9-12-2018 கார்த்திகை கடைசி ஞாயிறு.“”ஆஸீனம் அம்பிகாம் துர்காம் அபயங்கர ஷண்முகெள வாஸுதேவம் ச வாஞ்சேஸம் மங்களாக்யாம் நமாம்யஹம்”அமர்ந்த நிலையில் உள்ள மங்களாம்பாளையும், அபய ஹஸ்த துர்கை யையும் ஆறுமுகத்தனையும், வஸுதேவனையும் வாஞ்சேஸ்வர ரையும் நமஸ்கரிக்கிரேன் என்கிறது இந்த ஸ்லோகம்.நன்னிலம் அருகில் உள்ள ஶ்ரீ வாஞ்சியத்தில் கார்த்திகை கடை ஞாயிறு உத்ஸவம் குப்த கங்கையில் தீர்த்த்வாரியுடன் சிறப்பாக நடை பெறும்.முக்தி தரும் க்ஷேத்ரம் ஶ்ரீ வாஞ்சியம்.. பித்ரு கர்மாக்கள் செய்ய காசி ராமேஸ்வரம் போல் சிறந்த க்ஷேத்ரம் ஶ்ரீ வாஞ்சியம்..திந்திரிணி கெளரி வ்ரதம்:-- மார்க சீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை 9-12-2018.திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்படவேண்டும் என்றால் பார்வதி என்னும் கெளரீயை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.ஜாதகத்தில் சுக்ரன் நீசமாக கன்னியா ராசியில் இருந்தாலோ அல்லது கெடுதலான இடங்களில் சுக்ரன் இருந்தாலோ காலத்தில் திருமணம் நடைபெறாது. திருமணம் ஆனவர்களுக்குள் கருத்து வேற்றுமை, ஒற்றுமை யின்மை. பிரிவு போன்றவை ஏற்படலாம்.. தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படவும் இந்த கெளரீ விரதம் தக்க பரிஹாரமாகும்.சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்யவும். விரத பூஜா விதானம் புத்தகத்தில் ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.11-12-2018 பதரி கெளரி விரதம்:- மார்க்கசீர்ஷ மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி.பதரி என்றால் இலந்தை பழம். . இலந்தை மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். இலந்தை பழங்கள் நிவேதனம் செய்து தானும் சாப்பிடவும். பிற குழந்தைகளுக்கும் கொடுக்கவும்.இதனால் சிறந்த அறிவு ( ஞானம்) கிட்டும். வாழக்கையின் இறுதியில் ஆத்ம தர்சனம் கிடைக்கும் ஆத்மா விஷயமான உபனிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.