யம தீபம்:-- 05-11-2018 அன்றுஆஸ்விநஸ்யா சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி. ----சிதே பக்ஷம்=க்ருஷ்ண பக்ஷம். ஆஸ்விநம்= சாந்திர மான மாதம்.தீபாவளிக்கு முதல் நாள் வரும் த்ரயோதசி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வீட்டு வாசலில் அல்லது கோவிலில் மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.வீட்டில் வசிக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவரும் தனி தனியே ஒவ்வொரு மண் அகல் விளக்கு அவரவர்களே ஏற்றி ஸ்லோகம் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்கின உப சாந்தயே. ப்ராணா யாமம்.மமோ பாத்த ஸமஸ்த துருதய க்ஷயத் வார ஸ்ரீ் பர மேஸ்வர ப்ரீத்யர் த்தம் மம ஸர்வாரிஷ்ட நிவிருத்தி பூர்வகம் அப ம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே.ஒவ்வொருவரும் அவரவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை நோக்கி ம்ருத்யாநா பாச தண்டாப்ப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தானாத் ஸூர்யஜ; ப்ரீயதாம் மம. என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்.ஆக்ஸிடெண்ட் -வியாதி இவற்றால் அகால மரணம் ஏற்படாமல் பாது காக்கும். கந்த புரணம்..இம்மாதிரி இயம்புகிறது.