Announcement

Collapse
No announcement yet.

SAVE OUR COMMUNITY

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SAVE OUR COMMUNITY

    Dear All :


    Today in the modern world, we can easily observe that our Community is gradually coming down. Today our boys are facing lot of problems in getting suitable alliance and due to migration to developed countries and higher studies by girls girls are also expecting their partners suitable to her qualifications. Most of the girls are not preferring to choose persons who studied in Veda Padashala even though the boy studied upto Ganam and financially sound. Nonethless to mention here even the poor girls who studied upto 10th class are expecting highly qualified persons as her partner. Also we are all aware that the girls who studied higher studies are selecting her partner even for inter caste marriage. Parents having no sons and only one daughter are not at all showing interest in marry her. Since things of Brahmins Community are going in a wrong track there are several cases of divorce and the girls are facing miserable situation without life partner.

    Many people expressed even our own community people are helping each other in proposing good alliance mainly for boys who are many in number as bachelor including those who studied Vedas.

    Situation being like this, the Customs and Culture of Brahmins are slowly vanishing. Many Brahmin Boys whether he is a married or bachelor not performing atleast yearly Shrardham. The reason being apart from above reasons, the Vadhyars are demanding high dakshinas. No doubt, we have to give Sambhavanai to Vadhyar for his day to day living purpose. A person who is rich can afford to pay the demanded amount as Dakshina to Vadhyar. How can a person pay the demanded dakshina who is facing problem for his day to day bread. We have in our surroundings many so called Vadhyars who learned the procedure and came to Vadhyar profession. They are also having the same attitude of demanding high. Under the circumstances, most of the middle class people left with no option to adopt a simple way of giving Annadhanam to orphan house on shrardha thithi.

    When our Community ratio is deminishing gradually why Vadhyar should not help the poor and middle class Brahmins in doing atleast Shrardham and Nithyavathi ceremonies. Brahmin should not hit on ones stomach and survive. We have to learn the helping nature atleast from now onwards.

    Brahmin Community established many forums, associations, trust, welfare Centres, etc. etc. at many cities. Why rich Brahmin people should help poor brahmin family in doing our Hindu Dharma? In the same way we all should come forward to develop our customs and culture and help bachelor boys to get married for which we should propose atleast through this forum.

    This website matrimonial service should be expanded and should not ask for new registration for uploading the profile.

    I have discussed this topic in many websites forum but brahmin community people are not coming forward to be unite. Let us try atleast in this forum.

    Regards,
    VKSWAMY

  • #2
    Re: SAVE OUR COMMUNITY

    Sri:

    the Vadhyars are demanding high dakshinas. No doubt, we have to give Sambhavanai to Vadhyar for his day to day living purpose. A person who is rich can afford to pay the demanded amount as Dakshina to Vadhyar. How can a person pay the demanded dakshina who is facing problem for his day to day bread.
    Any number of brahmin boys or grahasthas who are facing problem for their day to day bread can contact us,
    we can feed them and teach them Vaideeka lessons and they can perform their own rituals and act as bruhaspathy for others to earn sambhavanai.

    Also, any gruhastha who feel the vadhyar sambhavana is not affordable can also learn from us and do their rituals on their own.
    I hope, most of them are feeling hard to pay high for shradham which is a recurring ceremony,
    so within one year one can learn it.
    In the point of view of a Vadhyar,
    Shradham is the only karma which is having lot of procedures and manthras and time consuming with less sambhavana
    when compared with other rituals.

    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: SAVE OUR COMMUNITY

      Both Sri.Swamy and Dr.NVS have expressed well. But one cannot blame only Vaadhyaars' s demanding high dakshinas for not performing srardhas and other rituals. Today it has become a fashion to say "I have donated food for ....children, on theoccasion os srardham, etc.," It is saddening our hearts to see such situations. Also belief in God and attending pravachanams, visiting temples are diminishing. Present technology of smartphones, TV serials, supersinger competitions etc., lead our kids astray and parents when both are employed have to depend on daycare/ governesses to take care of kids. They grow with no cultutal inculcation, as the families are nuclear.
      The society has to stop and think and decide where to go.
      Let ood sense prevail and the chase after money has to be balanced with other things we are likely to lose.
      JAI SRI RAM!
      VARADARAJAN

      Comment


      • #4
        Re: SAVE OUR COMMUNITY

        Sri:
        Well said Varadarajan Sir,
        What I am repeatedly stressing is:
        We are all brahmins,
        we all must learn Vedam as per sastra
        some are skipping this for lowkika earnings
        so, if your earnings are not enough to give the dhakshinai demanded by a vadhyar
        at least at that point one has to start learning Vaideeka lessons by assisting a Vadhyar
        in his leisure time, by this he could learn vaideekam and there will be no need to pay much for other vadhyar
        also, he can keep this vaideekam as his part time job to earn some money.

        Also, only by learning vaideekam can avoid skipping of mantras by Vadhyars.
        If one is affordable and wanted to check the vadhyar for not skipping manthras can appoint
        some other learned person as Brahma.
        If not affordable, he himself can act as a brahma only by learning mantras.

        Why people are not understanding this?
        Who has to decide the Sambhavanai of a Vadhyar?
        Vadhyar is a professional like a lawyer or a doctor who decides his own fees.
        Choose your Vadhyar according to your capacity.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: SAVE OUR COMMUNITY

          Dear Dr.NVS,
          You are right. People nowadays do not mind spending a posh lunch/dinner in good restaurants at 400 to 700 per person, ser a Rajni movie, first day first show paying even1000 per ticket , but hesitate, no, desist spending about 1500 to 2000 for paying vaadhyaars. Inmany big sities the Vedha Bhavans are doing a fairly good job of arranging vaadhyaars for such rituals Secunderabad vedha bhavan is doing a very goodjob.
          I am sorry to say that maximum twice a year for performing srRdham for your departed parents many offer various silly reasons to avoid it. They talk of helping society by feeding orphans. They can do this too, AFTER PERFOR
          MING SARDHAM to be blessed by all.

          No wonde , rthe next generation is leaving most of our traditional duties, mixed caste marriages occur often ending in disaster.
          Absence of joint families , where one can get useful advice for any crisis often is the root cause.
          I can only pray, that, theLord makespeoplewake up and remember their basicduties as a brahmin.
          Varadarajan
          Last edited by R.Varadarajan; 28-07-16, 18:56.

