Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 096/104 : வேங்கடமே பரமானந்தத்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 096/104 : வேங்கடமே பரமானந்தத்த




    வஞ்ச மடித்திருப்பார் வாக்கும் , கலைக்கோடும்
    விஞ்ச மடித்திருக்கார் வேங்கடமே - கஞ்சப் -
    பிரமானந்தத்தான் பிரபஞ்ச மாய்த்த
    பரமானந்தத்தான் பதி




    வஞ்ச மடித்திருப்பார் - வஞ்சம் + மடித்து + இருப்பார்
    விஞ்ச மடித்திருக்கார் - விஞ்ச + மடித்த + இருக்கு + ஆர்
    விஞ்ச மடித்திருக்கார் - விஞ்ச + மடி + திருக்கு + ஆர்
    பிரமானந்தத்தான் - பிரமா + நந்த + தான்
    பரமானந்தத்தான் - பரம + ஆனந்தத்தான்




    வஞ்சம் மடித்து இருப்பார் வஞ்சனையை ஒழித்த அந்தணர்களின்
    வாக்கும் வாய்
    விஞ்ச மடித்து இருக்கு ஆர் மிகுதியாக மடித்து மடித்து சொல்லப்படும் வேதம் நிரம்பியதும் ,
    கலைக்கோடும் கலை மான்கள் கொம்புகளின்
    விஞ்ச மடி திருக்கு ஆர் மிகுதியாக வளைவு கொண்ட முறுக்கு உள்ளதுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    கஞ்சப் பிரமா நந்த தாமரையில் உள்ள பிரமனும் அழிய
    தான் பிரபஞ்சம் மாய்த்த உலகங்களை அழித்த ,
    பரம ஆனந்தத்தான் சிறந்த ஆனந்தத்தை உடைய திருமாலில்
    பதி ஊர் ஆகும்



    --
    V.Sridhar

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 096/104 : வேங்கடமே பரமானந்தத்&#2

    வார்த்தை ஜாலம் வெகுஜோர்

    Comment

    Working...
    X