Announcement

Collapse
No announcement yet.

uma avathaaram and ramba thruthiyai.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • uma avathaaram and ramba thruthiyai.

    16-06-2018. uma avadhaaram.



    ஜ்யேஷ்ட மாத சுக்ல சதுர்த்தி ஹிமவானின் மகளாக தேவி அவதரித்த நன்னாள். . . தேவி சின்னஞ்சிறு குழந்தையாக காட்டில்

    தவம் செய்த போது உ=குழந்தாய்; மா=தவம் வேண்டாம் என அனைவரும் கூறினதால் உமா என்று அழைக்கபட்டாள்..

    இன்று உமா மஹேஸ்வரரை பூஜை செய்து, ஸ்தோத்ரம், பாராயணம் செய்வது ஸெளபாக்கியத்தையும், ஸெளமாங்கல்யத்தையும் தரும்.



    ரம்பா த்ருதியை.16-06-2018—nija jyeshta sukla paksha thruthiyai thithi.

    ரம்பா என்றால் வாழை. ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ த்ருதியை ரம்பா த்ருதியை எனப்படும் ஸ்ம்ருதி கெளஸ்துபம் -118 கூறுகிறது.
    புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப சோபிதா
    தத்ர ஸம்பூஜ்யேத் தேவீம் சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம்.

    என்கிற படி மண்டபத்தில் நாற்புறமும் வாழை மரங்கள் கட்டி நடுவில் தேவீயின் ( தாயாரின்) விக்ரஹம் அல்லது படம் வைத்து நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரிக்கப்பட்ட பக்ஷணங்களையும் நிவேதனம் செய்து பூஜை செய்து ஸுவாஸினி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்தவைகளை தானமாக வழங்க வேண்டும் .இவ்வாறு முறையாக பூஜை செய்து விட்டு கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி தேவியை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.

    வேதேஷு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ச்ருதோத் ருஷ்டஸ்ச பஹுசோந சக்த்யா ரஹித: சிவ:த்வம் சக்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா த்வம் ஸாவித்ரி ஸரஸ்வதி பதிம்
    தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.


    மேலும் யோஷித: புருஷோ வாபி க் யாதம் ரம்பா வ்ருதம் புவி
    பார்யாம் புத்ரம் க்ருஹம் போகாந் குலவ்ருத்தி மவாப்நுயு:

    என்பதாக பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா பூஜையை செய்வதால் நல்ல கணவன் நீண்ட ஆயுள், நல்ல குழந்தைகள், நல்ல வீடு , அனுபவிக்க தகுந்ததான போக வஸ்துக்கள்
    வம்ச வ்ருத்தி ஆகியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

Working...
X