          Comment


          • #6
            Re: SAVE OUR COMMUNITY

            ஶ்ரீ:
            வாத்யார்களைக் குறை சொல்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்:
            அடியேன் வாத்யார்களுக்கு ஆதரவாக எழுதுவதாக எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை,
            ஆனால் என்னைப் பொறுத்தவரை சில வாத்யார்களால் க்ருஹஸ்தர்கள் அநுபவிக்கும்
            இன்னல்களுக்குத் தீர்வு காணவும், சாஸ்த்ர - ஸம்ப்ரதாயங்கள் கட்டுக்குலையாமல்
            பேணப்பட்டு வரவேண்டும் என்பதற்காகவும், க்ருஹஸ்தர்களுக்கு விழிப்புணர்வை
            ஏற்படுத்துவதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக மிகுந்த பொருட்செலவு, நேரச்செலவு,
            உடலுழைப்பைச் செலுத்தி இணையம் வாயிலாக ஸேவை செய்து வருகிறேன்
            என்பதை என்னைப் படைத்தவன் அறிவான் என்பதை கர்வத்துடன் தெரிவிக்கிறேன்.

            அடியேன் ஸ்வயம் ஒரு வாத்யாராக இருப்பதால் வாத்யார்களின் கஷ்டமும்
            வாத்யாரால் கஷ்டமும் அடியேன் நன்கு அறிவேன்.

            ப்ரச்சினைக்கு தேவை தீர்வே தவிர, யார் தரப்பில் நியாயம் உள்ளது என்கிற ஆராய்சி அல்ல.

            1. (இன்றைய) வாத்யார் என்பவர் தனிப்பிறவி அல்ல, ஸந்யாஸியும் அல்ல
            வேறு லௌகீக உத்யோகம் கிடைக்காதவர்கள், ஏற்கனவே வைதீகத்தில் உள்ளவர்களிடம்
            தொடர்புள்ளவர்கள், நம்மால் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் உள்ளவர்கள் வாத்யார் ஆகத்
            தீர்மானிக்கிறார்கள்.

            2. அக்காலத்தில் வந்த ப்ரயோக புத்தகங்கள் அனைத்தும் க்ரந்த லிபியில் மட்டுமே வெளிவந்தன
            ஆனால் தற்போது, தன்னைத் தன் திறமையை வெளியுலகிற்குத் தெரிவிக்க விரும்பும் சிலர்
            தமிழ் மொழியில் ப்ரயோக புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அதை வாங்கிப் படித்துக்கொண்டு
            தாமாகவே சிலர் வாத்யாராகத் தயாராகிவிடுகின்றனர்.

            3. இப்படிப்பட்ட வாத்யார்களின் நோக்கம் பணம் ஈட்டுவதத்தைத் தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.
            இப்படிப்பட்ட வாத்யார்களுக்கு ஆதரவு அளிப்பது யார்? ப்ரயோக பாடசாலை என்று ஒன்று எங்காவது உள்ளதா?
            இந்தந்த ப்ரயோகம் பண்ணிவைக்க இவர் தகுதியுள்ளவர் என சான்றிதழ் அளிக்கும் முறை ஏதாவது உள்ளதா?

            4. சில காலங்களுக்கு முன்பு வரை (சுமார் 50 வருடங்களுக்கு முன்பு), புரோகிதம் என்பது ஒரு பரம்பரைத் தொழிலாக
            இருந்து வந்தது. அதனால் அந்தந்த வாத்யாரின் பிள்ளை அவரிடமே நன்கு கசடறக் கற்று, நன்கு தேர்ச்சிபெற்று
            பின்னரே வாத்யாராக பணியைத் தொடர்ந்தனர். அக்காலத்தில் பணத்தைக் காட்டிலும் நற்பெயருக்கு மிகுந்த அவா இருந்தது.
            மேலும் க்ருஹஸ்தர்கள் அனைவரும் ஸம்ஸ்க்ருத ஜ்ஞானத்துடன் இருந்தனர். ஆத்து வாத்யார் என ஒருவரை மட்டுமே
            வைத்துக்கொண்டு அவர் பண்ணிவைக்கும் ப்ரயோகத்திற்கு வெகுமதியாக மிகச்சொற்பமான கட்டணமே அளிப்பர்.
            ஆனால், அந்த ஆத்து வாத்யாரின் ஆத்துக்குத் தேவையான அனைத்துவித சௌகர்யங்களையும் க்ருஹஸ்தர்கள்
            செய்துகொடுப்பர்.

            5. அக்காலத்தில் புண்யாஹவாசனத்திற்கு அவர்கள் வயலில் விளைந்த நல்ல அரிசி ஒரு மரக்கால் அரிசி சேர்ப்பார்கள்
            இக்காலத்தில் ரேஷனில் அரிசி வாங்கி வைத்துக்கொண்டு (அதை வேலைக்காரியிடம் கொடுத்தால் வாங்கமாட்டாள்)
            வாத்யாருக்கு ரேஷன் அரிசியைக் கொடுக்கிறார்கள். அதுபோல காய்கறிகள், வெல்லம், பருப்பு போன்ற பொருடக்கள்
            ஒருவீட்டில் கொடுத்தால் குறைந்தது ஒரு வாரத்திற்கு குடும்பச் செலவிற்கு போதுமானதாக இருந்தது. வருடாந்திரத்தில்
            மிராசுகள் குடும்பத்திற்கே துணி எடுத்துக்கொடுப்பார்கள். (காசைத்தான் கண்ணால் பாரக்க முடியாது).

            6. அக்காலத்தில் ஒருசிலரே பட்டணத்தில் இருந்தனர், பெரும்பான்மையோர் கிராமத்தில் இருந்தனர், அதனால்
            காரியங்கள் அனைத்தையும் சொந்த ஊரில் சென்றுதான் நடத்துவார்கள். அதனால் வாத்யார் ஊரைவிட்டு வெளியே
            செல்ல அவசியமில்லாமல் இருந்தது. பின்னர், பட்டணத்தில் நடத்த ஆரம்பித்த பிறகும் ஊரிலிருந்து ஆத்து வாத்யாரை
            அழைத்து வந்துதான் நடத்துவார்கள், ஆனால் பட்டணத்தில் நடத்துபவர்கள் வாத்யாருக்கு கணிசமாக ஸம்பாவனை
            அளித்து வந்தனர்.

