ஸ்வாமின், இதை மிகவும் மனம் நொந்து போஸ்ட் செய்கிறேன் . மஹாலய தர்பந தினத்தில் ஒரு அதிதியை போஜனம் செய்ய அழைத்தால் உடனடியாக அவர் தச்சினை ரூபாய் 500 /- குடு ப்பீரா என்று தான் கேட்கிறார். .எப்படிவும் நமது சக்திக்கு ஏற்றவாறு அவசியம் தக்ஷிணை கொடுப்போம் ஆனால் இது என்ன அதட்டி கேட்டபது என்றே தெரியவில்லை .இப்போது சொல்லும் நமது பிராமன் சமூகம் எங்கே போகிறது என்றே தெரியவிள்ளை. .பி.ஏஸ் நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
rituals- mahalaya tharpanam
Collapse
X
-
Re: rituals- mahalaya tharpanam
ஶ்ரீ:
ஸ்வாமி ஸந்நிதிக்கு,
இந்தக் கேள்விக்கு கீழ்க்கண்ட வகையில்தான் அடியேனால் பதில் அளிக்க இயலும்.
கண்டிப்பாக இந்த பதில் தங்களுக்கு சற்றேனும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும்
இப்படி எழுதுகிறேன், ஆனால் இந்த பதில் தங்களுக்கல்ல, இதுபோன்ற எண்ணத்தில் இருக்கும்
அத்தனைபேருக்கும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.
இதற்காக அடியேனைத் தாங்கள் சபித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
"சுட்டும் விரலால் பிறரை நோக்கி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா" என்று ஒரு பாடல் கேள்விப்பட்டிருப்பீர்கள்!
தேவரீர் எத்தனை பேர் ஆத்தில் தக்ஷிணை எதையும் எதிர்பாராமல் போஜனம் செய்து
ஆசீர்வாதம் செய்துவந்துள்ளீர்? என்று சற்று சிந்தித்துப்பாரும்.
யாரை போக்தாவாக அழைக்கிறோம்?
போஜனம் செய்து பொருள் ஈட்டுவதையே ஒரு தொழிலாக வைத்துக்கொண்டிருப்பவரில் ஒருவரைத்தானே?,
அவர் அப்படித்தான் கேட்பார்!
யஜனம், யாஜனம் என்ற இரண்டையும் முக்கியமாக அனைத்து ப்ராஹ்மணர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ப்ராஹ்மணார்த்தம் போஜனம் செய்வதை கேவலமாக நினைத்துச் சிலரும்,
நமக்கு அநுஷ்டானம் போறாது, நமக்குத் தகுதியில்லை என்று சிலரும்,
நமக்கு இதைவிட வருமானம் வரக்கூடிய தலைபோகிற வேலை இருக்கிறது,
இதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை என்று பலரும்,
பிறர் ஆத்தில் போஜனம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள்.
இதைத்தவிர பிழைக்க வேறு வழியில்லை எனச் சிலரும்,
பிள்ளைகள் தங்கள் பிற செலவுகளுக்கு எதுவும் பணம் தருவதில்லை எனச் சிலரும்
இதை ஒரு பிழைப்பாக, பணம் சம்பாதிக்கும் வழியாகக் கொண்ட சிலர்தான்
தற்போது ப்ராம்மணார்த்தம் சாப்பிட வருகிறார்கள்.
அப்படியிருக்க, அவர்கள் இவ்வளவு தக்க்ஷிணை கொடு என்று கேட்கிறார்கள்
என்று குறைப்படுவதில் நியாயம் இருப்பதாக அடியேனுக்குப் படவில்லை.
இதற்காகத்தான், வருடத்தில் குறைந்தது நாலு பேருக்காவது போஜனம் செய்ய ஸ்வாமியாகச்
செல்வேன் என ஒவ்வொரு ப்ராஹ்மணரும் சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும் என்று
ஒரு இயக்கத்தை ஆரம்பித்தேன், ஆதரிக்க ஆளில்லை?!
தாஸன்
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 23:56.
Comment