Announcement

Collapse
No announcement yet.

go vathsa dwadasi.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • go vathsa dwadasi.

    கோவத்ச துவாதசி;_--
    இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்ய வேண்டும்.
    ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி. 16-10-2017. இன்று பசும்பால்; பசும் தயிர். பசு மோர், பசு வெண்ணை, பசு நெய் சாப்பிட கூடாது.


    பசும் பால் இன்று கறக்காமல் கன்றுக்குட்டி குடிப்பதற்கே விட்டு விட வேண்டும்.நிர்ணய சிந்து 147. இம்மாதிரி பகர்கிறது.


    அகத்தி கீரை, புல் பசு மாட்டிற்கு தர வேண்டும். இந்த ஸ்லோகம் சொல்லி கொடுக்கவும்.


    ஸுரபி த்வம் ஜகன் மாதர் தேவி விஷ்ணு பதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் கிரஸ:.


    இன்று பசு மாட்டை நமஸ்காரமாவது செய்ய வேண்டும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டை வணங்கவும்.

    ஸர்வ தேவ மயே தேவி; ஸர்வ தேவைஸ்ச ஸத் க்ருதா மாதர் மமா அபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி.


    பாற் கடலை கடைந்த போது காமதேனு வந்தது. காமதேனுவின் மகள் நந்தினி ஆவாள். வட இந்தியாவில் தீபாவளியின் முதல் நாளாக இதை தான் கொண்டாடு கிறார்கள்.
Working...
X