            7. காலம் செல்லச் செல்ல, ப்ராமணர்கள் பெரும்பகுதி ஊரிலுள்ள நிலபுலன்களையெல்லாம் விட்டுவிட்டு, பெரியவர்களையும்
            அழைத்துக்கொண்டுவந்து பட்டணத்துக்கு வெளிப்புறத்தில் சொந்தமாக இடம் வாங்கி குடியேறத் துவங்கினார்கள்.
            செய்யும் தொழிலில் இடையூறு இல்லாமல் இருக்கவும், அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்க்கவும்
            இந்த அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.

            8. ஆற்று நீரில் முழுகிச் ஸ்நானம் செய்தல், நித்ய கர்மாநுஷ்டானம் செய்தல், ப்ராம்மணனாக சிகை - கச்சத்துடன் இருத்தல்,
            ஸ்தோத்ர பாடம் - சூக்தாதிகள் - ப்ரபந்தம் போன்ற அடிப்படை விஷயங்களையும் விட ஆரம்பித்தனர். பட்டணத்தில் இதரர்களுடன்
            வசிக்க ஆரம்பித்ததால் அவர்களைப்போலவே கச்சம் துறந்து, லுங்கி அணிதல், மீசை வைத்துக்கொள்ளுதல், நெற்றியில் ப்ராம்மண
            அடையாளம் எதையும் இடாமல் பாஷண்டியாக இருப்பதைப்பற்றிக்கூட எந்தக் கவலையும் அவர்களுக்கில்லாது போயிற்று.

            9. ஶ்ரீரங்கம், திருக்குடந்தை போன்ற கேஷத்ரங்களில் கர்மாக்களை செய்யவேண்டும் என்ற எண்ணமும், நம் ஊர் குலதெய்வங்களை
            மாதத்தில், வருடத்தில் ஒருநாள் தரிசிக்கவேண்டும் என்ற எண்ணமும் ஒழிந்துபோயிற்று. இவர்களுடைய அக்கறையெல்லாம்
            பணம், பணம், பணம் மேலும் மேலும் பணம் ஸம்பாதிக்கவேண்டும் என்பதாக இருந்தது.

            10. கிராமத்தில் ஒரு வாத்யார், நடந்தோ ஒரு சைக்கினை வைத்துக்கொண்டோ அனைவரது இல்லத்திற்கும் சுலபமாகப் பண்ணி வைப்பார்
            ஆனால் பட்டணத்தில் ஆளுக்கு ஒரு மூலையில் இருந்ததால் அவரவர் இருக்கும் இடத்திற்கு வந்து செய்துவைக்க நிறைய வாத்யார்களின்
            தேவை அவசியமாயிற்று. இதனால் தங்கள் தங்கள் மதிப்பைக் காட்ட மற்றவரைக் காட்டிலும் கூடுதலாக ஸம்பாவனை பண்ணி வாத்யாரின்
            மதிப்பைப் பெற விரும்பினார்கள்.

            11. நாளடைவில் இவர்களுக்கு தங்கள் கோத்திரம் என்ன, சூத்திரம் என்ன, அபிவாதி எப்படிப் பண்ணவேண்டும் என்பதுகூடத் தெரியாமல் போயிற்று
            அனைத்திற்கும் வாத்யாரை நம்பி வாழத் தலைப்பட்டார்கள். நாளாக ஆக, ப்ரயோகத்தில் சொல்லியுள்ளபடி பண்ணி வைக்கவேண்டியது
            ஒரு வாத்யாரின் பொறுப்பு, தப்பாகப் பண்ணி வைத்தால் அந்த பாபம் அவருக்குத்தான் என்று, "வாத்யார் சொல்படித் தர்ப்பயாமி" என்று ஹாஸ்யமாக வேறு
            சொல்லிக்ககொள்ள ஆரம்பித்தார்கள்.

            12. யஜமானர் இப்படி மாறினால், யஜமானியம்மாள் மாறமாட்டார்களா?! எல்லா விசேஷங்களுக்கும் தங்கள் கைப்பட தளிகை செய்துவந்த மாதுசிரோமணிகள்
            தங்களால் இயலவில்லை தளிகக்கு ஆள்வைக்க வேண்டும் என்றார்கள். பட்டணத்தில் நிறைய ஸம்பாதிக்கிறவர்களுக்கு மனைவிக்காக இதைக்கூட செய்யக்கூடாதா
            என்று தளிகைக்கும் ஆள் வைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்கள் கைப்பக்குவத்தைக் காட்டி, அவர்களை உடலளவல் சோம்பேறியாக்கி, நாவுக்கு விருந்தளித்து,
            நாவை அடிமையாக்கி வைத்தார்கள். தற்போது வைதீகத்தின் செலவு பலமடங்கு ஏறியது.

            13. கொஞ்சம் கொஞ்சமாக மாதவிலக்கானவர்கள் ஒதுங்குவதைக்கூட நிறுத்திக்கொண்டார்கள். இவர்கள் இப்படியெல்லாம்
            மாறிவிட்டார்களே தவிர, இவர்கள் மனச்சாட்சி மட்டும் இவர்களை விட்டு வைக்கவில்லை. இதனால் இவர்கள் வசிக்கும் வீடு
            ப்ராம்மணனுடைய தெய்வீகமான வீடாக ஒருவரால்கூட நினைக் இயலவில்லை. இதனால் இருக்குமிடத்தில் கர்மாக்களைச்
            செய்ய இவர்களுக்கே பிடிக்கவில்லை. இதனால் பொது இடங்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.

            14. இப்படியாகத்தானே லௌகீகமான சினிமா, டிராமா, டி.வி என்று பொழுதுபோக்கு அம்சங்களும் அதற்காகச் செலவிடும் நேரங்களும், அதற்காகச் செலவிடும்
            பணமும் அதிகமாகிப்போக, வைதீகம் அலுத்துப்போக ஆரம்பித்தது. வைதீகத்திற்குச் செலவு செய்வது வீண்செலவாகத் தெரிய ஆரம்பித்தது. காலம் காலமாகச்
            செய்து வந்த வைதீகத்தை விட்டால் யாராவது ஏதாவது சொல்வார்களோ என்கிற பயத்தில் ஊருக்காக வைதீகம் செய்ய ஆரம்பித்தான்.

