Announcement

Collapse
No announcement yet.

karthikai snaanam,

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • karthikai snaanam,

    கார்த்திகை ஸ்நானம் 20-10-2017 முதல் 18-11-2017 முடிய.


    ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாகதினமும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.


    இதற்கு கார்த்திகை ஸ்நானம் எனப்பெயர் .இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகி மனதில் சுத்தமான எண்ணங்கள் உன்டாகும். இன வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.


    ஸ்நானம் செய்யும் போது கூற வேண்டிய மந்திரம்.


    கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராதஸ் ஸ்நானம் ஜநார்தன: ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.


    ஸ்நானம் செய்துவிட்டு காய்ந்த ஆடைகள் உடுத்திகொண்டு நெற்றிக்கு இட்டுகொண்டு மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்கிய


    ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்துகொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு அர்க்கியம் விடவும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி.


    வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதிவன் மம க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தநுஜேந்திர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.


    நித்ய நைமித்திகே க்ருஷ்ண கார்திகே பாபநாசனே க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ராதயா ஸஹிதோ ஹரே ; ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.


    அநேன அர்க்கிய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம் எனச்சொல்லி கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய முடியா விட்டலும் முடிந்த நாட்களில் செய்யலாம்.
Working...
X