ஒரு பொதுவான யோசனை/கருத்து ஸ்வாமின் நமது சபையில் ஏதோ கொஞ்சம் பேர் தவிர மற்றைய ஏனையோரும் வாராதோர் பட்டியலில் உள்ளனர். அவர்கள் எந்தவித சபை நடவடிக்கைகளிலும் கலந்துகொல்வதில்லை இருந்தும் அவர்களுக்கு மேலும் மேலும் புள்ளிகள் அதிகரித்துக்கொண்டேபோகிறது தங்களுக்கு தெரிந்ததே.அதனால் வாரம் ஒரு முறை சபை யில் தங்கள் இடுகைகளை அவசியம் தெரிவிக்கவேண்டும் என்று ஒரு சாதாரனமான .விதிமுறையை கொண்டுவரக்கூடாதா. அதனால் அவர்களுக்கு எந்த விதமான இழப்பும் இல்லையே. சரி . அப்படி இடுகை சமர்பிதத்தாவர்களுக்கு எதற்கு புள்ளிகள்? அதை நீக்கிவிடலாமே..இப்படியே போனால் நடவடிக்கைகளில் பங்கு பெறுவோரும் தகல் பங்கினை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? யோசனை செய்யுங்கள்.அவ்வளவே...!!!!??????
Announcement
Collapse
No announcement yet.
A humble suggestion
Collapse
X
-
Re: A humble suggestion
ஶ்ரீ:
ஸ்வாமின்,
நிர்பந்தித்தோ, நிபந்தனைகள் விதித்தோ, வற்புறுத்தியோ யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது ஸ்வாமின்.
வராமல் இருப்பது, வருவது, பார்பது, இடுகை ஸமர்ப்பிப்பது, இடுகைக்கு பதில் இடுகை விடுப்பது இவை அனைத்துமே
அவரவர் விருப்பம் ஸ்வாமின்.
புள்ளிகள் ஏறுவதாலோ, இறங்குவதாலோ என்ன லாபம் என்ன நஷ்டம்?
அது ஒரு தமாஷ்!
இடுகைக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் புள்ளிகள்.
வெறுமனே அதையும், இதையும் திறந்து திறந்து பார்த்தல், நெடுநேரம் போரத்தில் தங்கி இருத்தல்,
பதிவு செய்த நாளிலிருந்து இத்தனை நாட்களாதல் என பல விதங்களில் புள்ளிகள் ஏறிக்கொண்டே இருக்கும்.
அந்த புள்ளி வழங்குதல் என்பது ஒரு சாப்ட்வேர் (ப்ளக்கின்) அதில் அதை நிர்மாணித்தவர் இஷ்டப்படி
புள்ளிகளை உருவாக்கியுள்ளார்.
அடியேனைப் பொறுத்தவரை இந்த இயைதளத்தையே முடக்கவல்ல அல்லது நூற்றுக்கணக்கில்
அர்த்தமற்ற அசிங்கமான இடுகைகளை ஆட்டோமேடிக்காக சேர்க்கவல்ல ஹேக்கர்களிடமிருந்து
இணையத்தை ரக்ஷித்தல் ஒன்றுதான் கட்டுப்பாடு மற்றபடி யாருக்கும் எந்தக்கட்டுப்பாடும் கிடையாது.
ஆபாசம், ஆபத்து இவற்றைத் தவிர்த்தாலே போறும், வேறு எந்தக்கட்டுப்பாடும் யாருக்கும் தேவையில்லை.
"மலர்கள் மலர்வதும், பழங்கள் பழுப்பதும், வானம் பொழிவதும்" என எதுவும் யாரையும் எதிர்பார்த்து நிகழ்வதில்லை.
"நூறு ஆண்டுகள் வரை யாரும் இளைப்பார வராவிட்டாலும், மரம் நிழலைத் தந்துகொண்டுதான் இருக்கும்" அது அதன் ஸ்வபாவம்.
அதுபோல் நாம் செய்வதை முடிந்தவரை செய்வோம், வந்தால் அவர்களுக்கு லாபம்,
வராவிட்டால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை.
அடியேனுக்கும் முதுமை வந்துவிட்டது, சீக்கிரம் கடையை மூட சந்தர்ப்பம் கிடைத்தால் அதுவும் எம்பெருமான் க்ருபைதானே.