            15. தற்போது ப்ராம்மணன் ப்ராம்மணீயத்தை இழந்து சோ கால்டு ப்ராம்மணனாகவே மாறிவிட்டான். அதாவது பெயரளவில் ஆத்திகன், மனதளவில் நாத்திகன்
            இவர்களைப்போலவே பணம் ஸம்பாதிப்பதற்கு குறுக்குவழியில் தோன்றிய ஆன்மீகவாதிகள், ஜோதிடர்கள் போன்றோரின் "பித்ரு சாப" பயத்தினால்தான்
            இன்னமும் சிலபேர் ச்ராத்தாதிகளைப் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கல்யாணம், உபநயனம் எல்லாம் ஆடம்பர விஷயமாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது.
            அதிலெல்லாம் செலவுசெய்வதைக் குறைத்தால் இவர்களின் சமூக அந்தஸ்து பாழ்பட்டுவிடும் என்பதால் அதற்கான செலவுபற்றி கவலைப்படமாட்டார்கள்.
            ஆனால் ச்ராத்தம் செய்வதே வீண், எதோ பயத்திற்காகச் செய்கிறோம் இதற்கு இவ்வளவு அழவேண்டுமா என்று ச்ராத்தம் ஒன்றுதான் இவர்களுக்கு மிகவும்
            பண்ணவும் முடியாமல், விடவும் முடியாமல் மிகவும் உறுத்தலாக இருக்கிறது. இதனால்தான் பலபேர், கயாவுக்குப்போய் ஒருதரம் ச்ராத்தம் பண்ணிவிட்டு
            வந்தால் அதனம்பிறு ச்ராத்தம் பண்ணவதை விட்டுவிடலாமா எனக் கேட்கிறார்கள்.

            16. இப்படிப்பட்டவர்களிடமிருந்து இயன்றவரை பணம் பண்ணுவதற்காகத் தோன்றியவர்கள்தான் இன்றைய வாத்யார்கள் சந்தேஹமில்லை. எனவே இப்படிப்பட்ட
            நிலையில்தான் இன்றைய வைதீகம் இருக்கிறது - இதை யாரும் மறுக்கமுடியாது.

            இதற்குத் தீர்வு என்ன?

            மீண்டும் பழைய நிலைக்கு லௌகீக ப்ராம்மணர்கள் வர இயலாது.
            ஆனால் அவர்கள் நினைத்தால் இந்த நிலையை எளிதாக மாற்றலாம்:
            1. ப்ராமணார்த்தம் - போக்தா - ச்ராத்த போஜனம் புஜிப்பதற்கு வைதீகர்களை எதிர்பார்க்காதீர்கள்
            தங்கள் உறவு அல்லது நண்பர்களில் தாங்கள் மதிக்கக்கூடிய இருவரை அல்லது தங்கள் மாப்பிள்ளை
            அல்லது ஸம்பந்தி, மைத்துனர், மாமாபிள்ளை, அத்தை பிள்ளை போன்றவர்களில் இருவரை தொடர்ந்து
            ஸ்வாமியாக ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். உங்கள் உறவுமுறையும் நல்ல நிலையில் இருக்கும்
            தக்ஷிணையாக அதிகம் எதுவும் கொடுக்கவேண்டாம், கொடுத்தாலும் அது உங்களுக்கு வீணாகத் தெரியாது.
            அதுபோல் தாங்களும் வருடத்தில் சில முறை யாராவது உறவினர் வீட்டில் ஸ்வாமியாக இருந்து நிறைவேற்றிக்கொடுங்கள்.

            இதைக் கடைப்பிடிப்பதால் 75 சதவீததற்குமேல் ஸ்வாமி பிரச்சினை தீரும்.

            2. ச்ராத்தம் கற்க நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள்:
            ச்ராத்த ப்ரயோகம் சுமார் 100 பக்கங்கள் இருக்கும், அதில் கடுமையான வேத பாகங்கள் சில மட்டுமே உள்ளன
            (அவற்றை இன்றைய வாத்யார்கள் கூடச் சொல்லுவதில்லை). ஜபமாகப் பண்ணவேண்டியவற்றை மொபைலில்
            ஆடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு தேவையான இடத்தில் ஒலிக்கச் செய்யுங்கள். மற்ற விஷயங்களைச்
            சிறிது சிறிதாக மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மனப்பாடம் செய்யும் வரை, அல்லது மனப்பாடம் செய்ய
            முடியாத பகுதிகைளை ப்ரிண்ட் செய்தோ மொபைலில் பி டி எப் ஆக வைத்துக்கொண்டோ பார்த்துச் சொல்லலாம்.
            தினமும் ஒரு முறை படித்தால் ஒரு வருடத்தில் கண்டிப்பாக மனப்பாடம் ஆகிவிடும்.

            3. நேரமும் ஆர்வமும் இல்லாதவர்கள் :- தங்கள் பகுதியில் ஒரு பத்து இருபதுபோர் சேர்ந்து, ஏதாவது தனியார் கம்பெனி
            போன்றவற்றில் சொற்ப சம்பளத்தில் வேலையில் இருப்பவர்கள், வி ஆர் எஸ் வாங்கியவர்கள் ஒரளவு வைதீகத்தில்
            ஆர்வமுள்ளவராக இருந்தால் அவரை அணுகி ச்ராத்த ப்ரயோகத்தைக் கற்கச் செய்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

            4. உண்மையிலேயே வாத்யார் ஸம்பாவனை கொடுக்க வசதியில்லாதவர்கள் உறவினர்களில் யாராவது இரண்டுபேரைக் கூப்பிட்டு
            காலலம்பி சாதம்போட்டு முடிந்த தக்ஷிணையைக் கொடுத்து ஸேவிக்கலாம். ஆனால் இயற்கையில் வசதி இல்லாதவர்களிடம்
            நேரம் நிறைய இருக்க வாய்ப்புண்டு, இவர்கள் எம்மைப்போன்ற யாரையாவது அணுகி கற்றுக்கொண்டு தாங்களும் பயன்பெற்று
            மற்றவர்களுக்கும் பயன் உள்ளவர்களாக இருத்தலே சிறப்பு.

            5. மற்றவர்கள் எப்பவும்போல் தங்கள் இயலாமையை மறைக்க வாத்தியாரைத் திட்டிக்கொண்டே காலத்தைக் கடத்தலாம்.



            கதைகட்டச் சிலபேர் இருந்துவிட்டால் அந்தக் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
            காப்பாற்றச் சிலபேர் இருந்துவிட்டால் அந்தக் கள்வனின் வாழ்விலும் நியாயம் உண்டு
            வழக்குக்குத் தேவை சில சாட்சி, உன் மனதுக்குத் தேவை மனசாட்சி .....
            உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி
            மனிதன் எதையோ பேசட்டுமே உன் மனதைப் பார்த்துக்க நல்லபடி .....


