன் என்று தொடங்கி கணேச பூஜையை துவங்க வேண்டும், பித்ருக்களுக்கும், நவகிரஹங்களுக்கும் பூஜைசெய்ய வேண்டும். நான்கு கலசங்கள் வைத்து அதில் கோரோசனை, குங்கிலியம், மருந்து வாசனை சாமான்களை போட்டு, புனித நீரால் கலசங்களை நிரப்ப வேண்டும். கணேசரை அழகிய சிம்மாசனத்தில்அமர்த்த வேண்டும். கலச பூஜை செய்தபின் அடியிற்கண்ட மந்திரத்தால் கணேசரை பூஜை செய்ய வேண்டும்.சஹஸ்ராக்ஷம் சததாரம் ரிஷிபி: பாவனம் கிருதம்தேன அபிஷிஞ்சாமி பாவமான்ய: புனந்து தே.பகம் தேவருணோ ராஜா பகம் ஸூர்யோ ப்ருஹஸ்பதி:பகம் இந்த்ரஸ்ச வாயுஸ்ச பகம் சப்தர்ஷயோ தது:யத்தே கேஸேஷூ தெளர்பாக்கியம் சீமந்தேயச்ச மூர்த்தனிலலாடே கர்ணயோ: ரக்ஷணோ ஆபஸ்ததுந்தம் தேசதா:இந்த மந்திரங்களை கணேசருக்கு அபிஷேகம் செய்வித்த பின் சொல்ல வேண்டும். அதற்கு பின் யாக ஹோம பூஜைகளையும் செய்ய வேண்டும். அதற்குபின் கையில் புஷ்பம், அறுகம்புல் மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டுகணேசனின் தாயார் பார்வதியை மூன்று முறை புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.. மந்திரத்தை சொல்லி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.ரூபம் தேஹி யசோ தேஹி பகம் பகவதி தேஹி மே;புத்ரான் தேஹி, தனம் தேஹி, சர்வான் காமாம்ஸ்ச தேஹிமேஅசலாம் புத்தி மே தேஹி தராயாம் கியாதி மே வ சப்ரார்த்தனைக்கு பின் அந்தணருக்கு சாப்பாடு போட்டு வஸ்த்ரம், தக்ஷிணை கொடுக்க வேண்டும் இவ்வாறு கணேசரையும் கிரஹங்களையும் பூஜை செய்தால் செய்யும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும் லக்ஷ்மி கடாக்ஷமும் கிடைக்கும்..கணேச காயத்ரி சொல்லி வழிபாடு செய்யலாம்.மஹா கர்ணாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்.கணேசருக்கு பூஜை செய்ய நாள், நக்ஷத்திரம் உபவாசம் எதுவும் தேவையில்லை .சிரத்தையுடன் பூஜை செய்தால் போதும்.புரட்டாசி மாதம் சுக்ல சதுர்த்தியில் செய்ய படும் கணேச பூஜை சிவா (க்ஷேமம்) என்று அழைக்க படுகிறது.(2-10-2019)அன்று ஸ்நானம், தானம், உபவாசம் ஆகிய நற் கருமங்கள் செய்தால் கணபதியின் அருள் பார்வை கண்டிப்பாக கிடைக்கும்.பூஜை முடிந்த பிறகு வெல்லம், உப்பு, பால் ஆகியவை தானம் செய்ய வேன்டும்.பிராமணருக்கு சாப்பாடு போடுவதுடன் குருவாக கருதி உபசரிக்க வேண்டும். தானத்தின் போது வெல்லம், உப்பு, எள்ளு உளுந்து கொழுக்கட்டைகளும் வடை பாயசமும் கொடுக்க வேண்டும்.ந்தா” என்று அழைக்கப்படும். .இன்று உபவாசமிருந்து கணபதிக்கு ஹோம பூஜைகள் செய்த பிறகு பிராமணர்களுக்கு உப்பு, வெல்லம், காய்கறி, இனிப்பு பண்டங்கள் தானம் செய்ய வேண்டும்(10-3-2019)கா” என்று அழைப்பார்கள்.(03-09-2019) சுக்ல சதுர்த்தியும் செவ்வாயும் சேர்ந்து வரும் நாளில் சுகா எனப்பெயர்இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்திசெய்தார். அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம்.ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:இதன் பிறகு குளிக்க வேன்டும். .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்., கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும். அப்போதுஅடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும். பிறகு “அக்னி மூர்தெள” என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்..