Announcement

Collapse
No announcement yet.

why we offer vazhaipazham to deities?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • why we offer vazhaipazham to deities?

    A friend of mine ha sent this info. sounds logical. any other comments?
    Regards
    Srinivasan

    -- தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?
    எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.

  • #2
    Re: why we offer vazhaipazham to deities?

    இப்படி ஓர் காரணம் என்பது எனக்கு புதிது. நான் கேட்டதோ படித்ததோ இல்லை . இறைவனுக்கு அன்புகலந்த உண்மையான பக்தி யுடன் எதை படைத்தாலும் அது பிரசாதமே . மூதாட்டி சபரி பழங்களை ருசித்துப் பார்த்து ஸ்ரீ ராமனுக்கு அளித்தாள், ஸ்ரீ ஆண்டாள் மலர் மாலைகளை சூடிப் பார்த்து கண்ணனுக்கு அழகு செய்தாள் , மற்றும் வேடன் கண்ணப்பன் தான் சாப்பிடும் புலால் துண்டுகளை சிவ பெருமானுக்கு படைத்தான் . இவைகளை எல்லாம் ஆண்டவன் மறுக்கவில்லை. ஆக நமது சக்திக்கேற்ப அன்புடன் அளிக்கும் எந்த உணவையும் இறைவன் ஏற்பான் என்பதே எனது நம்பிக்கை .
    தங்கள் நலம்கோரும்
    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு

    Comment


    • #3
      Re: why we offer vazhaipazham to deities?

      இரண்டு பேரும் மிகவும் நல்ல விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்! நன்றி!

      Comment


      • #4
        Re: why we offer vazhaipazham to deities?

        மேலும், இறைவன் நம்மிடம் எதையும் பிரதிபலனாக எதிர்பார்க்கவில்லை நல் எண்ணங்களோடு கூடிய வாழ்க்கையும் நமது தூய்மையான பக்தியைத்தான் வேண்டுகிறான். கீதையில் கண்ணன் அருளிய இச்சொற்களே ஆதாரம் :

        பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி |
        ததஹம் பக்த்யுபஹ்ருதமஷ்னோமி ப்ரயதாத்மன: || 9-26 ||

        இலையேனும் பூவேனும் கனியேனும் நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான். (9-26 ) [மகாகவி பாரதியார் உரை]

        யார் எனக்கு பக்தியுடன் இலையோ, பூவோ, பழமோ, தீர்த்தமோ தூய்மையுடன் கொடுக்கிறானோ அதை நான் புசிக்கிறேன்.
        அன்புடன்
        ப்ரஹ்மண்யன்
        பெங்களூரு

        Comment

        Working...
        X