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: SAVE OUR COMMUNITY

              நீங்களே சொல்லிவிட்டீர்கள் அப்புறம் நான் எதற்கு மேலும் இதைப்பற்றி சொல்லி தங்கள் மனதை புண் படுத்தவேண்டும்.. க்ஷமிக்கவும்

              Comment


              • #8
                Re: SAVE OUR COMMUNITY

                Dear NVS,
                WHILE READING, I could imagine your feelings. You have expressed with a bleeding heart what I too feel and sure many of our senior members too. Your enumeration of progressive deterioration of Brahministic tradition is heart rending. As you said that even the monthly "Theettu" has been discarded makes us feel so bad.As you said, instead of watching TV serials promoting negativity, if one spends a half an hour day throughout the year to go through srardha prayogam, we can manage ourselves with a couple of like minded brahmins the srardha rituals. We are not humans if we say that we do not have time or method to do our duty for the departed souls of our father and mother and forefathers.
                Accursed they shall be if they do it,
                Varadarajan
                Last edited by R.Varadarajan; 29-07-16, 07:23.

                Comment


                • #9
                  Re: SAVE OUR COMMUNITY

                  very much true .the condition of todays brahmin*s community is well explained. must accept by all brahmins.TRT

                  Comment


                  • #10
                    Re: SAVE OUR COMMUNITY

                    Sri:
                    Above my post shared in facebook and following are the comments received and my reply for few:

                    42Vijayaraghavan Sundaram, Govind Sanskrit Rajan and 40 others


                    12 comments
                    18 shares


                    Comments





                    Srivatsan Chakravarthy nalla thelivana writeup
                    Like · Reply · 1 · 11 hrs









                    Sundararajan Rengaswamy வாத்யார்கள் நாம் கொஞ்சம்ச்ரத்தை காண்பித்தாலும் போதும் நன்றாக கர்மாக்களை செய்துவைக்கக் காத்திருக்கிறார்கள்.்
                    Like · Reply · 11 hrs









                    Aravamudhan Raman KatrOrku sendra idamellaam sirappu enbadhu pOla nalla vAdhyArkku engum varavErppu thaan! Sradhdhai irundhaal nalla vaadhyaar varuvaargaL.
                    Pitru kaaryam nandraaha nadakkum.Mudhalil naam seyya vENdiyadhai nandraaha therindhu koNdu pinnar piraridam kutram kANbOm! VaadhyaargaL mEl kutram illai, kutram nam mElathaan!

                    Like · Reply · 11 hrs









                    Thiruppullani Raguveeradayal இதில் தீர்வு என்று அவர் சொல்லி இருப்பதில்முதலாவதைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்க சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர் முன்வர வேண்டும் என இந்த பட்டிக்காட்டுப் பாமரன் ப்ரார்த்திக்கிறேன்
                    Like · Reply · 1 · 11 hrs








                    Aravamudhan Raman replied · 1 Reply
                    Aravamudhan Raman Appadi paarththaal amAvAsai tharppaNam pOndravatrirkum vaadhyAr vENdaam, naamE puththagaththai paarththu seydhu koLLalaam endra vaadham nyaayam aahi vidum. Matra brahmaNargaLai kuupiduvadhu avargaLukku udhavuvarkkuththan. Idhai maruththaal naam brahmaNargaLE vENdaam endru solvadhu pOla aahividum Swaamin!
                    பதில்: தெரிந்த பாடத்தையே திரும்பத் திரும்பத் சொல்லித் தருவது வாத்யாருடைய வேலையல்ல அப்படிப்பட்டவர் நல்ல வாத்யாரும் அல்ல. வாத்யார் வந்து பண்ணிவைத்தால்தான் வாத்யார் ஸம்பாவனை தரவேண்டும் என்பதில்லை. அவரவர் தாமே தெரிந்துகொண்டு பண்ணிவிட்டு தம்மால் இயன்ற ஸம்பாவனையை எடுத்து வைத்து, அடுத்த முறை வாத்யார் ஆத்துக்கு வரும்போது ஸமர்ப்பிக்கலாம், அது உத்தமமாகும்.உதவி தேவை என்று அவராக வரும் ப்ராம்மணருக்கு மறுக்காமல் உதவிசெய்யட்டும். இவ்வளவு கொடுத்தால்தான் வருவேன் என்று பிகுபண்ணுவோருக்குக் கொடுப்பது உதவி ஆகாது NVS.


















                    Varadarajan Varadhu மனசாட்சி உறுத்துகிறது ஸ்வாமி! எதற்கென்றால் அகத்தில் ஸ்ரார்த்தம் செயாததற்குத்தான்.மற்றபடி வாத்தியார் சம்பாவனைக்கு பேரம் பேசுபவர்களைக் கண்டால் எல்லையற்ற கோபம் வருகிறது.ஹோட்டலுக்கும்
                    சினிமாவுக்கும்,செருப்புக்கும் பேசாத,பேச முடியாத பேரமெல்லாத்தையும் வாத்தியாரிடம் பேசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.ப்ரஹஸ்பதியை திருப்தியுறும்படி மரியாதை செய்யவேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன் ஸ்வாமி!
                    Like · Reply · 2 · 11 hrs








                    Aravamudhan Raman replied · 1 Reply







                    Sundar Rajan Excellent
                    Like · Reply · 10 hrs









                    Vijaya Raghavan Very excellent article. I think some of this procedures (at least) should b followed for athma thrupti
                    Like · Reply · 10 hrs









                    Bala Subramaniam Your Opinion is 100 Percent Correct.In my small Age I have seen such Vathiyar in My Village.Now every thing Changed due to Town Culture. I feel Very Much.But no Alternate. Sorry for present state
                    Like · Reply · 10 hrs









