Announcement

Collapse
No announcement yet.

Fixing the time for pongal panai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Fixing the time for pongal panai

    Swamin
    Dasan srinivasan Pranams

    what are the criteria for fixing the time for pongal panai. This is more people abroad having different timings

    Dasan Srinivasan

  • #2
    Re: Fixing the time for pongal panai

    ஶ்ரீ:
    பொங்கல் பிறக்கும் நாள், நக்ஷத்திரம், கிழமை இவற்றை மாற்ற முடியாது.
    அதனால் யோகம் மரணயோகமாகக் கூட அமையாலாம்.
    முன்பே பலமுறை விளக்கியுள்ளதுபோல் கர்மாக்கள் ஆஜ்ஞா கைங்கர்யம், அநுஜ்ஞா கைங்கர்யம்
    என இருவகைப்படும். சாஸ்த்ரப்படி செய்தே தீரவேண்டும், செய்யாவிட்டால் பாபம் - தோஷம் என்பவை ஆஜ்ஞா கைங்கர்யம் ஆகும்.
    செய்வதால் எம்பெருமானை, தேவதைகளை மகிழச்செய்யலாம், அநுக்ரஹம் பெறலாம் என்பவை அநுஜ்ஞா கைங்கர்யம் ஆகும்.
    பொங்கல்பானை வைத்து வழிபடுவது என்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
    எனவே பொங்கல் பானை வைக்கும் நேரத்தை அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கும், சக்திக்கும் சூழ்நிலைக்கும், எதிர்பார்க்கும் பலனுக்கும் தக்கவாறு
    மாற்றியமைத்துக்கொள்வதால் ஒன்றும் தவறில்லை.

    சாஸ்திரக்காரர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எதைவேண்டுமானாலும் கூறி அதற்கு ஒரு ப்ரமாணமும் அளிக்கக்கூடியவர்கள்.
    இன்றைய ஊடகவியலாளர்கள் போலவே இன்றைய சாஸ்திர விளக்கம் கூறுபவர்களும் உள்ளார்கள்.
    ஒரு வாக்கியத்திலிருந்து ஒருசில வார்த்தைகளை விடுத்து வாசித்தால் அர்த்தம் மாறி தொனிக்கும்.


    இரவு 9 மணிக்கு மாதம் பிறக்கும் நாட்களில் நாம் அதுவரை காந்திருந்து மாதப்பிறப்பு தர்பணம் பண்ணவதில்லை
    ஏதோ ஓரளவு புண்ணியகாலம் உள்ள நேரத்தில், சிலர் மாத்யாஹ்னம் வைர பொறுத்திருந்து தர்பணம் செய்கிறோம்.
    அதுபோலவே இதுவும்.
    இந்த வருடம் ஏதோ மாதம் 11 மணிக்குப் பிறக்கிறது. 11 - 12 புதன் ஹோரை, மீன லக்னம் - 7ல் குரு - நேரம் நன்றாகத்தான் இருக்கிறது.
    இதையும் பயன்படுத்தலாம். அல்லது கீழுள்ள ஆற்காட்டுக்காரரின் பரிந்துரையையும் பின்பற்றலாம்.
    Click image for larger version

Name:	pongalpaanai-time-14-01-2017.jpg
Views:	1
Size:	145.4 KB
ID:	34003


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X