6. திரு வேங்கட மாலை 079/104 : வேங்கடமே அரவம் பூண்டார்க்கு மால் துடைத்தார் வெற்பு!
தக்க மறையோர் நாவும் , தண் சாரலின் புடையும்
மிக்க மனு வளையும் வேங்கடமே - அக்கு அரவம்
பூண்டார்க்குமாறுடைத்தார் பொங்கு ஓத நீர் அடைத்து
மீண்டார்க்குமாறுடைத்தார் வெற்பு
பதவுரை
பூண்டார்க்குமாறுடைத்தார் - பூண்டார்க்கு + மால் + துடைத்தார்
மீண்டார்க்குமாறுடைத்தார் - மீண்டு + ஆர்க்குமாறு + உடைத்தார்
மீண்டார்க்குமாறுடைத்தார் - மீண்டு + ஆர்க்குமாறு + உடைத்தார்
தக்க மறையோர் நாவும் தகுதியுள்ள அந்தணர்களின் நாக்கு
மிக்க மனு அளையும்சிறந்த மந்திரம் உச்சரிக்கும் இடமும் ,
தண் சாரலின் புடையும் குளிர்ந்த மலைச் சாரலின் பக்கங்கள்
மிக்க மனு வளையும்அதிகமான மனிதர்கள் வலம் செய்யும் இடமுமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
அக்கு அரவம் பூண்டார்க்கு எலும்பையும் , பாம்பையும் மாலையாக அணிந்த சிவனின்
மால் துடைத்தார் மயக்கத்தை நீக்கியவரும் ,
பொங்கு ஓத நீர் அடைத்து பொங்கும் அலைகளை உடைய கடலை அணை கட்டி
மீண்டு ஆர்க்குமாறு உடைத்தார் மீண்டும் ஆரவாரிக்கும்படி அதை உடைத்த திருமாலின்
வெற்பு திருமலை ஆகும்
V.Sridhar