                    Krishnamoorthi Thiagaraja Sasthirigal வேதம் என்று வந்துவிட்டால்,அதில் சொன்னபடி நடக்கவேண்டும். குடுமி வித்த வாதியார், முதலில் தேவசம் செய்துவைக்க வருகிறாரே தவிர அவரே சாபிடுவதில்லை. இது என்னநியாயம். வேதம் தேவசம் செய்துவைக்க வந்தாலே, சாபிடவும்தானே ஒத்துக்கணும்.எத்தனை காசு கொடுத்தாலும் திருப்தி இல்லாத வாதியார்கள் இருக்கும் வரை. யாரையும் குறை சொல்லமுடியாது. இப்போது உள்ளவர்கர், சாஸ்திரிகளே கிடையாது,. எல்லாம் வியாபாரம் செய்யும் நோக்கமே இருக்கிறது. ஒரு பெரிய வாதியார், அவரே சாமான்கள் வாங்கிவருகிறேன் என்றால்,நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அவர் வரமாட்டார். வீட்டில் உள்ள பொருளையே எடுத்துவந்து அதையும் காசாக்குகிறார். பொதுவாக சொன்னால், இப்போ உள்ள சூழ்நிலை, நாம் எப்படி வேண்டுமானாலும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கலாமே தவிர, யாரும் முதலில் அவரவர்கள் நிலையில் இருப்பதில்லை. இப்போ இருக்கிற அனைத்து வாத்தியார்களும் ஹோடேலில் நன்னா சமுசா,வெங்காயம் சாபிடுகிறார்கள். இவர்கள் காசிலேயே குறியாக இருப்பவர்கள் என அர்த்தம். எங்க அப்பா இதுவரைக்கும் அவர்கள் கொடுத்த காசையே வாங்கி வந்தார். demand செய்வதே இல்லை. பலன். கையில் காசு,சொத்து,வீடுஇல்லை. அதேசமயம் வியாதியும் இல்லை.வயது93.இதுதான் வேதத்தின் பலன். வியாதியே வராது. அப்போ இப்பஇருக்கிற வாதியர்களுக்கு பிற்காலத்தில் வியாதிக்கு செலவு வரும் என்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்னவோ.ஒன்றுமே புரியவில்லை. முதலில் வேதம் படிக்க வந்துவிட்டால், இவர்கள் குடுமி வைக்கவேண்டும். அதை வைக்காமல் மந்திரம் சொல்லி காசு மட்டும் லக்ஷதில் கேட்கிறார்கள்.

                    Like · Reply · 1 · 10 hrs
                    இவர் வயிற்றெறிச்சலை வார்த்தைகளாக வடித்துள்ளார். வாத்யார் என்பவர் தனி ஜாதி நாம் வேறு ஜாதி என்று நிறையபேர் எண்ணுகின்றனர் போலும். வாத்யார் வெங்காயம் சாப்பிடுகிறார் என்று சொல்லும் இவர் வெங்காயம் சாப்பிடுவாரா
                    இல்லையா என்று தெரியவில்லை? எத்தனை சதவீதம் ப்ராம்மணர்கள்(?!) வெங்காயம் சாப்பிடாதவர்கள்?. வேதம் படிப்பவர்கள் மட்டும்தான் குடுமி வைக்கவேண்டுமா? மற்ற ப்ராம்மணர்களுக்கு சாஸ்த்ரம் விதிவிலக்கு அளித்துள்ளதா?
                    எத்தனை சதவீதம் ப்ராம்மணர்கள் சந்தியாவந்தனம் செய்கிறார்கள்? சந்தியாவந்தனம் செய்யாதவர்கள் ப்ராம்மணர்களா?
                    காசு மட்டும் லக்ஷத்தில் கேட்கிறார்கள் என்கிறார்?! ச்ராத்தத்திற்கா? வேறு எதற்காக இருந்தாலும், வாத்யார்கள் லக்ஷக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று எண்ணுகிறவர்
                    தன் வேலையை விட்டுவிட்டு வாத்யார் வேலைக்கு வரவேண்டியதுதானே? இவர் அப்பா டிமாண்ட் பண்ணி காசு வாங்கி சொத்து சேர்த்து வைக்கவில்லை என்கிற .... கோபத்தை இங்கே வெளிப்படுத்தியுள்ளார் போலும்.
                    இதையும் ஆமோதித்து ஒருவர் லைக் போட்டுள்ளார்.NVS.













                    Maitreyi Venkatesan Well said sir. Nam mathikkavendum. Sambavanni nanraga kudukavendum. Nam than atharikka vendum. Namum sradhathai aga seiavendum
                    Like · Reply · 9 hrs









                    Vijaya Raghavan Aaha NYC
                    Like · Reply · 1 hr









                    Seshadri Sampath Thank you for your detailed description Sir.Agree.
                    Like · Reply · 28 mins


                    எதெற்கெடுத்தாலும் வேதத்தை எடுத்துக்காட்டுபவர்களுக்கு:
                    ஆசார்யாய ப்ரியம் தனம் ஆஹ்ருத்ய என்று ஆசார்யன் (ப்ருஹஸ்பதி) விரும்பும் தனத்தைக் கொடு என்றும் வேதம்தான் சொல்கிறது.

                    மேலும் ஒரு தீர்வு:-
                    தங்கள் இல்லம் எவ்வளவு அசுத்தமானதாக இருந்தாலும் அதற்காகக் கவலைப்படவேண்டாம்
                    அந்த அசுத்துங்களைத் துடைப்பதற்குத்தான் புண்யாஹவாசனம் செய்யப்படுகிறது
                    எனவே ச்ராத்தங்களுக்கான செலவைக் குறைக்க:
                    1. ச்ராத்தங்களை ஆத்திலேயே பண்ணுக
                    2. ச்ராத்தங்களுக்கு உடன்பிறந்தோர் உட்பட யாரையுமே அழைக்கவேண்டாம்
                    எனவே எப்போதும் தங்களுக்கு சமைப்பதைப் போலவே மேலும் இரு ஸ்வாமிகளுக்கு மட்டும்
                    அதிகமாக சமைத்தால் போறும். ச்ராதத்தில் சேர்க்கக்கூடியவற்றை மட்டும்
                    சாதம், பருப்பு, நெய், 1கூட்டு, 1 கரமது, துகையல், வடை, அப்பம், தேன்குழல்
                    பச்சடி, குழும்பு, ரசம், பாயசம், தயிர்
                    இவை மட்டுமே தங்களுக்குத் தெரிந்தவகையில் சமைத்தால் போறும்.
                    அதிகமாக ஸம்பாவனை கேட்கும் பிஸியான ஆத்து வாத்யாரை ச்ராத்தத்துக்குக் கூப்பிடாதீர்கள்
                    தர்பணம், ச்ராத்தம் மட்டுமே பண்ணத் தெரிந்த வாத்யார்கள் நிறைய உள்ளார்கள் அவர்களில்
                    ஒருவரைக் கண்டுபிடித்து வைத்துக்கொண்டு அவரைக்கொண்டு செய்துகொள்ளுங்கள்.