அடியேன் ஒருவருக்கும் அழைப்பு அனுப்பியதில்லை, ஆனால் 13500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த ஒரு வாரத்தில் பார்வையிட்டோர் பட்டியல் கீழே தந்துள்ளேன் இதுவே எவ்வளவோ நிறைவாகத்தான் உள்ளது.
குறையே நோக்கவேண்டாம், நிறையை மட்டும் பார்ப்போம் என்பது அடியேன் அபிப்ராயம்.
தாஸன்,
என்.வி.எஸ்
Average 903 338 297 41 653 268 242 26 1,289 296 257 39 850 363 315 48 734 275 244 31 729 316 274 42 1,045 418 367 51 870 384 347 37 1,049 379 328 51
Re: A humble suggestion
Dear Swami
Yours selfless seva is motivating and befitting a large number of people who are deprived of our cultures and customs. Beneficiaries are the members and their family and friends.
I personally learnt a lot and got more inclination towards bhakthi and anmeegam.
We all pray the very best and God to shower His blessings.
Kindly accept our prayers and wishes
Namaskaram
HRK
Comment
Re: A humble suggestion
Originally posted by ramakrishna iyer View PostDear Swami
Yours selfless seva is motivating and befitting a large number of people who are deprived of our cultures and customs. Beneficiaries are the members and their family and friends.
I personally learnt a lot and got more inclination towards bhakthi and anmeegam.
We all pray the very best and God to shower His blessings.
Kindly accept our prayers and wishes
Namaskaram
HRK
ஶ்ரீ:
மிக மிக நன்றி ஸ்வாமின்,
இன்று அடியேன் வாங்கிய பி.எச்.டி (பட்டமளிப்புவிழா) பட்டம் வாங்கியபோது உணர்ச்சியற்ற ஜடமாகத்தான் வாங்கினேன்,
ஆனால் தங்கள் இந்த வார்த்தைகள் ஆயிரம் மடங்கு நெகிழச் செய்கிறது.
"நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடி வரும் புகழ் எதற்கு?
உன்னுடைய(ஈயாதவன்) வசந்தத்திலே ஒன்றுமில்லை ரசிப்பதற்கு" - என்று ஒரு கவிஞன் மிக அழகாகப் பாடியது நினைவிற்கு வருகிறது.
நன்றி,
என்.வி.எஸ்
Comment
Re: A humble suggestion
Dear shree, I am sorry why Sri Ramakrishna iyer choose to post his thread of yesterday under my folder "A humble suggestion" instead of posting it separately. Members may think that I am against Mr.NVS swamin whereas his services are welcome only by others. I am an old guard always supporting Sri.NVS and our relationship as guru and shisysa never went out of way.
Comment
Re: A humble suggestion
Sri:
Dear Sri.P.S.N Swamin,
You are thinking that people are wrongly understood about you, but not like that.
Kindly see the positive side only from any matter and ignore the other side.
Yes, you are the guru and I am the shishyan (but குருவுக்கு மிஞ்சின சிஷ்யன்)
Again I wish to point out, do not try to put barriers for members on any of their activity,
most of them don't know, where to start, how to navigate to the desired location.
And this is the major reason for most of the members not posting anything.
அந்த ஸ்வாமியினுடைய பதிவில் அடியேனைப் பாராட்டி எழுதியுள்ளாரே தவிர
தேவரீரை கிஞ்சித்தும் குறைவாக எழுத முயற்சிகூட செய்யவில்லை.
தேவரீருடைய கேள்விக்கு அல்லது பரிந்துரைக்கு அடியேனுடைய பதிலைப் படித்துப்பார்த்தில்
அந்த ஸ்வாமிக்கு ஏதோ நல்ல அபிப்ராயம் தோன்றியுள்ளது, அதை அந்த க்ஷணத்தில்
அங்கேயே வெளிப்படுத்தியுள்ளார் அவ்வளவுதான்.
ஒரு யோசனை : தங்களது இடுகைக்குக்கீழ் யாரும் பதில் இடுகை சேர்க்கக்கூடாது என்று தாங்கள் விரும்பினால்
அந்த த்ரட்டை (திரியை) தாங்களே க்ளோஸ் செய்துவிடலாம். போரத்தில் உள்ள எந்த ஒரு த்ரட்டும்
ஓபன் திரட்தான், உறுப்பினராக உள்ள எவரும் அதில் தாங்கள் விரும்பிய எண்ணத்தைப் பதிவு செய்யலாம் என்பதே
போரத்தின் நடைமுறை.
