Information
6. திரு வேங்கட மாலை 073/104 : வேங்கடமே வாள் கலியன் பாட்டினார் சார்பு!
தாள் கமலப் பூஞ்சுனைக்கும் சாயகங்கள் கொய்து திரி
வேட்கும் வடிவு இல்லா வேங்கடமே - வாள் கலியன்
நாவியப்பாம்பாட்டினார் நச்சு மடுவைக் கலக்கித்-
தாவியப்பாம்பாட்டினார் சார்பு
பதவுரை :
நாவியப்பாம்பாட்டினார் - நா + வியப்பு + ஆம் + பாட்டினார்
தாவியப்பாம்பாட்டினார் - தாவி + அப்பாம்பு + ஆட்டினார்
தாள் கமலப் பூஞ்சுனைக்கும் நாளம் உடைய தாமரை இருக்கும் அழகிய சுனைகள்
வடிவு இல்லா நீர் குறைவு இல்லாத இடமும்
சாயகங்கள் கொய்து திரி வேட்கும் மலர் கொய்து திரியும் மன்மதன்
வடிவு இல்லா உருவம் இல்லாது இருக்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
வாள் கலியன் வாளை ஏந்திய திரு மங்கை ஆழ்வாருடைய
நா வியப்பு ஆம் பாட்டினார் நாவிலிருந்து வரும் அதிசயப் பாடல்களை உடையவரும்
தாவி நச்சு மடுவைக் கலக்கி நஞ்சுள்ள மடுவில் குதித்துக் கலங்கச் செய்து
அப்பாம்பு ஆட்டினார் காளியன் எனும் அப்பாம்பை ஆட்டியவரும் ஆன திருமால்
சார்பு சார்ந்திருக்கும் இடம் ஆகும்
V.Sridhar