Information
6. திரு வேங்கட மாலை 072/104 : வேங்கடமே நல் தாயினும் இனியான் நாடு !
வாழ் அம்புலியினொடு வான் ஊர் தினகரனும்
வேழங்களும் வலம் செய் வேங்கடமே - ஊழின் கண்
சற்றாயினுமினியான் சாரா வகை அருளும்
நற்றாயினுமினியான் நாடு
பதவுரை :
சற்றாயினுமினியான் - சற்று + ஆயினும் + இனி + யான்
நற்றாயினுமினியான் - நல் + தாயினும் + இனியான்
வாழ் அம்புலியினொடு அழிவின்றி வாழும் சந்திரனும் ,
வான் ஊர் தினகரனும் வானில் இயங்கும் சூரியனும்
வலம் செய்பிரதக்ஷிணம் செய்யும் இடமும்
வேழங்களும் யானைகளும்
வலம் செய்வலிமை அடையும் இடமுமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
இனி யான் இனிமேல் நான்
ஊழின் கண் கரும வசத்தில்
சற்று ஆயினும் சாரா வகை சிறிது கூட சிக்காதபடி
அருளும் எனக்கு கருணை செய்யும்
நல் தாயினும் இனியான் நல்ல தாயினை விட இனியவனான திருமாலின்
நாடு திருத்தலம்ஆகும்
V.Sridhar