Information
6. திரு வேங்கட மாலை 068/104 : வேங்கடமே மெய் தவள சங்கு எடுத்தார்வாழ்வு !
கோங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் கரியும்
வேங்கைக்கோடாதரிக்கும் வேங்கடமே - பூங் கைக்குள்
மெய்த்தவளச்சங்கெடுத்தார் மேகலை விட்டு அம கை தலை
வைத்தவளச்சங்கெடுத்தார் வாழ்வு
பதவுரை :
மெய்த்தவளச்சங்கெடுத்தார் - மெய் + தவள + சங்கு + எடுத்தார்
வைத்தவளச்சங்கெடுத்தார் - வைத்தவள் + அச்சம் + கெடுத்தார்
கோங்கைக் கோடு ஏறி கோங்கு மரத்தின் கிளைகளின் மேல் ஏறி
குலுக்கும் அரியும் அதனை அசைக்கும் குரங்கு
வேங்கை கோடு ஆதரிக்கும்அருகில் உள்ள வேங்கை மரக்கிளையை பிடிக்கும் இடமும்
கரியும் யானைகள்
வேங்கைக்கு ஓடாது அரிக்கும் புலிகளுக்கு அஞ்சி ஓடாமல் அவற்றை அழிக்கும் இடமுமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
பூங் கைக்குள் அழகிய தனது கையில்
மெய் தவளச் சங்கு எடுத்தார் வெண்மையான உருவம் உள்ள சங்கம் ஏந்தியவரும் ,
மேகலை விட்டு தனது ஆடையை விட்டு விட்டு
அம் கைதலை வைத்தவள் கைகளை தன் தலை மேல் வைத்து வணங்கிய திரௌபதியின்
அச்சம் கெடுத்தார் பயத்தைக் கெடுத்தவருமான திருமால்
வாழ்வு வாழுமிடம் ஆகும்
V.Sridhar