                    3.ஹைதராபாத் போன்ற வாத்யார்கள் அரிதாக உள்ள இடத்தில் எப்படியும் ஒரு ப்ராமின் அசோசியேஷன்
                    இருக்கும் அதன்மூலம் யாரவாது ஒரு வாத்யாரை ச்ராத்தத்திற்கு மட்டும் தயார் செய்துகொள்ளுங்கள்.

                    4. வாத்யார் ஆவதற்கு கற்றுக்கொள்ளத் தயாராக ஒருவர் இருக்கிறார் கற்றுக்கொடுக்க யாருமில்லை
                    என்றால் அடியேனைத் தொடர்புகொள்ளச் செய்யுங்கள் மிக விரைவாகக் கற்றுக்கொடுக்கிறேன்.




                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment


                    • #11
                      Re: SAVE OUR COMMUNITY

                      Even Lord Sriman Narayana could not change the present brahmin generation and after seeing the present day boys and girls he will run away from the scene to a hiding place where Mahalakshmi herself could find him.
                      Next by showing their vulgar money power why should not they spend it for good education of poor brahmin boys.These fellows are to be discorded from our community and non of their own relatives and neighbours should attend to their any household functions. Do we have the guts ?

                      Comment


                      • #12
                        Re: SAVE OUR COMMUNITY

                        ஸ்வாமி நீர் சொன்னது அவ்வளவும் ஏற்கக்கூடியதே. ஆனால் இவை எல்லாவற்றயும் கடைபிடிப்பவர்கள்தான் யார்.

                        Comment


                        • #13
                          Re: SAVE OUR COMMUNITY

                          நம்முடைய கடந்தகால நம் முன்னோர்கள் அனுபவத்தையும் காலத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையில் நம் வர்க்கத்தினர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து அலுவலக வலியுறுத்தலின் அடிப்படை காரணமாகவும் சுய சௌகர்யத்தின் காரணமாகவும் வாத்தியாகளின் தக்ஷிணயை ஆடம்பரமாக கொடுப்பதின் காரணத்திணாலும், ப்ரயோகமா கற்றுக்கொண்டவர்களே வாத்யார் பட்டம் தானகவே கொடுத்துக்கொண்டு வாத்தியார் ஆகிவிடுவது, இல்லாளர்களின் முறைகேடான நடவடிக்கை அதற்கு ஏதுவாக கணவர்களின் ஆதரவு, ஆடம்பர செலவு மற்றும் வாழ்க்கை இப்படி பட்ட வெளிப்படையான உண்மைகளை அழகாக சித்தரித்து நமது குழு வாசகர்களுக்கு வழங்கியமைக்கு எனது ஸாஷ்டாங்க நமஸகாரங்கள்.

                          இந்து தர்மப்படி முறையாக வேதம் படித்த வேத விற்ப்பண்ணற்கள் கூட தற்ப்போது கமிஷன் முறையில் பணம் சம்பாதித்துக் கொண்டிறுக்கிறார்கள். அவர்களைப்போன்றவர்கள் குரு வாத்யார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்து தர்மப்படி முறையாக வேதம் படித்த வேத விற்ப்பண்ணற்கள் முக்கியமான அதிக சம்பாவணை அளிக்கும் வசதி பெற்றவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்வதையே வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்து தர்மப்படி முறையாக வேதம் படித்த ஒரு சில வேத விற்ப்பண்ணற்கள் ப்ராம்மணாள் குறைவாக இருப்பதின் காரணத்தின் அடிப்படையில் வேறுவழியிண்றி ஒருவரின் கரமா விட்டுப்போகக்கூடாது என்ற எண்ணத்தில் வாத்யார் தக்ஷிணை வசதிக்கு அதிகமாக கூற வேண்டிய நிர்பந்தமாக ஏற்ப்படுகிறது.

                          தாங்கள் கூறியபடி உறவு அல்லது நண்பர்களில் தாங்கள் மதிக்கக்கூடிய இருவரை அல்லது தங்கள் மாப்பிள்ளை அல்லது ஸம்பந்தி, மைத்துனர், மாமாபிள்ளை, அத்தை பிள்ளை போன்றவர்களில் இருவரை தொடர்ந்து ஸ்வாமியாக ஏற்பாடு செய்துகொள்ளும் வசதி எங்கும் எப்பொழுதும் அனைவருக்கும் அமைவது இயல்பான நிலையாகாது. இந்து தர்மம் சீர்குலைய முக்கிய காரணம் அதிதிகளாக பாவித்து வரவேண்டிய ப்ராம்மணாள் எண்ணிக்கை குறைவாக உள்ளதின் ஒரே முக்கியமான காரணமே! ஷேஷாத்ரி சம்பத் ஆச்சார்யர்கள் விரும்பும் அளவிற்கு சம்பாவணை கொடுக்க வேண்டும் என்பதை வேதம் கூறுவதாக குறிப்பிட்டிறுக்கிறார். வேதம் சொல்வது அப்படி அல்ல. இந்து தர்மத்தை காப்பாற்றுவது வேதம் படித்து ஓதுபவர்களின் கடமையாக கூறப்பட்டுள்ளது. நான் பரமாச்சார்யாள் கூறியதாக படித்தது என்னவென்றால் இந்து தர்ம கார்யம் செய்து வைப்பவர்கள் சம்பாவணை தானே கேட்டு தனது சந்தோஷத்திற்கு ஏற்றவாறு கேட்டு வாங்கிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு தனது சந்தோஷத்திற்கு ஏற்றவாறு கேட்டு வாங்கிக்கொள்வதனால் பேரம் பேசும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது அதுவே சந்தை நிலவரம் என சோ கால்டு வாத்தியார்கள் கூறுவதும் இயலபாகி அட்டவணை முறைகளை கையாளும் நிலமை துவங்குகிறது என்பது நமக்கே வெட்க்கம்.

