6. திரு வேங்கட மாலை 076/104 : வேங்கடமே இன்று போ நாளை வா என்றான் பொருப்பு !
கிட்டு நெறி யோகியரும் கிள்ளையரும் தம் கூடு
விட்டு மறு கூடடையும் வேங்கடமே - எட்டு மத
மாவென்றுவந்தான் வர , நாளை வா இன்று
போவென்றுவந்தான் பொருப்பு
பதவுரை :
மாவென்றுவந்தான் - மா + வென்று + வந்தான்
போவென்றுவந்தான் - போ + என்று + உவந்தான்
போவென்றுவந்தான் - போ + என்று + உவந்தான்
கிட்டு நெறி யோகியரும் முக்தியை விரைவில் சேரும் யோகிகள்
தம் கூடு விட்டு தமது சரீரத்தை விட்டு
மறு கூடு அடையும் வேறு சரீரத்தை அடையும் இடமும்
கிள்ளையரும் கிளிகள்
தம் கூடு விட்டு தாம் வசிக்கும் கூண்டை விட்டு
மறுகு ஊடு அடையும் வீதிகளில் சேரும்
வேங்கடமே திரு வேங்கட மலையே
எட்டு மத மா எட்டு திக்கு யானைகளை
வந்தான் வர வென்ற ராவணன் போருக்கு வர
இன்று போ நாளை வா இன்று போய் நாளை வா
என்று உவந்தான் என்று சொல்லி அவனிடம் அன்பு காட்டிய திருமாலின்
பொருப்பு திருமலை ஆகும்
V.Sridhar