தவறாக நினைக்கவேண்டாம் ஒரு உதாரணத்திற்காக எழுதுகிறேன் : இந்த வெப்சைட்டின் உரிமையாளர்,
"என்னுடைய வெப்சைட் போரத்தில் நீர் எப்படி இஷ்டத்துக்கு எழுதலாம்" என அடியேனைக் கேட்டால் எப்படியிருக்கும்.
இதேபோன்றதொரு கருத்துவேறுபாடு காரணமாகவே திரு.பத்மனாபன் அவர்கள் (அதிகம் போஸ்டிங் செய்தவர்)
இடுகை செய்வதை நிறுத்திவிட்டார்.
"அழ அழப் பேசுவார் உற்றார்,
இனிக்க இனிக்க பேசுபவர் பிறத்தி மனுஷா" ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா!
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
Re: A humble suggestion
எனது மதிப்புக்குரிய ஸ்ரீ NVS அவர்களுக்கு நமஸ்காரம்,
இந்த தலைப்பில் உள்ள விவாதத்தில் தலையிடலாமா என்று மிக யோசித்தே எழுதுகிறேன். எண்ணங்களில் நான் ஓர் (conservative) பழமைவாதி ஆகவே எனது கருத்தும் சற்று பழையதாகவே இருக்கும்.
நான் பல இணையதளங்களில், குறிப்பாக பிராமண சமூக இணைய தளங்களில், அங்கத்தினராக இருந்து விவாதங்களில் கலந்து கொள்கிறேன். இது ஒரு பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் இப்பிறப்பில் இறைவன் அளித்த காலத்தில் எனது அறிவு விரிவடையும் தாகத்தையும் பூர்த்தி செய்கிறது. வயதுமுதிர்ந்த இக்காலத்தில் கணினி ஓர் வரப்ரசாதமென எண்ணுகிறேன். எனது கணிப்பில் தாங்கள் பொறுப்பேற்று நடத்திவரும் இந்த இணையத்தளம் மிகவும் உயர்ந்த விஷயங்களை கொடுத்துவருவது மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. நமது ஆன்மீக விஷயங்களை பற்றி எழும் விவாதங்களில் எல்லா அங்கத்தினரும் பங்குபெற்று எழுதுவது சற்று கடினமே.ஆனால் பல அங்கத்தினர்கள் படித்து பயன்பெறுகிறார்கள் என்பதே உண்மை. தாங்கள் பொறுப்பேற்று சிரமத்தை பார்க்காமல் இவ்விணைய தளத்தை அற்புதமாக நடத்திவருகிறீர்கள் .இப்பணி தொடர எல்லாம்வல்ல இறைவன் ஸ்ரீமத் நாராயணன் தங்களுக்கு நீண்ட ஆயுளை அருள வேண்டுகிறேன் .
தங்கள் நலங்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூருLast edited by Brahmanyan; 03-04-15, 21:29.
Comment
Re: A humble suggestion
ஶ்ரீ:
மதிப்பிற்கும் நட்பிற்கும் இனிய திரு.ப்ரஹ்மண்யன் அவர்கட்கு,
தங்கள் அன்பிற்கும், மதிப்பிற்கும் மிக்க நன்றி.
அடியேன் பழமைவாதியுமல்ல, புதுமைவாதியும் அல்ல, நன்மைவாதி.
மிக மிக நீண்ட நாட்களாகவே அடியேனுக்கும் ஒரு அபிப்ராயம் உண்டு.
அதாவது "சுயநலமற்ற செய்கை - செயல்பாடு என்கிற ஒன்றே இவ்வுலக வாழ்க்கையில் கிடையாது"
என்பதே அக்கருத்தாகும்.
நாம் நல்ல விதத்தில் ஈட்டிய பொருளாயினும், எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு நபரின்
தேவைக்கு உதவிசெய்தால் கூட அதிலும் நமக்கு மனத்திருப்தி என்கிற ஒன்று சுயநலமாகத் தேறுகிறது.
மேலும், ஒருவன் பசிக்காக காலையில் வந்து நிற்கிறான் அவனுக்கு ஒரு 5 அல்லது 10ரூபாயைத் தானமாகக்
கொடுக்கிறோம் எனக்கொள்வோம், அவனே மீண்டும் மத்யாஹ்ன சாப்பாட்டுக்கு நம்வீட்டு வந்து நின்றால்
நம் செயல்பாடு என்னவாக இருக்கும்?
