Information
6. திரு வேங்கட மாலை 071/104 : வேங்கடமே வைகுந்த நாட்டான் வரை !
கண்டு அடைந்த வானவரும் , காந்தள் குல மலரும்
விண்டவிர்ந்து நிற்கின்ற வேங்கடமே - தொண்டர்க்கு
வைகுந்தநாட்டான் ; மருவு உருவம் ஈந்து வைக்கும்
வைகுந்தநாட்டான் வரை
பதவுரை :
வைகுந்தநாட்டான் - வை + குந்த + நாட்டான்
வைகுந்தநாட்டான் - வைகுந்தம் + நாட்டான்
கண்டு அடைந்த வானவரும் திருமலையின் அழகைக் கண்டு அங்கு வந்த தேவர்கள்
விண் தவிர்ந்து நிற்கின்ற தேவ லோகத்தை விட்டு நிற்பதற்குக் காரணமானதும்
காந்தள் குல மலரும் சிறந்த சாதிக் காந்தள் மலர்கள்
விண்டு அவிர்ந்து நிற்கின்ற விரிந்து மலர்ந்து நிற்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
தொண்டர்க்கு தன் அடியார்களுக்கு
வை குந்தம் நாட்டான் கூரிய சூலத்தை எமன் நாட்டாதபடி அருள்பவனும் ,
மருவு உருவம் ஈந்து தனது உருவத்தை அவ்வடியார்களுக்குக் கொடுத்து
வைக்கும் வைகுந்த நாட்டான் ஸ்ரீ வைகுண்டத்தில் வைப்பவனுமான திருமாலின்
வரை திரு மலை ஆகும்
V.Sridhar