Re: Article: எது கல்யாணம்? 'மாங்கல்யம் தந்துநா" வா?!
ஸ்ரீ:
இந்தப் பதிவு அடியேனுடைய பார்வைக்கு இன்றுதான் கிடைத்தது.
பதில் --- மாங்கல்யதாரணம் என்பது ப்ரயோத்தில் இல்லாத ஒரு விஷயம் என்பதால் அதை தேவையற்றது அல்லது பயனற்றது
என ஒதுக்கிவிட முடியாது.
“உண்மையும் - நன்மையும் உள்ளவை நிலைத்து நிற்கும்” - என ஒரு பழமொழி போன்ற சாஸ்த்திரக் கூற்று உள்ளது.
அந்த வகையில் இடையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், மாங்கல்யத்தால் அநேக நன்மை உள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அதனால் வரும் தீமை என்று எதுவும் தெரியவில்லை.
ஆனால் அது அழுக்கடைந்து ஒரு அருவருப்பான நிலைக்கு வரும்போது அதை அணிபவருக்கு
சிரமமாக இருக்கலாம்.
இங்கே கவனிக்கவேண்டியது,
மாங்கல்யம் என்பது எது?
ஒரு மஞ்சள் கயிற்றில் உள்ள ஸம்ப்ரதாயப்படிக்கான இலச்சினையுடன் கூடிய ஒரு தங்க வில்லை தானே எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது?!
அதைத் தாங்கி கழுத்தில் அணியக்கூடிய கயிற்றுக்கு மாங்கல்ய சூத்ரம் என்று பெயர்.
சூத்ரம் என்றாலே கயிறு என்றுதான் பொருள்.
இங்கே மாங்கல்யமே ஒரு தங்க வில்லையால் ஆனது எனும்போது,
வசதி உள்ளவர்கள் தங்கள் வசதிக்காக ஒரு தங்கக் கயிற்றிலேயே கோர்த்து அணிந்து கொள்வதால் தவறு ஏதும் இல்லை.
எந்த விஷயத்தையும் புதிதாகப் பார்க்கும்போது ஏதோ தவறு போலத் தோன்றும்.
உதாரணமாக ஆண், பெண் அனைவருமே எல்லாக் காலத்திலும் கச்சம் வைத்த,
தைக்கப்படாத ஆடைகளைத்தான் அணிந்து வந்தார்கள்.
தற்போது பெண்கள் சுடிதார் உடுத்துவதும் ஆண்கள் பேண்ட் போன்றவை உடுத்துவதும்
பெரும்பகுதி பழக்கத்தில் வந்துவிட்டது. அதனால் அது நமக்கு வித்யாசமாகத் தெரிவதில்லை.
அதுபோலவே இந்த மாங்கல்ய சூத்ரமும் சிறிது சிறிதா தங்கச் சங்கிலியில் அணிந்துகொள்ளும் நிலை தோன்றும்
எதிர்காலத்தில் அது தவறானதாகத் தோன்றாது.
மாற்றம் ஒன்றே நிலையானது.
nvs
Originally posted by Tamil Rasikan
View Post

Comment