                          NVS மாமா விண்ணப்பம் 'வாத்யார்களுக்கு ஆதரவாக எழுதுவதாக எடுத்துக்கொள்ளலாம்' என்ற கருத்து அவருடைய பெருந்தன்மையாகும். NVS மாமா பாரபக்ஷம் இல்லாமல் உண்மையான நீதி கூறியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் NVS மாமாவிடம் ஒரு விண்ணப்பம் --- புரோகிதம் என்பது ஒரு பரம்பரைத் தொழிலாக இருந்து வந்தது உணமையான கருத்துமட்டுமில்லாமல் உண்மையான வஷயமே. தற்க்காலத்தில் புரோகிதம் என்பதை பரம்பரைத் தொழிலாக யாருமே செய்ய ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த துறைக்கு வந்தவர்கள் இதை நேர்மையான தொழிலாகக்கருதி செய்வது அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததையர்களுக்கும் நமது தர்மத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

                          இந்த இணயதளத்தை ஆள்பவர் தாங்களே. சமூகத்தில் உள்ளவர்கள் எண்ணம் - கருத்து -- பாவணை இவைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். கிருஷ்ணமூர்த்தி அவருடைய அனுபவத்தை கருத்து மூலமாக விளக்கியுள்ளார். காலத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து மதங்களும் மாற்றம் கண்டுள்ளது இதில் ப்ராம்மண சமுதாயம் விதிவிலக்கல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அறியாமையினால் உணர்ச்சி வசப்பட்டிறுக்கிறார். அவருடைய எண்ணம் - நோக்கம் நல்லதே ஆனால் முன்வைத்த விதம் தவறு.

                          Comment


                          • #14
                            Re: SAVE OUR COMMUNITY

                            ஶ்ரீ:
                            தயவுசெய்து அடியேன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இதுதான்
                            புரிந்துகொண்டு பதில் எழுதுங்கள்.

                            யார் எந்த வாத்யார் தவறு செய்கிறாரோ, துணிவிருந்தால் நேரடியாக அந்த வாத்யாரிடம் பேசி
                            நீர் செய்வது தவறு என்று அவரைத் தட்டிக்கேளுங்கள். யாரோ தவறு செய்தார் என்று
                            தங்கள் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் (மற்றொரு தரப்பார் இங்கு இல்லாத நிலையில்)
                            இங்கே பதிவு செய்யாதீர்கள்.

                            இங்கே பதிவு செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
                            தங்களுக்குத் தேவை குற்றம் சாட்டுவதா, தீர்வைக் காண்பதா?

                            மோசமானவர்கனை ஆதரிக்காதீர்கள்,
                            நல்லவர்களை ஆதரியுங்கள், நாலுபேருக்கு பரிந்துரை செய்யுங்கள்.
                            நல்ல வாத்யார்களை உருவாக்கத் தேவையான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

                            சில வைதீகர்களின் குமாரர்கள் மிக உயர்ந்த அந்தஸ்த்தில் மிக அதிக சம்பளத்தில்
                            வேலைபார்த்துக்கொண்டு தரமான வைதீக கர்மாக்களைக் பண்ணி வைத்துக்கொண்டிருப்பவர்களும் உள்ளார்கள்.
                            அதனால், லௌகீக உத்யோகத்தில் இருந்தாலும் சற்று நேரம் செலவிடச் செய்து உபயுக்தமான
                            வைதீகத்தையும் கற்றுக்கொள்ளச் செய்யுங்கள், தரமான வைதீகர்கள் நிறையபேர் இருந்தால்
                            தரமற்றது தானாக அழிந்துபோகும்.

                            லௌகீகர்கள் கர்மாக்களில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தால்
                            வாத்யார்களால் ஏமாற்ற முடியாது.
                            பரம்பரையான வைதீகக் குடும்பம் எதுவும் தற்போது அதிகம் கிடையாது.
                            வாத்யார்களைக் குறைகூறிக்கொண்டு கர்மாக்களை விடுவதாக மிரட்டுவதால் பயன் ஏதும் இல்லை
                            ஏனென்றால் வைதீகத்திலும், கோயில் கைங்கர்யங்களிலும் பெரும்பணம் சம்பாதிக்க இயலாது
                            என்ற நிலையில் அதைவிட்டு வெளியேறி லௌகீக வ்ருத்திக்குச் சென்றவர்கள்தான் நம்மில் பலரும்.
                            நாளை அழிந்துபோகப்போகிறோம், கையில் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை என்பது
                            எத்தனைபேருக்குத் தெரியாமல் இருக்கிறது, அதற்காக அவர்கள் அதர்மகாரியத்தை விடுகிறார்களா?
                            எனவே ஒரு வ்ருத்தி இல்லாத ஒழிந்துபோவதால் அதற்காக யாரும் அழுதுகொண்டிருக்கமாட்டார்கள்
                            இன்றைய நிலையில் அகப்பட்டதைச் சுருட்டுவதில்தான் அனைவரும் கவனமாயிருப்பர்.
                            அடுத்தவரைக் குறைகூறுவதில் பொன்னான நேரத்தை செலவழிப்பதை விடுத்து
                            ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்கள்.


                            நாமும் ப்ராமணர்கள்தான் வைதீகத்தை செம்மையாக நடத்தவேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது
                            என உணர்ந்து அனைவரும் அவரவரால் இயன்ற அளவுக்கு கர்மாக்களை கற்று நடத்திக்கொண்டு
                            நடத்திவைக்க முன்வாருங்கள். தர்மமும் வைதீகமும் தழைக்கும். ப்ராமணீயம் தலைநிமிரும்.


                            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                            Encourage your friends to become member of this forum.
                            Best Wishes and Best Regards,
                            Dr.NVS

                            Comment


                            • #15
                              Re: SAVE OUR COMMUNITY

                              ஶ்ரீ:
                              வேத வாத்யார் தங்கள் இல்லத்தில் சாப்பிடுவதுதானே நியாயம் என்று ஒருவர்
                              கேட்டுள்ளார். வேத வாத்யார் தன் அநுஷ்டானத்துக்குத் தக்க சரியான ஆசார
                              அநுஷ்டானம் உள்ளவர்கள் ஆத்தில்தான் சாப்பிட முடியும். மேலும் வாத்யார்
                              பல இடங்களில் சென்று பண்ணி வைப்பவர் அவரால் தீர்தபானம்கூட பண்ணாமல்
                              பண்ணி வைக்க இயலாமல் இருக்கலாம், அதனால்கூட சாப்பிடாமல் இருக்கலாம்
                              ப்ராம்மணார்த்தம் சாப்பிட்டவர்கள் இரவு இருக்கவேண்டிய நியமத்தின்படி இருக்கமுடியாத
                              சந்தர்பம் இருக்கலாம் அதனால் பண்ணிவைக்கிற வாத்யார் சாப்பிடவேண்டும் என்று
                              எதிர்பார்ப்பதில் நியாம் இல்லை.


                              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                              Encourage your friends to become member of this forum.
                              Best Wishes and Best Regards,
                              Dr.NVS

                              Comment

                              Working...
                              X