Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 103/104 : வேங்கடமே மகராலயம் கடĪ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 103/104 : வேங்கடமே மகராலயம் கடĪ




    பாடும் மதுகரமும் , பச்சைத் தழைக் குடிலின்
    வேடும் , மணம் மருவும் வேங்கடமே - நீடு
    மகராலயங்கடந்தார் , வாழ வசுதேவர்க்கு
    மகராலயங்கடந்தார் வாழ்வு




    மகராலயங்கடந்தார் - மகராலயம் + கடந்தார்
    மகராலயங்கடந்தார் - மகர் + ஆலயங்கள் + தந்தார்


    {div6]பாடும் மதுகரமும் இசை போல ரீங்கரிக்கும் வண்டுகள்
    மணம் மருவும் மலர்களின் வாசனை உடைய இடமும் ,
    பச்சைத் தழைக் குடிலின் பசுமையான தழைகளால் செய்யப்பட குடிசைகளில்
    வேடும் வேடர்கள்
    மணம் மருவும் திருமணம் செய்யும் இடமும் ஆன
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நீடு மகராலயம் கடந்தார் நீண்ட சமுத்திரத்தைத் தாண்டியவரும் ,
    வாழ் வசுதேவர்க்கு மகர் வாழும் வசுதேவரின் புதல்வனும் ,
    ஆலயங்கள் தந்தார் கோயில்களில் இருப்பவருமான திருமாலின்
    வாழ்வு வாழும் இடம் ஆகும்
    [/div6]


    V.Sridhar

Working...
X