Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 098/104 : வேங்கடமே நாந்தகனார் ச

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 098/104 : வேங்கடமே நாந்தகனார் ச




    கொய்யும் மலர்ச் சோலைக் கொக்கும் , பிணியாளர்
    மெய்யும் , வடுத்தவிரும் வேங்கடமே - நையும்
    சனநாந்தகனார் , தலையிலி தோள் சாய்த்த
    சினநாந்தகனார் , சிலம்பு




    வடுத்தவிரும் - வடுத்து + அவிரும்
    வடுத்தவிரும் - வடு + தவிரும்
    சனநாந்தகனார் - சனன + அந்தகனார்
    சினநாந்தகனார் - சின + நாந்தகனார்




    கொய்யும் மலர் பறிக்கக் கூடிய மலர்களை உடைய
    சோலைக் கொக்கும் சோலைகளில் உள்ள மா மரம்
    வடுத்து அவிரும் பிஞ்சு விட்டு வளரும் இடமும் ,
    பிணியாளர் மெய்யும் நோயாளிகளின் உடலில்
    வடு தவிரும் உண்டான தழும்புகளை நீங்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நையும் சனன வருந்துவதற்கு காரணமான பிறப்பை
    அந்தகனார் ஒழிப்பவரும் ,
    தலையிலி தோள் தலை இல்லாத கபந்தனின் தோள்களை
    சாய்த்த சின வெட்டிய கோபமுடையவரும்
    நாந்தகனார் நந்தகம் எனும் வாளை உடையவருமான திருமாலின்
    சிலம்பு திருமலை ஆகும்



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-04-14, 11:45.
Working...
X