"ஐயங்கார் " - பெயர்க்காரணம்?
ஐயங்கார் என்று ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு பெயர்வரக் காரணம் என்ன?
முதலில் வைஷ்ணவன் என்பதற்கு பொருள் காணலாம்:
விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக அதாவது பரம்பொருளாகக் கொண்டு வழிபடுபவன் வைஷ்ணவன்.
அந்த வைஷ்ணவன் - விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படிக்கான ஐந்து அங்கங்களை உடைய
பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது 'சமாஷ்ரணத்தை' பெற்றவனாயின் அவன் ஶ்ரீவைஷ்ணவன் ஆவான்.
அந்த ஐந்து அங்கங்கங்கள் என்னென்ன?
பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறியலாம்.
பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:
தாபம் - சூடேற்றப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தால் தோள்களில் பெறும் முத்திரை
புண்ட்ரம் - உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்
நாமம் – ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)
மந்த்ரம் – ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்)
யாகம் – தேவ பூஜை – திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்.
இப்படியாக இந்த ஐந்து அங்கங்களை உடையவர் வைஷ்ணவர் என்பது பரவலாக அறியப்பட்டது.
ஶ்ரீவைஷ்ணவரை - "ஐந்து அங்கர்" என்று அழைத்து வந்தனர்
அது நாளடைவில் மருவி - "ஐஅங்கர்" என்று ஆகியிருக்கவேண்டும்.
இடையில் வரும் உயிரெழுத்தை நீக்க 'அ' காரத்துக்குப் பதிலாக 'ய'காரம் பயன்படுத்தப்பட்டு
"ஐயங்கர்" என்று அழைக்கலாயிற்று.
அது மேலும் மருவி - "ஐயங்கார்" என்று உருப்பெற்றுள்ளது.
நாளடைவில் 'ஐ'க்கும் 'ஜ' வுக்கும் வித்யாஸம் தெரியாமல் "ஜயங்கார்" என்று ஆனாலும் வியப்பதற்கில்லை?!

Comment