நாக பஞ்சமி;:--ஆஸ்தீக முனிவர் நாகங்களை வேள்வி தீயிலிருந்து காப்பாற்றியது இந்த பஞ்சமியில் தான். இதனால் தான் நாகங்களுக்கு பஞ்சமி உகந்த நாள் எனக் கருதபடுகிறது. பின் கண்ட மந்திரத்தை சொல்வது மிகவும் உத்தமம் 5-8-2019சர்வே நாகா ப்ரீயந்தாம் மேயே கேசித் ப்ருத்விதலே.யே சே ஹோலி மரீசிஸ்தா யே சுந்தர திவி சம்ஸ்திதா:யே நதீஷீ மஹாநாகா யே சரஸ்வதி காமின:யே சே வாபி தடாகேஷு தேஷீசர்வேஷீ வை நம:இந்த பூமியிலே, ஆகாசத்திலே, ஸ்வர்கத்திலே , சூரிய கிரணங்களிலே, சரோவர்களிலே ஏரி, கிணறு, குளங்களிலே ப்ரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம்.இவ்வாறு நியமப்படி பஞ்சமியன்று நாகங்களுக்கு பூஜை செய்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து அதன் பிறகு தானும் தன் குடும்பத்துடன் முதலில் இனிப்பையும் அதன் பிறகு மற்ற ப்ரசாதம் சாப்பிடுகிறானோ , அவன் இறந்தபிறகு நாக லோகம் சென்று போக போக்யத்துடன் வாழ்கிறான். அதன் பின் த்வாபர யுகத்தில் மிகுந்த பராக்ரம சாலியாக ஆரோக்கியமாக பேரன் பேத்திகளோடு அரசாள்கிறான்..சதுர்த்தியன்று ஒரு வேளை சாப்பிட்டு பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும்..12 மாதம் சுக்ல பஞ்சமியும் பூஜை செய்ய வேண்டும். வ்ரத பாரணை செய்ய வேண்டும். ஏராளமான ப்ராஹ்மணர்களுக்கு தங்க நாகர் தானம் செய்ய வேண்டும்.அனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், கம்பளன், கார்கோடகன், அஸ்வதர், த்ருதராஷ்டிரன், சங்கபாலன், காளியன், தக்ஷகன், பிங்களன் என்று 12 நாகங்களுக்கும் 12 மாதம் கிரமமாக பூஜை செய்ய வேண்டும்.பூமியில் நாகங்களின் சித்திரங்களை தங்கத்தாலோ , மரத்தாலோ , மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .தூப, தீப , நைவேத்யம் செய்ய வேண்டும். கீரை, லட்டு ஆகியவைகளை ஐந்து ப்ராஹ்மணர்கள் உண்ண ச்செய்ய வேண்டும்.பஞ்சமி யன்று பால், வெள்ளரிக்கய் சமர்பிக்க வேண்டும்.சிரவண சுக்ல பஞ்சமியன்று பால், தயிர், அறுகம்புல், சந்தனம் அக்ஷதை மற்றும் அநேக பதார்தங்களுடன் வணங்க வேண்டும்.5-8-2019புரட்டாசி சுக்ல பஞ்சமியில் நாகங்களை பல விதமாக சித்தரித்து பலவிதமாக பூஜித்தால் தக்ஷகன் என்ற நாகத்தின் ஆசி கிடைக்கும் 3-10-2019.ஐப்பசி சுக்ல பஞ்சமியில் தர்ப்பை புல்லால் நாகர் செய்து தயிர், பால், ஜலத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. கட்டி தட்டிய பால், கோதுமையினால் செய்த பலகாரம் சமர்பிக்க வேண்டும் 1-11-2019.இதனால் வாஸுகி த்ருப்தியடைவார். எந்த இடத்தில் :ஓம் “குருகுலவே ஸ்வாஹா”என்ற மந்திரம் ஜபிக்க படுகிறதோ அங்கு பாம்பு பயம் ஏற்படாது. சஷ்டி விரத மஹிமையும் கார்த்திகேயரும்.:--புரட்டாசி சஷ்டியின் போது எண்ணையினால் அபிஷேகம் செய்ய க்கூடாது.. 4-10-2019புரட்டாசி சஷ்டி மிகவும் சிரேஷ்டமானது.இன்று செய்யும் ஸ்நானம், பூஜை, தானம் ஆகியவைகள் பன் மடங்கு பயனளிக்கூடியது.. இரவு பலகாரம் சாப்பிடவேண்டும்.
Announcement
Collapse
No announcement yet.
chathurthi,panchami, sashti thithi pujas.
Collapse