Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 102/104 : வேங்கடமே நாகத்து அணைī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 102/104 : வேங்கடமே நாகத்து அணைī




    எவ்விடமும் ஆறு தோய்ந்து எல்லோரும் , பல் பாம்பும்
    வெவ்விடரின் நீங்கி எழும் வேங்கடமே - தெவ்விடை ஏழ்
    அட்டவன் , நாகத்து அணையான் , ஆதி மறை நூல் மார்க்கம்
    விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு




    எல்லோரும் எல்லா மக்களும்
    எவ்விடமும் ஆறு தோய்ந்து பல இடங்களில் உள்ள ஆறுகளில் மூழ்கி
    வெவ்விடரின் நீங்கி எழும் கொடிய பிறவித் துயரிலிருந்து விடுபடும் இடமும் ,
    பல் பாம்பும் பல பாம்புகள்
    வெவ்விடரின் வெவ்விய மலை வெடிப்புகளிலிருந்து
    நீங்கி எழும் வெளி வரும் இடமும் ஆன
    வேங்கடமே திருவேங்கட மலையே
    தெவ்விடை ஏழ் அட்டவன் கோபமான ஏழு காளைகளை அடக்கியவனும் ,
    நாகத்து அணையான் ஆதி சேஷனில் பள்ளி கொண்டவனும்
    ஆதி மறை நூல் பழைய வேத சாஸ்திரங்களின்
    மார்க்கம் விட்டவன் நல்வழியிலிருந்து விலகியவனுடைய
    ஆகத்து அணையான் மனதில் சேராதவனுமான திருமாலின்
    வெற்பு திருமலை ஆகும்





    --
    V.Sridhar
Working...
X