Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 097/104 : வேங்கடமே கார் இல் அலங்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 097/104 : வேங்கடமே கார் இல் அலங்



    சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் , கோங்கினமும் ,
    மேலஞ்சுவர்க்கம் ஆர் வேங்கடமே - கோலம் சேர்
    மாரிலலங்காரத்தார் , மற்றும் பல் பூண் அணிந்த
    காரிலலங்காரத்தார் , காப்பு


    மாரிலலங்காரத்தார் - மாரில் + அலங்கு + ஆரத்தார்
    காரிலலங்காரத்தார் - கார் + இல் + அலங்காரத்தார்





    சேல் அஞ்சும் கண் மீன்கள் அஞ்சும் அழகுடைய கண்கள் கொண்ட
    மடவார் பென்களின்
    தேம் குழலும் நறுமணம் உள்ள கூந்தல்
    மேல் அஞ்சு வர்க்கம் ஆர்மேனமையான ஐந்து வகை கொண்ட இடமும் ,
    கோங்கினமும் கோங்கு மரங்களின் தொகுதி , உயரத்தால்
    மேல் அம் சுவர்க்கம் ஆர் மேலே உள்ள அழகிய சுவர்க்கத்தைத் தொடும் இடமும் ஆன
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    கோலம் சேர் அழகு பொருந்திய
    மாரில் அலங்கு ஆரத்தார் திரு மார்பில் அசையும் மாலைகளை உடையவரும் ,
    மற்றும் பல் பூண் அணிந்த வேறு பல ஆபரணங்கள் அணிந்தவரும் ,
    காரில் அலங்காரத்தார் கார் மேகம் போல அழகுள்ளவருமான திருமால்
    காப்பு உயிர்களைப் பாதுகாக்கும் இடம் ஆகும்



    V.Sridhar




  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 097/104 : வேங்கடமே கார் இல் அலங&a

    "மேலஞ்சுவர்க்கம் ஆர் "
    மாரிலலங்காரத்தார் - மாரில் + அலங்கு + ஆரத்தார்
    காரிலலங்காரத்தார் - கார் + இல் + அலங்காரத்தார்

    என்ன ஒரு அழகான கையாளல் அழகு தமிழ் பழகு தமிழ் பைந்தமிழ்


    Comment

    Working...
    X