வேளா வேளைக்கு உனக்கு சாப்பாட்டுக்குக் கொடுக்கமுடியுமா என (3 அல்லது 4காவது முறையாவது) சொல்ல
நேரிடும். அதுவே புதியவனுக்குக் கொடுப்போம். கொடுப்பதில் இருவரிடமும் வேறுபாடு நோக்கச் செய்வது எது?
இப்படி நிறைய யோசித்துப்பார்த்தில் நம் ஒவ்வொரு செயலிலும் சுயநலம் எனும் ஒரு மெல்லிய ஈடுபாடு
இருக்கத்தான் செய்கிறது என்பதை உணரமுடியும்.
எனவே, அடியேனைப்பொறுத்தவரை இந்த இணையதளத்தை நடத்துவதால் பொருட்செலவு, நேரவிரயம் ஆனாலும்,
தொடர்ந்து நடத்தக் காரணம் (சுயநலம்) இதுதான்:
"Idle brain is a devils workshop" என்று ஒரு பழமொழி சிறுவயதிலேயே மனதில் பதிந்தது.
இதனால் நாள் முழுமைக்கும் ஏதாவது உருப்படியான விதத்திலேயே கழிக்கும் விதமாக
நம் செயல்பாட்டை வகுத்துக்கொள்ளவேண்டும் என்று நடைமுறைப்படுத்திக்கொண்டுவிட்டேன்.
10வயது முதலே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது, பள்ளி இறுதி முடிப்பதற்குள்
"பொன்னியின் செல்வன்" போன்ற நான்கு பெரும் பாகங்களைக்கொண்ட கதைகளைப் பலமுறை
வாசித்து முடித்துவிட்டேன்.
"சாண்டில்யனின்" கடல்புறா, ராஜமுத்திரை, ராஜதிலகம், யவனராணி இப்படிப் பல படைப்புகளையும்
விழுந்து விழுந்து படிப்பேன். தமிழ்வாணனின் "துப்பறியும் சங்கர்லால்" போன்ற புத்தகங்களையும் படிப்பேன்.
கீரோ எழுதிய கைரேகை சாஸ்திரங்கள், கடலங்குடி சாஸ்திரிகள் எழுதிய ப்ருஹத் ஸம்ஹிதை, ப்ருஹத்ஜாதகம்,
காலவிதானம் போன்ற பெரும்பெரும் புத்தகங்களையும் ஒரு சில ஆங்கில நாவல்களையும் விட்டுவைக்கவில்லை.
இதனால் கெட்ட நண்பர்களையும், கெட்ட பழக்கங்களை அண்டவிடாமல் என்னைக் காத்துக்கொண்டேன்.
ஆனால் 11 வயதில் தந்தையையும், 16 வயதில் தாயையும் இழந்ததால், பொருளாதார வசதியின்மையால்
படிப்பில் ஏதும் செய்ய இயலாமையால், வயிற்றுப்பிழைப்புக்காக கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்து வந்தேன்.
எவ்வளவு உழைத்தும், குமாரர்கள் தலையெடுக்கும்வரை பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர இயலவில்லை.
இந்நிலையில் கொஞ்சம் நஞ்சம் உள்ள பொருள் பெயர் இவையும் கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களால் அழிந்துவிடப்போகிறது
என்கிற பயம் காரணமாக சுயநலமாக ஏற்படுத்திக்கொண்ட பொழுதுபோக்கே இந்த இணையதள ஸேவைகள்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
Re: A humble suggestion
எனது மதிப்புக்குரிய ஸ்ரீ NVS அவர்களுக்கு நமஸ்காரம்,
தங்கள் பதில் மிகவும் ஆத்மார்த்தமாக உள்ளது. ஒவ்வொருவரும் தனது வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய
உயர்ந்த வழியினை மிக அழகாக கூறியுள்ளீர்கள். நாம் "நல்ல மனிதனாக" வாழ்வதே ஆத்மவிசாரனையின் முதல் படி எனக்கூறினார் நீண்டநாள் வாழ்ந்த யோகி ஸ்ரீ சிவபுரி பாபா என அழைக்கப்பட்ட மகான் ஸ்ரீ கோவிந்தானந்த பாரதி.
தங்கள் நலங்கோரும் ,
ப்ரஹ் மண்யன்
பெங்களுரு.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 16:20.
Working...
X
Comment