Announcement

Collapse
No announcement yet.

மாத்தி யோசி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாத்தி யோசி

    சமீபத்தில் ரஷ்யா மீது ஒரு பெரிய விண்கல் தூள் தூளாகி விழுந்தது நினைவிலிருக்கலாம். விண்கல்லை உடைத்தது நம்மை விட புத்திசாலியான வேற்று கிரக வாசியாக இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகளே கருதுகின்றனர்
    ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சில மலைகள் பறந்து சென்றோது இந்திரன் அவைகளின் இறக்கைகளை வெட்டினான் என்று அறிகிறோம்.



    இரண்டிற்கும் ஒற்றுமை இருப்பதாக அடியேன் கருதுகிறேன்.
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

    ......


    அடுத்து டைனோசர்கள் பற்றி ஒரு டிவி சேனலில் பார்த்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய விண்கல் பூமி மேல் விழுந்தபோது
    டைநோசர்கள் மற்றும் எல்லா உயிர் இனங்களும் பூமியில் அழிந்து விட்டன. அப்படி இருக்க மீண்டும் எப்படி உயிர் இனங்கள் பூமியில் வந்தன என்று ஒரு கேள்வி எழுப்பினர்.அதற்கும் இது போன்றே, நம்மை விட புத்திசாலியான வேற்று கிரக வாசிகள் இங்கிருந்து DNA க்களை பத்திரமாக எடுத்து வைத்து கொண்டு, பல நூற்றாண்டுகள் கழித்து அந்த DNA க்களை மீண்டும் பூமியில் கொண்டு வந்து வைத்து உயிர்களை உருவாக்கி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.(வேற்று கிரக வாசிகளுக்கு பூமி ஒரு விளையாட்டு தளமா ?)


    இதுவும் நம் புராணங்களில் மஹா விஷ்ணு எல்லா உயிர்களையும் பிரளய காலத்தில் தன வயிற்றில் வைத்து கொண்டு திரும்பவும் உண்டாக்குகிறான் என்று சொல்வதைப போல் உள்ளது அல்லவா ?

    உங்கள் கருத்து என்ன ?

    3
    Fully Agree
    100.00%
    3
    Do not agree
    0.00%
    0
    May be
    0.00%
    0
Working...
X